Friday, January 15, 2021

இதனால், தி.மு.க.,வுக்கு என்ன பிரச்னை வந்து விட்டது; உங்கள் வேலையை பாருங்கள் சார்....

 சேலம் பெரியார், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் ஓய்வுபெற்று, பொறுப்புகளை ஒப்படைத்து, அவர்களுக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்ட பிறகு, அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து கவர்னர் பிறப்பித்துள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

இதனால், தி.மு.க.,வுக்கு என்ன பிரச்னை வந்து விட்டது; உங்கள் வேலையை பாருங்கள் சார்...

- தி.மு.க., துணைப் பொதுச் செயலர் பொன்முடி


'இதனால், தி.மு.க.,வுக்கு என்ன பிரச்னை வந்து விட்டது; உங்கள் வேலையை பாருங்கள் சார்...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., துணைப் பொதுச் செயலர் பொன்முடி அறிக்கை.



விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நடவடிக்கையை உளவுத்துறை கண்காணிக்க வேண்டும். கிறிஸ்துவ, முஸ்லிம் நாடுகளில் இருந்து பெரிய நிதி அவர்களுக்கு வருகிறது. அதை வாங்கி கொண்டு, இங்கு தேர்தலின்போது, கலவரத்தை உருவாக்க சதி செய்கின்றனர்.
- ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன்


'உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, ஒரு கட்சியை, அவதுாறாக சித்தரிப்பதா; இதை எல்லாம் மத்திய அரசு கண்காணித்து கொள்ளும்...' என, காட்டமாக சொல்லத் தோன்றும் வகையில், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் பேட்டி.



ஹிந்து சமய அறநிலையத் துறையில், பல்வேறு ஊழல்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஹிந்துக்களுக்கு எதிராக மட்டுமே, அறநிலையத் துறை செயல்படுகிறது. ஹிந்து கோவில்களை விட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்.
- பா.ஜ., முன்னாள் தேசிய செயலர், எச்.ராஜா


latest tamil news




'மதச் சார்பற்ற நாட்டில், பிற மதங்களில் அரசு தலையிடாத போது, ஹிந்துக்கள் விவகாரத்திலும் தலையிடக் கூடாது என்கிறீர்கள்; அப்படித் தானே...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி.



அறநிலையத் துறை உருவாக்கப்பட்டபோது 10 ஆயிரத்திற்கும் குறைவான கோவில்களே இருந்தன. தற்போது 40 ஆயிரம் கோவில்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஆக்கிரமிப்பில் இருந்த, 1 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
- அமைச்சர் ராமச்சந்திரன்


'அறநிலையத் துறை நிர்வாகத்தில், அழிந்த எத்தனை கோவில்கள் சீரமைக்கப்பட்டுள்ளன சொல்லுங்கள் பார்ப்போம்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி.



ரேஷன் கடைகளில், பனை பொருட்களை விற்பது குறித்து பரிசீலிப்பதாக, முதல்வர் அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். அதேபோல, உடலுக்கு நன்மை தரும் தவிட்டு அரிசியை, ரேஷன் கடைகளிலும், சத்துணவு பள்ளிக் கூடங்களிலும் வழங்க வேண்டும்.
- காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன்


'நல்ல விஷயத்தை, தமிழக அரசு செய்துள்ளது. நீங்கள் எதிர்பார்ப்பதையும் செய்யும்...' என, கூறத் தோன்றும் வகையில், காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் அறிக்கை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...