அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் துவக்கப்பட உள்ளதாகவும், இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் கூறினார்.
மேலும், ஸ்ரீபெரும்பதூர் அருகே ஒரத்தூரில் அடையாற்றில் நீர்தேக்கம் அமைக்கப்படும். ரூ.2,350 கோடியில் கடலாடியில் 500 மெகாவாட் சூரிய மினசக்தி நிலையம் அமைக்கப்படும். 1125 கோடியில் தேனி, சேலம், ஈரோடு பகுதிகளில் மிதக்கும் சோலார் மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்.
கிராமப்புற கோயில்களுக்கான நிதியுதவி திட்டம், ஒரு கால பூஜை திட்டமும் செயல்படுத்தப்படும். மத்திய அரசு புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தின் பயன், அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெறும் வகையில் நடவடிக்கை. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க ரூ.148 கோடி ஒதுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment