Sunday, January 17, 2021

அழகிரி கட்சி துவக்கம் எப்போது?

 டில்லியில், பிரதமர் மோடி - முதல்வர் பழனிசாமி., சந்திப்புக்கு பின், கட்சி துவக்கும் அறிவிப்பை வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி திட்டமிட்டுஉள்ளார்.'


அழகிரி கட்சி துவக்கம் எப்போது?
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைந்து, சட்டசபை தேர்தலை சந்திப்போம்' என, அழகிரியிடம், அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். டில்லியில், பிரதமர் மோடியை, முதல்வர் பழனிசாமி., சந்தித்து பேசிய பின், கட்சி துவக்கும் முடிவை அறிவிக்க, அழகிரி விரும்புகிறார்.அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், சரிவர தொகுதி பங்கீடு கிடைக்க வில்லை என்றால், தனித்து போட்டியிட்டு, 85 -100 தொகுதிகளில், தன் ஆதரவாளர்களை நிறுத்த, அழகிரி திட்டமிட்டுள்ளார்.

வெற்றி பெற முடியவில்லை என்றாலும், தொகுதிக்கு, 3,000 முதல், 5,000 என, தி.மு.க., ஓட்டுகளை பிரிப்பர். இதனால், ஸ்டாலினின் முதல்வர் கனவு, கனவாகவே இருக்கும் என, அழகிரி கருதுகிறார். பொங்கல் விழா மற்றும் திருமண நிகழ்ச்சிகளில், தற்போது அழகிரி பங்கேற்று வருகிறார்.

வரும், 20 அல்லது 21ம் தேதியில், புது கட்சி துவக்கும் தேதி அறிவிப்பு குறித்தும், 'கலைஞர் தி.மு.க., அல்லது தலைவர் கலைஞர் தி.மு.க.,' என்ற பெயர்களில், ஒன்றை தேர்வு செய்வது குறித்தும், ஆதரவாளர்களிடம் அழகிரி ஆலோசனை நடத்துகிறார்.இம்மாதம், 30ம் தேதி, தன் பிறந்த நாளை, நலத்திட்ட உதவி வழங்கும் விழாவாக கொண்டாட வேண்டும் என்றும், ஆடம்பர விழாவாக இருக்கக் கூடாது என்றும், ஆதரவாளர்களுக்கு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...