Saturday, November 30, 2019

விரும்பியதை அடைவது எப்படி?

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய சொத்து என்று பார்த்தால், அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.
இந்த சூழ்நிலையில் தினமும் அவன், அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும், பிச்சை கேட்பது அவன் வழக்கம்.
ஒருநாள், ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த பிச்சை ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.
சட்டென்று அவனிடமிருந்த, அந்த பிச்சை ஓட்டைப் பிடுங்கி ஆராய்ந்தார்.
கடையிலிருந்து, ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.
"எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?" எனக் கேட்க, "நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!" என்றான் பிச்சைக்காரன்.
இந்தப் "பிச்சை ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க?" எனக்கேட்க..
எங்க அப்பா, தாத்தா,
தாத்தாவுக்குத் தாத்தா, அவங்க தாத்தா.... ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே! யாரோ ஒரு மகான் கிட்ட பிச்சை கேட்டப்போ, அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, "இதை வச்சுப் பொழைச்சிக்கோன்னு குடுத்தாராம்.."
"அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா?" எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,
பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.
கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால், அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.
பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
"சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும், பரவால்ல...
அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!"
என பரிதாபமாக கேட்க... கடைக்காரர் சிரிக்கிறார். மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.
பிச்சைக்காரன் அழுதான், அங்கலாய்த்தான். "ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு ஐயா... தர்மப்பிரபு!"
கடைக்காரர் ஓட்டைச்
சுரண்டிக்கொண்டே இருந்தார்.
சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து, மெள்ள மெள்ள, மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்!
பிச்சைக்காரனின் கையில், அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்,
வேதனையுடன் சொன்னார்! "அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு, இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க. கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.? என சொல்கிறார்.
இதே போலத்தான்,
நாமும் நமக்குள் இருக்கும்
ஆழ்மனத்தின்,
தன்னம்பிக்கையின்,
மனோசக்தியின்,
மகாசக்தியின்,
இறையாற்றலின்
மகத்துவத்தை
உணராமல் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று விரும்புகிறீர்களோ?
அதற்கேற்றவாறு.....
ஆழ்மன தியானத்தின் மூலம், உங்கள் ஆழ்மனத்திற்குள் செல்லுங்கள். அங்கே என்ன ஆணை கொடுப்பது ? என்று நீங்களே முடிவெடுங்கள்!
உங்கள் ஆழ்மனதிற்கு ஆணையாக, கட்டளையாக சொல்லுங்கள். "அது" செய்து முடிக்கும். இது சத்தியம்.
அது எது ?
வேறெது ?
இறைநிலைதானே....
மனமாக இயங்குகிறது !!!!
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய வாழ்த்துகள் .

அசிடிட்டி' எனப்படும்

வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்!
குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம்.
இவற்றை தடுப்பதற்கும்,
குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ!
பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம்.
தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது.அது அமிலசுரப்பு பிரச்சனையை தீர்க்கும்.
தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுதான்.இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே முடித்துவிடுங்கள்.
ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு இடையேயும் நீண்ட இடைவெளி விடுவதும் அமில பிரச்சனைக்கு மற்றொரு காரணமாக அமைந்துவிடுகிறது.எனவே கொஞ்சமே என்றாலும் அந்தந்த நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஊறுகாய், கார சட்னி வகைகள், வினிகர் போன்றவற்றை கண்ணால் பார்க்காமல் இருப்பதே உசிதம்.
புதினா இலையை கொதிக்கும் நீரில் போட்டு, அந்த நீரை உணவுக்கு பின்னர் அருந்தினாலும் நல்ல பலன் கிடைக்கும். கிராம்பு துண்டுகளை வாயில் போட்டு சப்பினாலும் குணம் கிடைக்கும்.
வெல்லம், எலுமிச்சை, வாழைப்பழம், பாதாம் பருப்பு, தயிர் ஆகியவையும் உடனடியாக பலன் தரக்கூடியதே.
அளவுக்கு அதிகமான புகை பிடிப்பதும் மற்றும் மது அருந்துவதும் அசிடிட்டி பிரச்சனையை அதிகமாக்கிவிடும்.
சுவிங்கம் மெல்லுவதும் நல்லது.
அதனால் சுரக்கும் அதிகப்படியான உமிழ் நீர் உணக் குழாயில் உள்ள உணவை நகர்த்தி சென்று நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்கும்.
இஞ்சியும் ஜீரணத்திற்கு உதவும் என்பதால், அதனை சாறாகவோ அல்லது பவுடராகவோ பயன்படுத்தலாம்.
மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை நீரில் சர்க்கரை கலந்து குடிப்பதும் பலனளிக்ககூடியதே.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக முருங்கைக்காய், பீன்ஸ், பூசணி, முட்டைகோஸ், கேரட் மற்றும் பெரிய வெங்காயம் போன்றவற்றை அதிக அளவு எடுத்துக்கொள்வதும் அசிடிட்டி பிரச்சனையை எட்டி பார்க்காமல் செய்துவிடும்.
மேலே குறிப்பிடவற்றில் பின்பற்றுவதில் எது சாத்தியமோ அதை கட்டாயம் பின்பற்றினாலே, 'அசிடிட்டி' அலறியடித்து ஓடிவிடும்.

குளிருக்கு இதமான சுக்கு மிளகு பால்.

குளிருக்கு இதமான சுக்கு மிளகு பால்
சுக்கு மிளகு பால்


















தேவையான பொருட்கள் :

பால் - ஒரு கப்,
நாட்டு சர்க்கரை - தேவைக்கேற்ப,
சுக்கு, மிளகு பொடி - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - சிறிதளவு.

சுக்கு மிளகு பால்

செய்முறை :

முதலில் பாலினை நன்கு காய்ச்ச வேண்டும்.

பின்னர் சுக்கு, மிளகு பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து இறக்கி வடிக்கட்டி சூடாக குடிக்கவும்.
தொண்டைக்கு இதமான சுக்கு மிளகு பால் ரெடி.

பண்டைய காலத்தில் 21 பொருத்தங்கள்.

தற்போது உள்ள சூழ்நிலையில் நட்சத்திர பொருத்தம் 10 இருக்கிறதா என மட்டும் பெரும்பாலனவர்கள் பார்க்கிறார்கள்.பண்டைய காலத்தில் 21 பொருத்தங்கள் வரை பார்க்கப்பட்டன அது படிபடியாக 10 பொருத்தங்கள் வரை குறைந்துவிட்டது.
*நட்சத்திர பொருத்தங்களை விட இருவரது ஜாதக நிலை, ராசி, லக்னம் ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். இதில் ராசி, லக்னம் இருவருக்கும் பொருந்துவது மிக மிக முக்கியமாகும்.
* தற்போது இருவருக்கும் நடக்கும் தசா புக்தி என்ன? அடுத்து வரப்போகும் தசா புக்தி எப்படி இருக்கும்? என்பதையும் கணித்து அவர்களுக்கு திருமணம் செய்யலாமா என முடிவு செய்ய வேண்டும்.
*மணமகனுக்கு ராகு தசை நடந்தால் அவர் கேது தசை நடக்கும் பெண்ணை அவர் திருமணம் செய்யக் கூடாது. அதேபோல் ஏழரைச் சனி நடைபெறும் ஜாதகர், அஷ்டமச் சனி நடக்கும் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது.
* 10 பொருத்தங்களில், 9 பொருத்தம் இருப்பதால் இருவருக்கும் திருமணம் செய்யலாம் எனக் கூறிவிடுகின்றனர். ஆனால் அது பலன் அளிக்காது.மேலும், மணமகனுக்கு மோசமான தசாபுக்தி, தசை நடைபெறும் காலகட்டத்தில், பெண்ணுக்கு நல்ல தசா புக்தி, தசை நடக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படாது.
*மணமகனுக்கு மோசமான தசாபுக்தி, தசை நடைபெறும் காலகட்டத்தில், பெண்ணுக்கு நல்ல தசா புக்தி, தசை நடக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படாது.
*மணமக்களின் ஜாதகத்தில் இராசிக் கட்டங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நவாம்சத்தில் உள்ள கிரக நிலைகளையும் கொண்டு பலன் சொல்ல வேண்டும். எனவே, மேற்கூறிய ஆலோசனைகளை பின்பற்றி பொருத்தம் பார்த்தால் அந்தத் திருமணம் ஆயிரம் காலத்து பயிராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கர்ணனை கொடையாளி என்பது சரியா ?

ஒரு நாள் துரியோதனன் கிருஷ்ணனிடம் எல்லோரும் கர்ணனையே கொடையாளி என்கிறார்களே! அப்படி அவன் பிரமாதமாக என்ன கொடுத்து விட்டான்? அப்படி ஏதாவது கொடுத்திருந்தாலும் அது என்னுடைய பொருள்தானே ? என்று கேட்டான்.
உண்மைதான் உன்னைவிடக் கர்ணனைப் புகழ்வது முட்டாள்தனம்தான் என்ற கிருஷ்ணன் துரியோதனா ஆறு மாதத்திற்குப் பிறகு நான் ஒரு யாகம் செய்யப் போகிறேன். அதற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் சேர்ந்து விட்டேன். விறகு ஒன்றுதான் பாக்கி
அதையாவது
காலத்தில் நீ தரமுடியுமா? என்று கேட்டார்.
இவன் இடையன்தானே! அந்த புத்தி எங்கே போகும். ஆறு மாதத்திற்கு முன் கேவலம் விறகுக்காக என்னிடம் சொல்ல வேண்டுமாக்கும் என்று நினைத்த துரியோதனன் இது என்ன பிரமாதம். அந்த சமயம் ஒரு சீட்டு கொடுத்து அனுப்பு. அனுப்பிவைக்கிறேன் என்றான்.
மழைக்காலம். வானமே பொத்துக்கொண்டு விட்டாற்போன்ற மழையில் கிருஷ்ணன் இருபது வண்டிகளோடு துரியோதனனுக்கு சீட்டு கொடுத்து அனுப்பினார்.
அதைப் பார்த்த துரியோதனன் சமயம் தெரியாமல் விறகு கேட்கிறானே. இடையன் புத்தி அவனை விடுமா? என்று திட்டினான் இப்போது சௌகரியப்படாது என்று கூறி வண்டிகளைத் திருப்பி அனுப்பி விட்டான்.
திரும்பி போகும் வண்டிகளைப் பார்த்து விசாரித்தான் கர்ணன். தன நாட்டில் உள்ள பழைய வீடுகளை இடித்து அதில் உள்ள மரங்களை அந்த இருபது வண்டிகளிலும் ஏற்றினான். அதோடு தன வண்டிகளிலும் இரண்டைக் கட்டி அனுப்பினான். இடிந்த வீடுகளுக்கு பதிலாக மக்களுக்குப் புதிய வீடுகளைக் கட்டிக் கொடுத்தான்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு துரியோதனனைக் கிருஷ்ணன் சந்தித்தார். கண்ணா யாகத்தை எப்போது செய்யப் போகிறீர்கள் என்று கேட்டான். கர்ணன் உதவியால் குறித்த காலத்தில் யாகம் பூர்த்தியடைந்து விட்டதே “ என்றார் கிருஷ்ணன்.
துரியோதனனுக்கு ஒன்றம் புரியவில்லை.
விஷயத்தை விளக்கிய கிருஷ்ணன்
துரியோதனா, கர்ணன் உன்னைவிட உயர்ந்தவன் என்பது இப்பொழுது தெரிகிறதா. பிறரால் வேண்டப்பட்டு மகிழ்ச்சியடைவான். கேட்டதை விட அதிகமாகக் கொடுப்பான். கொடுத்தான்
பின் தொடர்ந்து வந்து இப்பொழுது இவ்வளவு தான் என்னால் முடிந்தது. மற்றொரு சமயம் அவசியம் வரவேண்டும் என்ற நல்ல வார்த்தைகள் சொல்லுவான். கொடைக்குக் கர்ணனிடம்தான் பாடம் கேட்க வேண்டும். அதிலும் அவன் கொடையாளியாகவே திகழ்வான் என்றார் !!

சுமை!

மகாகவி பாரதியார், குள்ளச்சாமி என்னும் ஞானியைச் சந்திப்பது வழக்கம்.
அந்தக் குள்ளச்சாமி எப்போதும் ஓர் அழுக்கு மூட்டையைச் சுமந்து கொண்டு அலைந்து திரிந்து கொண்டிருப்பார்.
அவர் ஞானி என்பதை உணர்ந்துகொண்ட பாரதி, ஒருமுறை அவரிடம்,
"ஏன் இந்த அழுக்கு மூட்டையைச் சுமந்துகொண்டு திரிகிறீர்கள்?'' என்று கேட்டார்.
அதற்கு குள்ளச்சாமி ஒரே வாசகத்தைப் பதிலாக உதிர்த்தார்: "நான் குப்பையை வெளியே சுமக்கிறேன். நீங்களெல்லாம் உள்ளே சுமக்கிறீர்கள்''
இந்நிகழ்ச்சியை பாரதி தமது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு கமண்டல ஆசையில் இப்படி மூட நம்பிக்கைக்கு வழி வகுத்துவிட்டோமே!

ஒரு சந்நியாசி கங்கையில் குளிக்கச் சென்றார். அவரின் ஒரே சொத்து கமண்டலம் தான். கங்கையில் முங்கிக் குளிக்கும் போது யாராவது கமண்டலத்தை லவட்டி விடுவார்கள் என்ற பயம்! அக்கம்பக்கம் எவருமில்லை.உடனே கமண்டலத்தை மணலில் புதைத்து ஒரு கோபுரம் போல் அடையாளத்திற்காக மண்ணை மூடிவைத்தார். "
அப்பாடா! இன்னைக்காவது நிம்மதியாக கங்கையில் நீராடலாம்!" என்று நீராடச் சென்றார். கமண்டலம் தொலையாது என்ற சந்தோசத்தில் நீந்தி நீந்தி குளித்தார். அரை மணி நேரம் குளித்து நதியை விட்டு வெளியே வந்த சந்நியாசி பார்த்த காட்சி அவரைப் பதறச் செய்தது. அவர் செய்த மணல் கோபுரம் போல் நூற்றுக் கணக்கான மணல் கோபுரங்கள் நதிக்கரையில்! அச்சு அசல் அவரது கமண்டலக் கோபுரம் போலவே! " சிவ சிவா! என் கமண்டலத்தை எப்படி அடையாளம் காண்பேன்!" எனப் பதைத்தார்.
ஒவ்வொரு மணல் கோபுரமாக எட்டி உதைக்கத் தொடங்கினார்.
பலர் ஓடி வந்து அவரைப் பிடித்துவைத்து " சாமி! ஏன் இந்த சிவலிங்கங்களை எட்டி உதைக்கிறீர்கள்! கங்கையில் குளிக்கும் முன் இப்படி மணல் லிங்கங்களைச் செய்து விட்டு பக்தர்கள் குளிப்பது மரபு!" என்றார்கள்.
"எந்த மடையன் சொன்னான் ?!" என்றார் சந்நியாசி . பின் மறுபடியும் மணல் மேடுகளை உடைத்துக் கமண்டலம் தேட ஆரம்பிக்க விடாமல் அவரைக் கட்டாகத் தூக்கி " இவருக்குப் பைத்தியம் பிடித்து விட்டது!" என்று பல காதம் தொலைவில் கொண்டு விட்டார்கள்.
"நானா பைத்தியம்! நீங்கள் தானடா முட்டாள்கள் !" என்றார். "
அடச்சே! நாம் செய்த மணல் குவியலை ஏதோ ஒருவன் மறைந்திருந்து பார்த்து பொருள் புரியாமல் அவ்வாறே செய்ய ஒரு கமண்டல ஆசையில் இப்படி மூட நம்பிக்கைக்கு வழி வகுத்து விட்டோமே!" என நொந்தார்.
அவரது உடைமை ஆசையைத் துறக்க இறைவன் செய்த லீலை!
கீதையும் இதை அழகாகச் சொல்கிறது. " போற்றத் தக்கவர்கள் எதைச் செய்தாலும் சாதாரண மக்கள் அவ்வாறே செய்வார்கள்.
அதனால் போற்றத் தக்கவர்கள் மிக மிக எச்சரிக்கையாக நெறிபிறழாமல் "சான்றாக" வாழ்ந்து சான்றோன் எனப் பெற வேண்டும்!"

வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு?

வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு?
மத்திய அரசு
















வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. குறிப்பாக குவைத்துக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வெவ்வேறு விதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. உடைமைகள் திருட்டு, பாலியல் தொல்லைகள், ஊதிய குறைவு போன்ற அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்ட பிறகே மீட்பு கிடைக்கிறது.பாராளுமன்றம்

இதுசம்பந்தமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் எழுப்பினார். அவர், “குவைத்துக்கு வீட்டு வேலை செய்வதற்காக பெண்கள் தேவை என்று செல்போன் செயலி (ஆப்) மூலம் விளம்பரப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி இருந்தால் அது அடிமை வணிகமாகும். இதில் உண்மை உள்ளதா?

அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்யும் இந்திய பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வீட்டு வேலைக்கு எத்தனை இந்திய பெண்கள் சென்றுள்ளனர்?” என்று கேட்டார்.

இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளிதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குவைத்துக்கு செல்போன் செயலி மூலமாக வீட்டு வேலைக்கு பெண்கள் அமர்த்தப்படுகிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியான தகவலின் அடிப்படையில் குவைத் அரசு உடனடியாக செயல்பட்டு அந்த ஆப் மற்றும் இணையதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது.

வளைகுடா நாடுகளில் பணியாற்றும் நமது நாட்டு பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதற்கான குடியுரிமைகளையும் அரசு ஒழுங்குபடுத்தி இருக்கிறது.

அதன்படி, இ.சி.ஆர். பாஸ்போர்ட் (எமிகிரேஷன் செக் ரெக்வர்ட் என்ற வகை பாஸ்போர்ட்) மூலமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் செவிலியர்கள் தவிர மற்ற பணியாளர் கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

இ.சி.ஆர். பாஸ்போர்ட் வைத்துள்ள இந்திய பெண் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்றால் இ.சி.ஆர். உடன்பாட்டில் உள்ள 18 நாடுகளும் இந்திய அரசு நடத்தும் நிறுவனங்களின் மூலமாகத்தான் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.

வெளிநாட்டில் உள்ள ஒருவர் இந்திய பெண்ணை பணி அமர்த்தினால், அந்த பெண் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2,500 அமெரிக்க டாலர் வீதம் காப்புத் தொகையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் செலுத்த வேண்டும்.

வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் இந்திய பெண்களின் அனைத்து விவரங்களும் கொண்ட தகவல் தொகுப்பை உருவாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.

ஏனென்றால், அங்கு வேலை செய்யும் பெண்கள் பலரும் இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட் (எமிகிரேஷன் செக் நாட் ரெக்வர்ட்’ என்ற வகை பாஸ்போர்ட்) வைத்துள்ளனர். அவர்கள் இந்தியாவில் இருந்து அங்கு செல்லும்போது அனுமதி பெறுவதற்கும், வேலையை பதிவு செய்வதற்கும் அவசியம் ஏற்படுவதில்லை.

அரசின் அனுமதி பெற்று வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்கள் குறித்த விவரங்கள் மத்திய அரசால் சேகரிக்கப்படுகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் வரை பக்ரைனுக்கு 30 பேரும், குவைத்துக்கு 774 பேரும், ஓமனுக்கு 85 பேரும், கத்தாருக்கு 2 பேரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு 178 பேரும் சென்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி.

மகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு- உத்தவ் தாக்கரே அரசு வெற்றி
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு


















மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி” என்ற புதிய கூட்டணியை உருவாக்கி ஆட்சிக்கு வந்துள்ளன.சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

உத்தவ் தாக்கரே சட்ட சபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை வரும் 3-ந்தேதிக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு மூலம் நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டடார். அதன்படி மகாராஷ்டிர மாநில சட்டசபையின் 2 நாள் சிறப்பு கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. 

முதல் நாளான இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று பிற்பகல் சபை கூடியதும் சட்டப்பேரவை விதிகளின் படி சிறப்புக்கூட்டம் கூட்டப்படவில்லை என பாஜக குற்றச்சாட்டி அமளியில் ஈடுபட்டது. எதிர்க்கட்சிகளின் எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகரை நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் பட்னாவிஸ் கோரிக்கை விடுத்தார். இடைக்கால சபாநாயகர் நியமனமும் அரசியலமைப்புகு எதிரானது என்று அவர் குற்றம்சாட்டினார். 

பட்னாவிஸ்

எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்கும்படி இடைக்கால சபாநாயகர் கேட்டுக்கொண்டார். ஆனால், தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், உத்தவ் தாக்கரே அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 169 உறுப்பினர்கள் வாக்களித்தனர். 

வயதானால் நோய்வரும் என்று எந்த இயற்கையின் சட்டமும் கிடையாது.*

உங்களைப் படைத்தது இறைவன் அல்லது இயற்கை, என்று எதை நீங்கள் நம்பினாலும்
*உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது*.
உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் *எவனாவது வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்*.
உங்கள் கூடவே வாழும்
மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.
எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*----------
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் உங்கள் மனதிலும்,
அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுங்கள்.
ஆரோக்கியமாக வாழுங்கள்.
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.
*மரணம்*----------
*மனிதனின் மரணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?.*😀
அவன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை அழைத்து. நான் இந்த வாழ்க்கையை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன். போய் வருகிறேன். சந்தோஷமாக வாழுங்கள் என்று. தன் குடும்பத்தினரிடம் விடை பெற்று. மகிழ்ச்சியாக உடலைத் துறக்க வேண்டும்.😌
*யாருடைய மரணமும், மரண படுக்கையிலோ, மருத்துவ மனையிலோ நடக்கக் கூடாது.*
*சிந்தனையை மாற்றுங்கள்,
நான் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, ஆனந்தமாக வாழ்வேன் என்று நம்புங்கள்.
எல்லாத் தொந்தரவும் பறந்து போகும்..

சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?

கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கும்
போது, நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது. அந்த தெய்வத்தின் பார்வையை சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. சன்னிதியின் இரு பக்க வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும். தெய்வ சக்தியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சக்தியை உடைய நந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை கோயில்களில் காணலாம்.
நவக்கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவிதமான பலன்கள் உண்டு. இதற்கு ஸ்தான பலம், ஸம்யோக பலம், த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள். இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை பொதுவாக அசுப பலனையே ஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும் சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின் பார்வை நம் மீது விழக்கூடாது என்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

ஸ்டாலின் அரசியல் ஆலோசகர் சுனில் விலகல் பின்னணி என்ன?

தி.மு.க., தலைவர் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும், அவரது அரசியல் திட்டமிடல் குழு ஆலோசகராக செயல்பட்டு வந்த சுனில், திடீரென விலகியுள்ளார். அந்த இடத்திற்கு, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வருவாரா என்ற கேள்வி, அக்கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளது.

பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றியவர், சுனில். இவர், 2016 சட்டசபை தேர்தலில், ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் அரசியல் திட்டமிடல் குழு ஆலோசகராக பொறுப்பேற்றார்.

முக்கிய பங்கு


'நமக்கு நாமே' திட்டத்தை, சுனில் தலைமையிலான, 'ஓ.எம்.ஜி., குரூப்' தான் செயல்படுத்தியது. இந்த குரூப்பில், தற்போது, ஸ்டாலினிடம் உதவியாளராக பணியாற்றும் தினேஷ் உட்பட, 10க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றினர். கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருந்தது.

ஆனால், 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஸ்டாலின் நடத்திய, 'நமக்கு நாமே' திட்டத்தினால், தி.மு.க.,வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைத்தது. கடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கும், ஓ.எம்.ஜி., பணிகள் முக்கிய பங்கு வகித்தன.

ஆனால், தி.மு.க.,வின் ரகசிய விவகாரங்கள் மற்றும் அரசியல் திட்டமிடல்கள், ஆளுங்கட்சி மேலிடத்திற்கு தெரிய வருவதால், ஓ.எம்.ஜி., குரூப் மீது சந்தேகம், ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு எழுந்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன், ஓ.எம்.ஜி., குரூப்பில் பணியாற்றிய சிலர் அதிரடியாக நீக்கப்பட்டனர். சுனில் வாயிலாக, டில்லி அரசியல் தொடர்புகள் அனைத்தும், ஸ்டாலின் மருமகன் சபரீசன் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டதால், சுனிலின் பணிகள் இனி தேவையில்லை என, தி.மு.க., மேலிடம் கருதியது.

சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைவதற்கு, சுனில் வகுத்து கொடுத்த பிரசார வியூகமும், வன்னியருக்கு உள் ஒதுக்கீடு அறிவிப்பும், முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எதிர்ப்புமேலும், ராஜ்யசபா எம்.பி., பதவியை, சுனில் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு மாதந்தோறும் சம்பளம் கொடுக்கும்போது, எதற்கு, எம்.பி., பதவி என, ஸ்டாலினிடம், தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், சுனில் அதிருப்தி அடைந்தார்.

அதேபோல், உதயநிதியை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக, ஸ்டாலினுக்கும், சுனிலுக்கும் கருத்து வேறுபாடு உருவாகி உள்ளது. இதன் எதிரொலியாக, சுனில் விலகி உள்ளார். எனவே, அந்த வெற்றிடத்தை, பிரசாந்த் கிஷோர் நிரப்புவாரா அல்லது சபரீசனே கவனித்து கொள்வாரா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

பிரசாந்த் கிஷோர் பற்றிரஜினியிடம், 'பற்ற' வைத்த கமல்
மஹாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில், சிவசேனா கட்சிக்கு ஆதரவாக, பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். அங்கு தேர்தல் பணிகள் முடிந்து விட்டதால், அடுத்ததாக, தமிழக சட்டசபை தேர்தலில் பணியாற்ற, அவர் தயாராகி உள்ளார். முதல்வர் இ.பி.எஸ்., நடிகர் ரஜினி ஆகியோர் தரப்பில், பிரசாந்த் கிஷோரிடம் பேச்சு நடத்தப்பட்டது. இது தெரிந்ததும், ரஜினியை கமல் உஷார் படுத்தி உள்ளார்.
 ஸ்டாலின் ,அரசியல் ஆலோசகர்,சட்டசபை தேர்தலில்,பிரசாந்த் கிஷோர், சுனில், விலகல்

கமலிடம் ஏற்கனவே சில மாதம், கிஷோர் பணியாற்றியிருந்தார்.'பிரசாந்த் கிஷோர், பா.ஜ., எதிர்ப்பு நிலைக்கு முக்கியத்துவம் தருகிறாரே தவிர, மக்கள் நீதி மையம் கட்சியை முன்னிலைப்படுத்த, எந்த பணிகளும் செய்யவில்லை. எனவே, அவரை நீங்கள் பணியமர்த்த வேண்டாம்' என, ரஜினியிடம் கமல் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக, தேர்தல் வியூக பணிகள் மேற்கொள்ள, பிரசாந்த் கிஷோர் தரப்பில் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், ஒரு பேச்சு அடிப்படுகிறது.

எனக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாது .. #தங்கதமிழ்செல்வன் ..

இதை எதுக்காக ..
யாரை திருப்திடுத்த ...
சொன்னாரோ தெரியலை ...
அம்மா ...
ஆஸ்பிடல்ல இருந்த போது....
வீரபான்டி கோயில்ல ..
அலகு குத்தி ...
பால்காவடி எடுத்தது ..
இதெல்லாம் ...
வெறும் நடிப்பா ???

Friday, November 29, 2019

அது சரி சொர்க்கத்தில் யாருக்கும் பசிக்காது என்பார்களே.

*சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம்.*
*ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.*
*அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார்.*
*நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே,*
*ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.*
*நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார்.*
*அவர்கள் சொன்னார்கள்.*
*“நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன். அவர் எடுத்து எனக்கு ஊட்டினார். இவ்வாறு எல்லோரும் மற்றவர்களுக்கு ஊட்டினோம். அனைவரும் உண்டோம். அண்டாவும் காலி, எங்கள் பசியும் போச்சு” என்றனர்.*
*நரகவாசிகள் தங்களுக்கு இந்த தந்திரம் தெரியாமல் போயிற்றே என்று நினைத்து வெட்கப்பட்டனர்.*
*எது சொர்க்கம்?*
*இந்தக் கதை என்ன சொல்கிறது?*
*எல்லோரும் மற்றவர்களுக்கு உதவும் நிலை வந்தால் ஒருவரும் துன்பபடமாட்டார். சொர்க்கம் என்பதே எல்லாரும் எல்லார்க்கும் உதவிசெய்து வாழும் இடந்தான். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க. தன்னைப் பற்றியே கவலைப்படுகிறவர்கள் நிறைந்த இடமே நரகம்.*
தமிழக கோயில்களில் உள்ள அசிங்கமான சிலைகளை தமிழக அரசு உடனடியாக இடிக்கவோ அல்லது அப்புறப்படுத்துவோ வேண்டும்.
கனிமொழி .
இதை முதலில் ஒரு அசிங்கம் சொல்லலாமா ??
வாழ்க்கையையும் கட்சியையும்
அசிங்கமாக்கிய குடும்பங்களின் வாரிசுகள் எதற்கு இந்த அலப்பறை அறிக்கைகளை விட்டு நாவாட
வேண்டும் ?
பாவாடைகளின் தேவாலயங்களில் போய் கன்யாஸ்திரிகளின் பாலியல் கொடுமைகளை பேச உனக்கு
துணிவில்லை .
நாக்கு வரவில்லை .
இந்து ஆலயங்களில் வாழ்வியலின் தத்துவங்களை உணர்த்தும் சித்திரங்களை பேச பக்தியின்
கலைக்கண்ணோடு வராமல்
காமக்கண்ணோடு பார்க்கும்
தெருநாய்கள் சில வெறிநாய்களாக மாறி எந்த ஆணிகளுக்கு இந்துக் கோயில்களுக்குள் வர வேண்டும் ?????
யார் அழைத்தார்கள் இந்துமத துவேஷ கூட்டங்களின் அல்பங்களை ???
அம்மிணி எதை எல்லாம் நீக்கவும் , ஒழிக்கவும் வேண்டுமோ அதையெல்லாம்
பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த முட்டாள்களை
தான் உண்மையான இந்துக்கள்
உண்மைகளை எடுத்துரைத்து
ஒன்று திருத்த வேண்டும்
அல்லது அவர்கள் தேர்ந்தெடுத்த அசிங்கங்களை தான் உடனடியாக
அரசியலிருந்து அப்புறப்படுத்த
வேண்டும்.

தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு: இவை உணர்த்தும் தத்துவம் என்ன...?

ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழ் கலாச்சாரம். ஆனால் அந்த மொழியின் கடவுளுக்கோ இரணடு மனைவிகள் என்று சிலர் கேலி செய்வதுண்டு. ஆனால் உண்மையில் முர்கனுக்கு இரண்டு மனைவிகல் உண்டா என்றால் இல்லை. இதை சற்று நுணுக்கமாக ஆராய வேண்டும்.
ஒரு மனிதனின் தலையில் இருந்து கால் வரை உள்ள ஒற்றை உறுப்புக்கள் இவையே. நெற்றி (பிரம்மந்திரா), தொண்டைக் குழி (ஆங்ஞை), மார்புக்குழி (விசுத்தி), தொப்புள் குழி (மணிப்பூரம்), ஆண்/பெண் குறி (சுவாதீஸ்டன்), மலக்குழிக்கு மேல் (மூலாதாரம்).
இந்த ஆறு குழிகளையும் ஒரு நேர்கோட்டால் இணைத்தால் வரும் மையக் கோடே சுழுமுனை என்பதாகும். இந்த நேர்கோட்டிற்கு இடப்புறம், வலப்புறமும் உள்ள அவயங்களை இயங்கச்செய்து சுழுமுனையே.
இந்த சுழுமுனையே முருகன். இதற்கு இடப்புறமும் வலப்புறமும் உள்ள அவயங்களே வள்ளி, தெய்வானை. ஆக மனைவியர் என்பது ஒரு குறியீடே. மையத்தில் உள்ள சுழுமுனையை தியானத்தின் வாயிலாக அறிந்து கொண்டால் இந்த மனைவியர் பற்றிய குறியீடாகிய ஞானத்தினையும் அறிந்து கொள்ளலாம். எனவே தமிழ் கடவுள் முருகனுக்கு மனைவியர் இரண்டு என்பது இந்த சுழுமுனையைக் குறிக்கும் ஒரு வேதாந்த ரகசியமே தவிர வேறொன்றும் இல்லை.

காலண்டரில் மேல்நோக்கு கீழ்நோக்கு சமநோக்கு நாள் என குறிப்பிடப்பட்டிருக்கும் அப்படி என்றால் என்ன தெரியுமா....?

மேல்நோக்கு நாள்: உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் மேல் நட்சத்திரங்களாகும்.
இந்த நட்சத்திரங்களை கொண்ட நாட்களே மேல் நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.
உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.
கீழ்நோக்குநாள்: கிருத்திகை, பரணி, பூரம், ஆயில்யம், விசாகம், மகம், மூலம் பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்களாகும். இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது நல்லது.
உதாரணத்திற்கு கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட்டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக்கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
சமநோக்கு நாள்: அஸ்தம், அஸ்வினி, அனுஷம், மிருகசீரிஷம், ஸ்வாதி, புனர்பூசம், சித்திரை, கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் சமநோக்கு நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களே சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் ஓரளவிற்கு சமமாக செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது.
உதாரணமாக சாலை அமைப்பது, சாலையில் ஓட்டக்கூடிய வாகனங்கள் வாங்குவது, வீட்டிற்கு தளம் அமைப்பது, போன்றவற்றை செய்யலாம். இப்படியாக நாட்கள் பார்த்து அந்தந்த வேலைகளை செய்தால் அது சிறப்பாக முடியும் என்பது ஐதீகம்.

எத்தனை பெரிய மனிதமாண்பு. இதை ஒவ்வொரு அரசியலாளர்களும் கடைப்பிடித்தால் சாம்ராஜ்யம் என்ன சொர்க்கமே தேசமாகும்.👍💖

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் திரு.நெல்சன் மண்டேலா கூறியது;
நான் ஜனாதிபதியான பின் ஒருநாள் நான் எனது முதல் கட்ட பாதுகாப்புப் படையினருடன் நகரத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றிருந்தேன்.
அங்கு ஒருவர் தனியாக உணவுக்காகக் காத்திருந்தார்.. எனது படைவீரனை அனுப்பி, அவரை எம்முடன் வந்து ஒன்றாக உணவருந்தும் படி சொன்னேன்.
அவரும் தனது உணவுடன் எமது வட்டத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.. எல்லோரும் உண்டு முடிய அவரும் புறப்பட்டார்.
எனது படை வீரன் என்னிடம் சொன்னான்..... அந்த மனிதர் பார்ப்பதற்கு மிகவும் நோய்வாய்ப் பட்டவராகத் தெரிகிறார். அவர் உண்ணும் போது கைகள் மிகவும் நடுங்கின என்றான்..
நான் குறுக்கிட்டேன்..... அது அல்ல உண்மை. வீரனே....!!
*உண்மை என்ன தெரியுமா......*
நான் முன்னர் சிறையில் இருந்த போது, இந்த மனிதர்தான் எனக்கு சிறைக் காவலராக இருந்தார்.என்னை அடிக்கடி கொடுமைப் படுத்திக் கஷ்டப்படுத்தும் போதெல்லாம்....
நான் கூக்குரலிட்டு , களைத்து, இறுதியில் கொஞ்சம் நீர் அருந்தக் கேட்பேன்..
இதே அந்த மனிதர், அவ்வேளை என்னிடம் வந்து நேராக என் தலை மேல் சிறுநீர் கழித்துவிட்டுச் செல்வார்.
இப்போது அவர் என்னை இனம் கண்டு கொண்டார். நான் இப்போ தென் ஆப்பிரிக்க அதிபராக இருப்பதால்,
அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று நடுக்கத்துடன் எதிர்பார்த்தார்....
ஆனால் இது எனது பழக்கமல்ல. இப்படிப்பட்ட குணம் எனதுமல்ல..
*"பழிக்குப் பழி வாங்கும்" மனநிலை ஒரு போதும் ஒரு தேசத்தையோ, தனி மனிதரையோ தட்டி யெழுப்பாது. அழித்து விடும். *
அதே நேரம் சில விஷயங்களில் "மனதின் சகிப்புத் தன்மை," பெரிய சாம்ராஜ்யங்களையே உருவாக்கும்......
என்றார் மண்டேலா..

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...