○வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற சிந்தனை உனக்குள் வந்து விட்டாலே பொறுப்பு என்பது தன்னாலே அமைந்து விடுகிறது.
○லட்சியம் என்ற ஒன்று எதுவும் இல்லாதவன் இந்த உலகை ஜெயிக்க தகுதி இல்லாதவன்.
○பணம், பொருள் என இந்த இரண்டுமே வாழ்க்கையில் மனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் குணத்தையே மாற்றும் வல்லமை படைத்தது.
○உணர்ச்சிகள் என்ற ஒன்றை உனக்கு அடக்க தெரிந்தால் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்ட நஷ்டங்களாலும் உன்னை ஒன்றும் செய்து விட முடியாது.
○வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதே உன் மனநிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்.
○இன்பமே கடைசி வரைக்கும் நிலைக்க வேண்டுமென்று எண்ணாதே அனைத்தும் மாறும் நீ கண்ணிமைக்கும் நேரத்தில். இன்பம் என்றுமே என்னை விட்டு நீங்க கூடாதென எண்ணி வாழ்வது கூட மனதில் இன்பம் நம்மை விட்டு நீங்கி விடுமோ என்று நீ நினைக்கும் ஒரு துன்பம் தான்.
○நேர்மையான குணம் கொண்டவர்களுக்கு என்றுமே இந்த உலகில் மதிப்பு இல்லை தான் ஆனால் நிற்சயமாக உன் நல்ல மனதுக்காக அந்த இறைவனின் பரிசு கட்டாயம் கிடைக்கும்.
○நேரம் வரட்டும் செய்யலாம் என்று காத்திருப்பதும் காலம் வந்தால் எல்லாம் தன்னாலே கிடைக்கப்பெறும் என்ற மூட நம்பிக்கையோடு கனவு காண்பதும் ஒருபோதுமே உன் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல.
○பகையை வளர்க்காமல் எல்லோரிடமும் பொறுத்து போகிறவர்களுக்கே இங்கு கோமாளி, முட்டாள், பிழைக்க தெரியாதவன் என்ற பெயர் கிடைக்கிறது.
○வாழ்க்கை என்பது எப்போதும் உறவுகளிடம் பூ போல அழகானதாக அமைந்து விட்டால் சண்டை, சச்சரவுகள் எல்லாம் பனி போல விலகி விடும்.
○அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால் உனக்கென சிறந்த வழியை நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது உனக்கு ஒரு கிடைக்காத பொக்கிஷமே.
○பிறரை பற்றி விமர்சிக்கும் முன்னர் நாம் அவர் இடத்தில் இருந்திருந்தால் சரியாக நடந்து கொண்டிருப்போமோ என்று யோசித்து பாருங்கள் அதன் பின்னர் உங்கள் மனம் சொல்லும் பிறரை பற்றி விமர்சிக்க உமக்கு தகுதி இருக்கிறதா என்று.
No comments:
Post a Comment