Monday, November 25, 2019

" உள்ளாட்சி தேர்தல் "

உள்ளாட்சி தேர்தலுக்காக கனகஜோராக அணைத்து கட்சிகளும் தயாராகி வரும் வேலையில் திருட்டு திமுக மீண்டும் தன் வேலையை காட்டியுள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வர இருந்த நிலையில் தமிழகத்தில் புதியதாக 9 மாவட்டங்கள் பிரிக்க பட்டுள்ளதாகவும் அதனால் அந்த உள்ளாட்சிகளை மறுவரையறை செய்த பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக வக்கீல் வில்சன் இன்று உச்சநீதி மன்றத்தில் வாதாடியுள்ளார், உச்ச நீதிமன்றமும் இந்த வழக்கை டிசம்பர் இறுதிக்கு தள்ளி வைத்துள்ளது. இந்த செய்திகள் எல்லாம் திமுக சார்பு வெகுஜன ஊடகங்களில் வராது
ஊடக விவாதங்களில் பெரிய உத்தம புத்திரர்கள் போல் அதிமுக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் தள்ளி போட்டு வருகிறது என்று பேசும் திமுக தான் உண்மையில் திரைமறைவில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள திராணி இல்லாமல் சொத்தையான காரணங்களை கூறி அதை ஆரம்பத்தில் இருந்தே தள்ளி போட்டு வந்துள்ளது ஜெயலலிதா மறைவுமக்கு முன்பே உள்ளாட்சி தேர்தல் நடந்திருக்க வேண்டும் அன்றில் இருந்து இன்று வரை திமுகவின் எதிர்ப்பால் தான் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்த முடியாமல் இருந்து வந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...