தேர்தலுக்கு தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளை மாற்றுவது அரசியல் கட்சிகளுக்கு புதிதில்லை. இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.
ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சி, தனது நிலைப்பாடுகளை அழுத்தம் திருத்தமாக அறிவிப்பதும், பின்னர் அதே நிலைப்பாடுகளை மாற்றுவதும் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ‘எனது குடும்பத்தில் யாரும் கட்சிப் பதவிக்கு வர மாட்டார்கள், வாய்ப்பு கிடைத்தால் தலித் ஒருவரையே முதல்வர் ஆக்குவோம்..’ உள்ளிட்ட சில வாக்குறுதிகள் ஆரம்பத்தில் டாக்டர் ராமதாஸால் முன்வைக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டவை!
கடந்த 2016 சட்டப் பேரவை தேர்தலில் தனது மகனையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்...
கடந்த 2016 சட்டப் பேரவை தேர்தலில் தனது மகனையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்...
அதேபோல திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை என கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பேசி வந்ததும் இனி பழங்கதை ஆகிவிடும் போல! பிப்ரவரி 4-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, ‘கூட்டணி குறித்து திமுக, அதிமுக.விடம் பேசி வருகிறோம்’ என கூறினார்
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்கிற ராமதாஸின் நிலைப்பாடு என்ன ஆனது? என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, எதிரெதிர் நிலைப்பாடுகளைக் கொண்ட திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் பேசி வருவதாக அன்புமணி பேசியது...
இவர்கள் வேட்டிக்கட்டிய விபச்சாரிகள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார் கள்...
இவர்கள் வேட்டிக்கட்டிய விபச்சாரிகள் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார் கள்...
மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் செயல்பாடுகள் மீது, கட்சித் தலைமை அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் தொகுதியில் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளிலும், கட்சி வளர்ச்சிக்காவும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்கும் வகையிலும், அவர் முனைப்புடன் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளில் தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் அவர் செயல்படவில்லை என்றும், அவர் கட்சிக்கு அழைத்து வந்து பதவி கொடுத்தவர் எவரும் சமுதாயத்தில் முன்னுதாரணமான நபர்கள் கிடையாது என்ற தகவல், மத்திய தலைமைக்கு மிக நீண்ட நாட்களுக்கு முன்னரே சென்றுவிட்டதாம்!
மேலும், கட்சியில் நீண்ட நாட்களாக உழைத்து வந்த உண்மையான விசுவாசிகளின் குரல்களுக்கு, பொன்னார் என்றுமே காது கொடுத்தது கிடையாது என்பதும், அத்தகையவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு வருகிறார்கள் என்றும், மத்தியத் தலைமைக்கு உள்ளூர்வாசிகள் தெளிவான புகார்களாக அளித்து, அதை அவர்களும் ஏற்றுக்கொண்டு விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன், அவர் என்றுமே தனிப்பட்ட உறவினை மட்டுமே நிர்வகித்து வருகிறார் என்பதும், கட்சி நலன் சார்ந்து, கொள்கையை முன்னிறுத்தி முக்கிய விஷயங்களில், பிரச்னைகளில் அவர் கருத்து கூறியதில்லை என்பதையும், மத்திய தலைமை கவனித்து வந்துள்ளதாம். அதுமட்டுமின்றி, அந்த அதிருப்தி காரணமாக அவரை தேர்தலில் நிறுத்த வேண்டாம் என ஓர் கட்டத்தில் முடிவெடுத்துள்ளதாகக் கூறிப்படுகிறது.
எனினும்,கடந்த லாேக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் அவர் என்பதாலும், அவர் சார்ந்த நாடார் சமுதாயத்தின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டாம் என்ற நோக்கத்திலும், அவருக்கு இந்த முறையும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியே அவர் மீண்டும் போட்டியிட்டாலும், அவருடைய சொந்த தொகுதி மக்களிடையிலேயே அவர் மீது அதிருப்தி நிலவி வருவதால், ராதாகிருஷ்ணன் மீண்டும் வெற்றி பெறுவது மிகவும் சிரமம் என்றே மத்திய உளவுத்துறை மேற்கொண்ட மூன்று சர்வே முடிவுகளிலும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, அவர் தற்போது எம்.பி.,யாக உள்ள கன்னியாகுமரி தொகுதியில், கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிற்க விருப்பப்படுவதாகதவும், அவ்வாறு நின்றால் சுலபமாக வென்றுவிடலாம் என அவர் கருதுவதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால், மத்தியத் தலைமை, ஜன சங்க காலம் துவங்கி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிப் பணி ஆற்றி வரும், மிக எளிமையான தலைவரான எம்.ஆர்.காந்தியை, கன்னியாகுமரியில் களம் இறக்கவும், திட்டமிட்டுள்ளதாம்.
எனவே, ‛வடை போச்சே’ என்ற நிலை வந்துவிடக்கூடாது என்பதில், பொன்னார் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன...!
கட்சியின் மாநில தலைவர் என்ற அந்தஸ்தை பல வருடங்களாக தக்க வைத்திருக்கும் பெண் தலைவர். தமிழகத்தில் எந்த நிகழ்வு நடந்தாலும், விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல், உடனடியாக தைரியமாக கருத்து கூறும் அவரது செயல்பாட்டால், தமிழகத்தில் கட்சி உயிர்ப்புடன் இருப்பதாக, கட்சி மேலிடத்திற்கு தகவல் போயிருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, அவரின் சொந்த விருப்பம் மற்றும் அவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற வகையில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் தமிழிசை களம் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி, மாேடி என்ற செல்வாக்கு நிறைந்த தலைவரின் பின்னணி, பா.ஜ., என்ற தேசிய கட்சியின் சின்னம் என, பல தரப்பிலும் தனக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதால், தமிழிசை நிச்சயம் இந்த வாய்ப்பை தவறவிட மாட்டார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே போல், தி.மு.க., சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் எந்த தொகுதியில் களம் இறக்கப்பட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக, ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளாராம்.
கடந்த தேர்தலின் போதே, அவர் சீட் பெற எவ்வளவோ முயன்றும், தமிழக பாரதிய ஜனதா தலைவர்களின் உள்ளூர் அரசியல் காரணமாக அவரது முயற்சிகள் தோல்வி அடைந்ததால், இம்முறை மத்திய கமிட்டியிடம் நேரில் பேசி எப்படியும் சீட் பெற்று விடுவேன் என அவரது ஆதரவாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளாராம்.
துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தியின் ஆஸ்தான சிஸ்யராக கருதப்படும் இவர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
தேர்தல் செலவுகள் குறித்து எந்த கவலையும் இல்லாததால், இம்முறை எப்படியும் சீட் பெற்று, தயாநிதி மாறனுக்கு ஓர் பெரும் நெருக்கடியை எம்.ஆர் வெங்கடேஷ் ஏற்படுத்துவார் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக பா.ஜ.,வில், ஊடக வெளிச்சம் படாத மூத்த தலைவர்களில் குப்புராமுக்கு முக்கிய இடம் உண்டு. கடந்த முறை, ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ.,சார்பில் போட்டியிட்டு, ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்ற குப்புராம் மீண்டும் அதே தொகுதியில் நிறுத்தப்படுகிறாராம்!
கடந்த முறை, மாேடியா, லேடியா என்ற போட்டியால், ஜெ., அலையில், அ.தி.மு.க., வேட்பாளர் அன்வர் ராஜா ராமநாதபுரம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். லோக்சபாவில், முத்தலாக்கை ஒழிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அன்வர் ராஜா தனிப்பட்ட முறையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒட்டுமொத்த இஸ்லாமிய பெண்களின் நலன் கருதி இயற்றப்பட்ட இந்த சட்ட திருத்தத்தை, அன்வர் ராஜா நாடாளுமன்றத்தில் பேசிய அவரது சொந்த கருத்துகள் அதிமுகவின் நிலைப்பாடக வெளிப்பட்டதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர் மீது மிகுந்த அதிருப்தி கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், கட்சித் தலைமையை மீறி மத்திய அரசுக்கு எதிராக தீவிரமாக உரையாற்றியதை மத்திய பாரதிய ஜனதா சாதரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து எடப்பாடியிடமே மத்திய தலைமை சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு, அவருக்கு அடுத்த முறை வாய்ப்பு வழங்கக்கூடாது என்று முதல்வரிடம் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும். அதற்கு அவரும் இசைந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் அன்வர் ராஜா சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டாலும் அவர் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தனிப்பட்ட செல்வாக்கு கொண்டவரல்ல என்று தனிப்பட்ட முறையில் எடப்பாடி கருதுவதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
எனவே, இம்முறை, அன்வர் ராஜாவுக்கு சீட் வழங்காமல், அதை பா.ஜ.,வுக்கு விட்டுக் கொடுக்க எடப்பாடி பழனிசாமி துணிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, ராமநாதபுரம் தொகுதி, பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் ஒருவரான குப்புராமுக்கு ஒதுக்கப்படுவது உறுதியாகிவிட்டதாகவே பேசப்படுகிறது.
அதுமட்டுமின்றி, நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்தியத் தலைமையினால் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த 8ஆம் தேதி ராமநாதபுரத்துக்கு நேரடியாக வருகை புரிந்து தேர்தல் பணிகளைத் தொடங்கி வைப்பதாக இருந்தது. காரணம் அறிவிக்கப்படாமல் அவரது வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அக்கட்சியினருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, வரும், 22ல், ராமநாதபுரத்துக்கு நேரடியாக வருகை புரிந்து தேர்தல் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். எது எப்படியோ, தமிழகத்தில், பா.ஜ.க., காலூன்ற, படு தீவிரமாக வேலைகள் நடைபெறுவது அந்த கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக, கட்சித் தொண்டர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்....
பார்க்க லாம் என்ன நடக்கிறது என்று...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.
பார்க்க லாம் என்ன நடக்கிறது என்று...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.
#குதிரை_தொடர்ந்து_ஓடும்.........>>>
No comments:
Post a Comment