Sunday, January 17, 2021

மன்ற நிர்வாகிகள் ஏமாற்றம்: கலைகிறது ரஜினி கூடாரம்.

 ரஜினி மக்கள் மன்றத்தில், செல்வாக்கு மிகுந்த மாவட்ட செயலர்களாக இருந்த, மூன்று பேர், தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். கட்சி துவங்குவார் என எதிர்பார்த்த, அவரது ரசிகர்களின் கனவு கலைந்துள்ளதால், ரஜினி கூடாரம் காலியாகிறது.


வரும் சட்டசபை தேர்தலில், நடிகர் ரஜினி கட்சி துவக்கி, தி.மு.க., ஆட்சிக்கு வருவதை தடுப்பார் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் இருந்தது. ஆனால், உடல் நலத்தை காரணம் காட்டி, கட்சி துவங்கப் போவதில்லை என, அறிவித்து விட்டார். தேர்தல் நேரத்தில், ரஜினியின் ஆன்மிக அரசியல் ஆதரவு, பா.ஜ., கூட்டணிக்கு கிடைக்கும் என, அக்கட்சியினர் எதிர்பார்த்தனர்; அதற்கும் வாய்ப்பு குறைந்துள்ளது.
மன்ற நிர்வாகிகள் ஏமாற்றம்: கலைகிறது ரஜினி கூடாரம்

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி, அவரது ரசிகர்கள், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்கும் ரஜினி செவிசாய்க்கவில்லை. மேலும், 'இது போன்ற போராட்டங்கள் வாயிலாக, என்னை காயப்படுத்தாதீர்கள்' என, அறிக்கை வெளியிட்டார்.இதையடுத்து, தமிழகம் முழுதும் உள்ள மன்ற நிர்வாகிகள், இனிமேலும் ரஜினிக்காக காத்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். அதனால், மாற்று வழிகளை ஆராயத் துவங்கி உள்ளனர்.

இதையறிந்து, செல்வாக்குடன் உள்ள மன்ற நிர்வாகிகளை, தி.மு.க.,வுக்கு இழுக்கும் பணியில், 'ஐபேக்' தரப்பினர் ஈடுபட்டுஉள்ளனர். ரஜினிக்காக, தேர்தல் கமிஷனில், கட்சி பெயரை பதிவு செய்து வைத்திருந்த, துாத்துக்குடி மாவட்ட மன்ற செயலர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட செயலர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலர் ஆர்.கணேசன். தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், ராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலர் எஸ்.முருகானந்தம் ஆகியோர், ஸ்டாலின் முன்னிலையில், நேற்று தி.மு.க.,வில் இணைந்தனர்.

ரஜினி மன்ற நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில், மற்ற கட்சிகளும் இறங்கியுள்ளதால், ரஜினி கூடாரம் கலையத் துவங்கியுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...