Sunday, November 24, 2019

விடுமுறையில் விசாரணை; இந்தாண்டில் 3வது முறை.

உச்ச நீதிமன்றத்தில், விடுமுறை நாட்களில் வழக்குகள் விசாரிக்கப்படுவது, இந்தாண்டில் மூன்றாவது முறையாக நடந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் அதிகாலை அதிரடியில், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு மீண்டும் அமைந்துள்ளது. ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தி வந்த, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., கட்சிகள், இந்த திடீர் மாற்றத்தால் அதிர்ச்சி அடைந்தன. இதையடுத்து, நேற்று முன்தினமே(நவ.,23), மூன்று கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. விடுமுறை நாளாக இருந்தபோதும், இந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது.

உச்ச நீதிமன்ற வரலாற்றில், இவ்வாறு பல முக்கிய வழக்குகள், விடுமுறை நாட்களிலும்; சில சமயம் நள்ளிரவிற்கு பிறகும் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டை பொறுத்தவரை, இது மூன்றாவது சம்பவம்.




* உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய்க்கு எதிராக, உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் பாலியல் புகார் கொடுத்தார். அது தொடர்பான வழக்கின் விசாரணை, ஏப்., 20ல், விடுமுறை நாளான சனிக்கிழமை நடந்தது.

* பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பும், சமீபத்தில், நவ., 9ல், விடுமுறை நாளான சனிக்கிழமை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...