Thursday, February 7, 2019

'நான் விவசாயி முதலில்! நான் இந்தியன்!'

*நான் தலித் அல்ல இந்தியன் எங்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக்காதீர்கள் கல்லூரி விழாவில் திருமாவளவனுக்கு சவுக்கடி கொடுத்த இளைஞர்...*
சென்னை காட்டாங்குளத் தூரில் உள்ள SRM பல்கலைக் கழகத்தில், சிறந்த சாதனையாளர் களுக்கான
விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக SRM பல்கலைக் கழக நிறுவனர், பச்சைமுத்து, முன்னாள் IAS அதிகாரி ஃபெரோஸ் காந்தி, மற்றும் திருமாவளவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில், 'கோ -கோ' விளையாட்டிற்கு மாற்று வடிவம் கொடுத்த இந்தியர் என்ற முறையில், இளைஞர் ஒருவருக்கு விருது அறிவிக்கப்பட்டது
அவரை விழாவில் அடையாளப்படுத்தும் போது, தலித் இளைஞர் என்று அழைத்தனர்.
இதனால் சற்று ஆவேசம் அடைந்த அவர், 'நான் விவசாயி முதலில்!
நான் இந்தியன்!' என்றார்
அவர் அப்படிச் சொல்லும் போது, கல்லூரி அரங்கமே அதிர்ந்தது!!! தன்னைப் போன்ற இளைஞர்களை பலர் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் சொன்ன அவர், மறைமுகமாக திருமாவளவனுக்கு சவுக்கடி கொடுத்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத திருமாவளவனின் முகம் மாறியது
ஒவ்வொருவரும் தலித் என்ற அடையாளத்தை தூக்கி எறிந்து விட்டு, இந்தியன் ஆக இணைந்தால், நிச்சயம் வாழ்க்கையில் சாதிக்கலாம்
சாதியை வைத்து அரசியல் செய்பவர்களையும் ஒதுக்கலாம் என்று அவர் சொல்ல, கல்லூரி மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
மோடிக்கு எதிராக மக்களைத் திசை திருப்பி, அரசியல் ஆதாயம் அடையாளம் என்ற திருமாவளவனுக்கு கடுமையான சவுக்கடியை இளைஞர் கொடுத்திருப்பது ஒட்டு மொத்த தமிழர்களும் பிரிவினையில் விழாமல், இந்தியன் என்ற உணர்வு மீண்டும் அதிகரித்திருப்பதாகவே தோன்றுகிறது.
திருமாவளவனிடம் விருதைப் பெறாமல் அவர் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...