Monday, November 25, 2019

வாரிசுகளால் கட்சிகளில் 'குடுமிப்பிடி'; மஹாராஷ்டிராவில் தொடர் கதை.

மஹாராஷ்டிராவில் சரத் பவார் - அஜித் பவார் பால் தாக்கரே - ராஜ் தாக்கரே கோபிநாத் முண்டே தனஞ்சய் முண்டே என வாரிசுகளால் கட்சியில் குடுமிப்பிடி சண்டை நடப்பது தொடர்கதையாகவே உள்ளது.

மஹராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் - அஜித் பவார் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மஹாராஷ்டிரா அரசியலை ஆய்வு செய்தால் வாரிசுகளால் கட்சிகளில் குடுமிப்பிடி சண்டை நடப்பதும் கட்சி உடைவதும் தொடர் கதையாகவே உள்ளது.தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் தான் அஜித் பவார். அஜித்தை வளர்த்தது சரத் பவார் தான்.

வாரிசுகள், கட்சிகள், குடுமிப்பிடி, மஹாராஷ்டிரா, தொடர் கதை

1991ம் ஆண்டு பாரமதி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு அஜித் பவார் வெற்றி பெற்றார்.அப்போது முதலே அஜித் தான் சரத் பவாரின் வாரிசாக கருதப்பட்டார். ஏழு முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒரு முறை துணை முதல்வராகவும் அஜித் பவார் இருந்துள்ளார். தேசியவாத காங்கிரசில் சரத்பவாருக்கு அடுத்த இடத்திலும் இருந்து வந்தார்.

ஆனால் எப்போது தன் மகள் சுப்ரியா சுலேவை அரசியலில் பவார் களம் இறக்கினாரோ அது முதல் கட்சியில் வாரிசு போட்டி உருவானது. அது பெரிதாகி இன்று கட்சியே உடையும் நிலைக்கு வந்துள்ளது.மிகவும் கட்டுக்கோப்பான கட்சி என கருதப்படும் சிவசேனாவும் வாரிசு அரசியலால் உடைந்தது வரலாறு.

சிவசேனா தலைவர் பால்தாக்ரேவின் தம்பி மகன் ராஜ் தாக்கரே. பால் தாக்கரேவை போலவே அரசியலில் தீவிரமாக செயல்பட்டார். பேசுவதிலும் நடையுடை பாவனைகளிலும் பெரியப்பாவையே பின்பற்றினார் ராஜ் தாக்கரே. அவரை பால் தாக்கரேவின் வாரிசாக கட்சியினரும் நம்பினர்.

ஆனால் தன் மகன் உத்தவ் தாக்கரேவை கட்சியில் பால் தாக்கரே முன்னிறுத்த துவங்கியது ராஜ் தாக்கரேவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. தலைமைக்கு எதிராக போர்க் கொடி துாக்கினார். பால் தாக்கரே இருக்கும் போதே சிவசேனாவிலிருந்து பிரிந்து மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவை துவக்கினார்.

தேசிய கட்சியான பா.ஜ.விலும் இந்த பிரச்னை ஏற்பட்டது. மாநிலத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த கோபினாத் முண்டே. இவரது வாரிசாக கருதப்பட்டவர் இவரது சகோதரர் மகன் தனஞ்சய் முண்டே.ஆனால் அரசியலில் கோபினாத் முண்டே தன் மகள் பங்கஜ் முண்டேவை களமிறக்கியதால் பா.ஜ.வை விட்டு வெளியேறிய தனஞ்சய் தேசியவாத காங்கிரசில் சேர்ந்தார்.

கடந்த 2014 சட்டசபை தேர்தலில் பார்லி தொகுதியில் தனஞ்சய்யை பங்கஜா முண்டே தோற்கடித்தார். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பங்கஜாவை தனஞ்சய் தோற்கடித்தார்.மஹாராஷ்டிராவில் பல கட்சிகளில் இந்த வாரிசு சண்டை தொடர்ந்து கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...