Tuesday, February 5, 2019

தோற்றுப் போனேன் என்பதே அனுபவத்தின் வெற்றி தானே.

என்னைப் பொறுத்தவரை
வெற்றியில் கற்றுக் கொள்ளும் அறிவை விட ,
அனுபவங்களை விட தோல்வியில் நிறைய கற்றுக் கொள்ள முடியும்.
ஒரு ஞானியைப் போலே.
வெற்றியில் நம்மையே அறியாமல் ஒரு ஆணவம் ஒட்டிக் கொண்டிருக்கும்.
ஆனால்,
தோல்வியில் நம்மையும் அறியாமல் உள்மனம் பக்குவம் பெற்றிருக்கும்.
மண்ணை
தட்டினால் நினைத்தபடி உருவாகும் மண் பாண்டங்களைப் போலே.
தொடர்வெற்றிகள் ஒருவித மந்தகாசத்தையே தரும்.
தொடர்ந்த தோல்விகள் ஒருவித பண்பட்ட மனநிலையை பெறும்.
விரக்தி, பச்சாபதம், வெறுப்பு, இயலாமை, அவநம்பிக்கை , சந்தேகம், வேதனைகள்.
இவைகளெல்லாம் தோல்வியின் பின்னால் நம்மை துரத்தும் உயிர்க் கொல்லிகளாகும்.
அவைகளை பெரிதுபடுத்தாதே .
அந்த மனநிலை வரும்போது உணர்வுகளை கட்டுப்படுத்த அறிவை முன்னிறுத்து.
அந்த மனநிலையை மாற்ற கண்ணை மூடி நல்ல இசைகளைக் கேள்.
அலைபாய்ந்த மனம் மெல்ல அமைதி பெறும்.
விரக்தியுற்ற மனம் கடினத்தன்மையை இழந்து மிருதுவாக மாறும்.
அவநம்பிக்கை
அவமானம் என்பது நமக்கு வரும் தோல்வியில் இல்லை .
அதை நாம் கையாள்வதில் தான் இருக்கிறது.
தோல்வியே
உன் தோல்வியில் நான் துவண்டு போகவில்லை .
வெகுண்டு எழுவேன் .
உன்னை தோல்வியுறச் செய்யும் வரை .
உன்னிடம், உன்னால் நான் பெற்ற வலிகளே
என் வாழ்வின் நல்ல வழிகளாக எனக்கு வழி காட்டும்படி செய்வேன் .
தோல்வியே உன்னால் நான் பெற்ற ரணங்களே
அல்லவை எது?
நல்லவை எது?
என என்னை பகுத்துணரச் செய்யும்
பண்பட வைக்கும்.
ஏய் தோல்வியே
நான் உனக்கு நன்றி கூறுவேன்.
நீயே வெட்கப்படுமளவிற்கு
உன்னால் நான்
பக்குவம் பெற்றிருக்கிறேன் என்பதை உனக்கு புரியவைத்து ‌.
உன்னால் விரக்தியுற்று
தற்கொலை செய்து கொள்வதை விட
ஒரு பெரிய அவமானம் எதுவுமில்லை.
வெற்றி தரும் புகழை விட ,
ஒரு தோல்வி தரும் பாடம் .
வாழ்வை என்னவென்று புரியவைக்கும்.
தோல்விக்கு மட்டுமே மனிதனை உயர்த்தும் இலட்சியவெறியை விதைக்கும்
சக்தியுள்ளது.
ஒன்றே ஒன்று .
தோல்வி ஏற்படும் போது அதை நாம் கையாள்வதில் தான் இருக்கிறது
நம் உண்மையான பலமும், துணிவும்.
மனமே கலங்காதே .
தாங்க முடியாததென
அவரவர் சக்திக்கு மீறி இறைவன் எதையும் தருவதில்லை .
உணர்ச்சி மிகுதியில் அறிவை பயன்படுத்தி பண்படவே ஆறறிவு.
ஒன்றுமே செய்ய வேண்டாம்.
மனதிற்கு பிடிக்காத நிகழ்வுகளை சந்தித்த மனதிற்கு சகித்துக் கொள்ள முடியாத சூழலில்
அதை வெல்லும் சக்தி
இசைக்கு உண்டு.
துரோகத்தை, சோகத்தின் காயங்களைக் கூட
தூக்கி வீசி,
நம் மனதை
அமைதியுறச் செய்து
தாலாட்டி தூங்கச் செய்யும் வலிமை இசைக்கு உண்டு .
இசை என்பதே இறைவனல்லவா .
வீட்டிற்கு வீடு இருக்கும் வாசற்ப்படியை போல்
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் துன்பங்களிருக்கின்றன .
வாசற்ப்படியை தாண்டி போவதை போல்
மனதிலிருக்கும்
தோல்விகளின் துன்பத்தின் வலிகளை தாண்டி இறைவனின் பாதங்களில் சரணாகதி அடைந்து விடுங்கள்.
மனம் தடுமாறும் போதெல்லாம்
கண்ணை மூடி
மனம் குளிரும் நல்ல இசைகளை கேளுங்கள்.
இறைவனின் திருநாமங்களை
சொல்லுங்கள் .
கந்தர் சஷ்டி கவசத்தைப்
பாடுங்கள் அல்லது படியுங்கள் .
துரோகிகளை கூட மன்னிக்கும் மனதினை இறைவன் உங்களுக்கு அளிப்பான்.
ஆனால் ஒன்றை மட்டும் எப்போதும் மனதில் வையுங்கள் .
தீதும் நன்றும் பிறர் தர வாரா.....
நம் வினைகளே
நம் துன்பங்கள் .
நம் புண்ணியங்களே
நம் சந்தோஷங்கள் .
அதனால் முடிந்தவரை
பாவங்களை தவிர்த்து
புண்ணியங்களை வரவில்
வைக்க வாழ்க்கையை
நெறிப்படுத்தி வாழக் கற்றுக்
கொள்ளுங்கள் .
இதைத் தான் நம்
இந்துமத வேதங்களும் , புராணங்களும்,
இதிகாசங்களும்
நமக்கு உணர்த்துகின்றனர் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...