Friday, January 15, 2021

நீ எங்கள் வழிபாட்டில் தலையிடாதே.....

 இத பாரு சூரியனையும், மாட்டையும் கும்பிடணும் - அதுதான் பொங்கல்!

சும்மா 'பகுத்தறிவுப் பொங்கல்'- 'படையல் இல்லாப் பொங்கல்- 'சமத்துவப் பொங்கல்'-....
இந்த உருட்டல் எல்லாம் வேண்டாம்!
"பொங்கல் எங்களது பண்டிகை அல்ல - சூரியனையோ காளை மாட்டையோ, பசு மாட்டையோ கும்பிடுவது எங்கள் வழிபாட்டு முறை இல்லை - நாங்கள் உங்களிலிருந்து வேறுபட்டவர்கள்"- என்று வெளிப்படையாகச் சொல்!
WE ARE NOT ONE AMONG YOU; WE BELONG TO A DIFFERENT FAITH; WE ARE THE 'OTHER PEOPLE'- என்று வெளிப்படையாகச் சொல்!
உன்னுடைய "மாற்று நம்பிக்கை"- யை மத நல்லிணக்கம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் அதற்குரிய வகையில் புரிந்து கொண்டு உன்னை ஒரு "மாற்று மத" நண்பனாக ஏற்கிறோம்!
அதை விட்டுவிட்டு எங்கள் மத வழிபாட்டில் புகுந்து அதை உன் இஷ்டத்துக்கு வளைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம்!
நீ பொங்கலே கும்பிட வேண்டாம் - கும்பிடாமலே இரு - அதனால் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை!
ஆனால் 'பொங்கலைக் கொண்டாடுவேன் - ஆனால் சூரியனை வணங்குவதோ, மாட்டை வணங்குவதோ செய்ய மாட்டேன்'- என்று சொல்லிக் கொண்டு உள்ளே வராதே!
உன்னுடன் அப்படிக் கை குலுக்கி - எங்கள் வழி பாட்டு முறைகளை நீர்த்துப் போகச் செய்து - மாமன், மச்சான் உறவு கொண்டாட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை!
நீ 'எங்களில்' ஒருவனல்ல - 'எங்களோடு' ஒருவன் - புரிந்து கொள்!
நீ நீயாக இரு - உனது வழிபாட்டு முறை எதுவோ அதில் திடமாக இரு - அந்த அளவில் உனது நம்பிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம்.
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் - பொங்கல் உட்பட எந்தத் திருநாளையும் அவற்றுக்குரிய வழிபாட்டு முறைப்படிதான் நாங்கள் கொண்டாடுவோம்!
சூரியனுக்குப் படையல் தந்தே ஆக வேண்டும்!
மாட்டை வணங்கியே ஆக வேண்டும்!
இந்த மரபில் மாற்றம் செய்ய எங்களுக்கே அதிகாரம் இல்லாத போது...
உனக்கு எவன் அதிகாரம் கொடுத்தான் - உள்ளே வந்து உருவ வழிபாட்டைக் குறை கூறுவதற்கு?
எப்போது ஒரு அந்நிய தேச மண்ணிலிருந்து வந்த இறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு எங்களிடமிருந்து விலகிச் சென்று விட்டாயோ...
அன்றிலிருந்தே நீ எங்களில் ஒருவனாக இருக்கும் தகுதியை விட்டுக் கொடுத்து விட்டாய்!
இப்போது நீ எங்களில் ஒருவன் அல்ல!
எங்களுடன் இந்நாட்டில் குடியுரிமை பெற்று - வசிக்கும் இன்னொருவன் - அதாவது "மாற்று மதத்தைச் சேர்ந்த"- சக பிரஜை நீ!
இருவரும் பகை இன்றி சக குடிமக்களாக வாழ வேண்டுமா?
ஆம் - நிச்சயம் அப்படித்தான் வாழ வேண்டும்!
நாம் இருவரும் சக குடிமக்களாக ஒருவர் மீது ஒருவர் துவேஷம் பாராட்டாமல் வாழ வேண்டுமா?
ஆம் - நிச்சயம் - அப்படித்தான் வாழ வேண்டும்!
சமூகத்தில் நல்லிணக்கத்தைக் காப்பதில் உனக்கும் எனக்கும் சம பங்கு உண்டா?
ஆம் - இருவருக்கும் அந்தப் பொறுப்பு உண்டு!
அந்த எல்லையோடு நில் - நீ நீயாக இரு - நாங்கள் நாங்களாக இருக்கிறோம்!
ஒவ்வொரு இந்துவும் எனது சகோதரன் - ஒவ்வொரு 'நீ' யும் எனது சக குடிமகன்.
(Co-Citizen)
அந்நிய மதத்துக்குப் போய்விட்ட நீ - ஒரு கௌரவமான சக பிரஜையாக இருக்கலாம் எனக்கு!
ஆனால் எனது மத நம்பிக்கைகளை, சடங்கு வழிபாட்டு முறைகளை திருத்தி உன் இஷ்டத்துக்கு வழிபடும் திருத்தல்வாதப் புரட்டுக்கு நாங்கள் உடன்பட மாட்டோம்!
Image may contain: 1 person, beard

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...