Friday, January 15, 2021

கேட்டதை தரும் சோடச கலை நேரம்..

  13-01-2021 புதன்கிழமை காலை 10-04 முதல் 12-04 மணிவரை

அமாவாசை சோடசகலை நேரம்.
அமாவாசை, பௌர்ணமி ஆகிய திதிகளின் முடிவுக்கு ஒரு மணி நேரம் முன்னும்
ஒரு மணி நேரம் பின்னும் உள்ள இரண்டு மணி நேரம் சோடசக்கலை நேரம்.
இந்த இரண்டு மணி நேரத்தில்
ஏதாவது ஐந்து நொடிகள் மட்டும் தியான, ஜபத்தில் இருப்பவரின் கோரிக்கையை மும்முர்த்திகள் அருள் பாலித்து நிறைவேற்றுவார்கள்.
அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும்.
கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்
பல கோரிக்கையே வைக்க வேண்டாம்.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
இதே போல் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும் போதும் செய்ய வேண்டும்.
மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது அவரது கர்மப் பலனைப் பொருத்து உடனடியாகவோ சில மாதங்களிலோ கோரிக்கை நிறைவேறும்.
தியானம்,ஜபத்தை வீட்டில் அல்லது கோவிலில்
வடகிழக்கை பார்த்த வண்ணம்
ஏதேனும் தரை விரிப்பிலோ, மாமரபலகையால் ஆன ஆசனத்தில் அமர்ந்து செய்ய வேண்டும்.
வயிறு காலியாக இருக்க வேண்டும்.
அன்று சைவ உணவு உண்ண வேண்டும்.
உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது.
மன கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி வைத்து இருக்க வேண்டும்.
உங்களுக்கு தேவைப்படும் ஒரே ஒரு கோரிக்கையை நினைத்த வண்ணம் கண்களை மூடி தியானம் செய்தோ
உங்களின் தசா புத்திக்கு ஏற்ற தெய்வத்தின் காயத்திரி மந்திரம் அல்லது இஷ்ட தெய்வ துதியை துதித்து உங்களுக்கு வேண்டிய கோரிக்கையை நிறவேற்றிக்கொள்ளுங்கள்.
நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...