Monday, February 4, 2019

''கோதாவரி - காவிரி இணைப்பு''

💦💦💦
வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் நாட்டில் உள்ள பிரதான நதிகளை இணைக்கும் திட்டம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலேயே பரிந்துரைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற தற்போதைய மோடி அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
தென் மாநிலங்களின் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கோதாவரி - காவிரி ஆறுகளை இணைக்கும் திட்டத்தை, மத்திய அரசு, தயாரித்துள்ளது.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
💦💦
கோதாவரி - காவிரி நதி இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனினும், சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளதாக அந்த அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் தென் மாநில நதிகள் இணைப்பு திட்டத்தை இரு மாநில அரசுகளும் ஏற்கவில்லை. கோதாவரியில் மேற்கொள்ளப்படும் நீர்பாசன திட்டங்கள் முழுமையடைந்த பிறகு, கோதாவரியில் உபரி நீருக்கு வாய்ப்பே இருக்காது என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.
இருப்பினும்,அவர்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சம்மதிக்க வைத்துள்ளார்.
கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதி நீர் விஷயத்தில் இரு மாநிலங்களின் உரிமைகளும் பறிபோகாது. நதி இணைப்பு திட்டத்தின் செலவில், 90 சதவீதத்தை மத்திய அரசே மேற்கொள்ளும். 10 சதவீத தொகையை தான் சம்பந்தப்பட்ட மாநில அரசு மேற்கொள்ள வேண்டி இருக்கும் என நிதின் கட்கரி விளக்கி கூறியுள்ளார்.
💦💦
ஆந்திர மாநிலம், அமராவதியில், மத்திய நீர் வளத்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான, நிதின் கட்கரி திங்களன்று பேசினார். நிதின் கட்கரி கூறிய கருத்துகள் விவரம் :-
கோதாவரி ஆற்றிலிருந்து, 1,100 டி.எம்.சி., நீர், வீணாக கடலில் கலக்கிறது. அதே வேளையில் தமிழகம், கா்நாடகம் இடையே 45 டி.எம்.சி. தண்ணீருக்காக பிரச்சினை உள்ளது.
கோதாவரி நதியை கிருஷ்ணா நதியுடனும், கிருஷ்ணா நதியை பெண்ணாறு நதியுடனும், தமிழகத்தில் உள்ள காவிரி நதியுடனும் இணைக்க உள்ளோம்.
கோதாவரி - காவிரி ஆறுகளை இணைப்பதால், வீணாகும் நீரை, நான்கு தென் மாநிலங்களிலும் பயன்படுத்த முடியும். தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண இயலும்.
கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணார் - காவிரி ஆறுகளை இணைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள விரிவான இத்திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்ற, 60,000 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கோதாவரி - காவிரி ஆறுகளை, கால்வாய்கள் மூலம் இணைக்க வேண்டாம் என, முடிவு செய்துள்ளோம். அவ்வாறு செய்வதால், நீர் ஆவியாகிறது.
இதனால், சிறப்பு தொழில் நுட்பம் மூலம் வலுவூட்டப்பட்ட, குறைந்த அடர்த்தி உடைய இரும்பு குழாய்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனால், திட்ட செலவு கணிசமாகக் குறையும்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக, இந்த அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும். அதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி, உலக வங்கி அல்லது ஆசிய வளர்ச்சி வங்கி கடன் மூலம் திரட்டப்படும்.
கோதாவரி - காவிரி ஆறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றினால், நாட்டின் தென் கடைக்கோடி மாநிலமான தமிழகம் வரை, கோதாவரி நீர் சென்றடையும். இந்த திட்டத்தின் மூலம், தண்ணீர் தொடர்பாக, மாநிலங்கள் இடையில் நிலவும் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காணலாம்.
இவ்வாறு, மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
💦💦
மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி, இணை மந்திரி அர்ஜுன் ராம் மேவால் ஆகியோர் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இதில் அர்ஜுன் ராம் மேவால் கூறுகையில், ‘30 நதிநீர் இணைப்பு திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். இதில் கோதாவரி-காவிரி, கென்-பெட்வா மற்றும் டாமன் கங்கா-பிஞ்சால் உள்பட 5 திட்டங்கள் இறுதிவடிவம் பெற்று இருக்கின்றன’ என்று கூறினார்.
No photo description available.
பின்னர் இந்த திட்டங்கள் குறித்து நிதின் கட்காரி விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த 5 திட்டங்களில் குஜராத் மற்றும் மராட்டியத்தில் நிறைவேற்ற போகும் தபி-நர்மதா, டாமன் கங்கா-பிஞ்சால் நதிகள் இணைப்பு தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். இதைப்போல உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்துடன் பண்டல்கண்ட் பகுதியை இணைக்கும் கென்-பெட்வா இணைப்பு தொடர்பாகவும் விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.
கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தின் கீழ், கோதாவரியில் ரூ.60 ஆயிரம் கோடியில், கோலாவரம் அணை கட்டப்படும்; பின்னர் கோதாவரி நீரை கிருஷ்ணாவிலும், கிருஷ்ணாவில் இருந்து பெண்ணாரிலும், பெண்ணாரில் இருந்து காவிரியிலும் இணைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். கர்நாடகாவும், தமிழ்நாடும் 40 டி.எம்.சி. நீருக்காக போராடும் நிலையில் 3000 டி.எம்.சி. நீர் கடலில் கலந்து வீணாகிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த 5 திட்டங்களும் நடப்பு நிதியாண்டிலேயே அதாவது அடுத்த ஆண்டு (2019) மார்ச் மாதத்துக்குள் தொடங்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து நிதியுதவி பெறப்படும்.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...