தமிழக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2019 -20 ம் நிதியாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் கூறினார். மேலும், விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம், நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். ஆயுள் காப்பீடு மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
வறுமை ஒழிப்பு திட்டங்களுக்காக ரூ.1,031 கோடியும், கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 1 லட்சம் வீடுகள் கட்ட ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சமூக பாதுகாப்பு உதவித்தொகை திட்டத்திற்கு ரூ.3,958 கோடி. 2,000 மின்சார பஸ்கள் வாங்கி, சென்னை, மதுரை, கோவையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கூறப்பட்டு உள்ளது.
ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் கலை அறிவியல் கல்லூரி துவக்கப்படும் என தமிழக பட்ஜெட் உரையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது :
* 2019 -20 ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.16,315 கோடியாக குறையும்.* வரி வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும்.* தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும்.* மாநில வரி வருவாய் வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும்.
* ஜிஎஸ்டி வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது * ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மத்திய அரசிடம் இருந்து இதுவரை வரவில்லை.* தமிழகத்தில் தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.1,42,267 ஆக உயர்ந்துள்ளது.

கலாம் பெயரில் கல்லூரி

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு
பள்ளி கல்வித்துறை - ரூ.28.757 கோடிஉயர்கல்வித்துறை - ரூ.4,584 கோடிசிறுபான்மை நலத்துறை - ரூ.14.99 கோடி நீதித்துறை- 1,265 கோடிபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை- ரூ.911.47 கோடிசுகாதாரத்துறை- ரூ.12,563 கோடி.தமிழ் வளர்ச்சி துறை- ரூ.54 கோடிசத்துணவு திட்ட செலவுக்கு ரூ.1772.12 கோடிநகராட்சிகளில் குடிநீர் வசதிக்கு ரூ.18,700 கோடிஉள்ளாட்சி துறை - ரூ18273 கோடிவீட்டு வசதித்துறை - 6265 கோடிவிவசாயத்துறை - ரூ.10,500 கோடிநெடுஞ்சாலை துறை - ரூ.13,605 கோடி.
No comments:
Post a Comment