Tuesday, November 26, 2019

கோமாளியிடம் கூட்டு வைத்தால் திவாலாகி போக வேண்டியதுதான்.

அஜித் பவாரிடம் தே.கா கட்சி ஆதரவு எம் எல் ஏக்களின் கையொப்பமுடன் கூடிய லிஸ்டை வாங்காமல் கோதாவில் இறங்கிய பாஜக, இப்போது திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி முழிக்கிறது. சோனியாவின் சேனை மூன்று குதிரைகள் பூட்டிய வண்டியாக மாறி இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவையும் 2024 தேர்தலுக்குள் இழக்க போகிறது. முதலமைச்சர் பதவியை சோனியா சேனாவிற்கு நிபந்தனையில்லாமல் விட்டு கொடுக்க பவாரும் சோனியாவும் முட்டாளில்லை. தங்கள் கட்சி தலைவர்களின் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வாபஸ் வாங்க சோனியா சேனாவுக்கு கட்டளை இட்டு அதை உத(ய்)வா(தா) க்கரை (ரே) திரை மறைவில் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்த பின்புதான் இந்த கோமாளி அரசனாக்க படுகிறான். பலி கொடுக்கு முன்பு ஆட்டுக்கு மஞ்சள் பூசி மாலையிடும்போது அந்த ஆடு மனிதர்கள் எவ்வளவு நல்லவர்களென நினைக்கும். அது போல கோமாளியை முதல்வராக்கி அவன் மூலம் தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற்ற பிறகு கோமாளியின் ஆட்சியில ஹிந்துத்வா சக்திகள் ஜாஸ்தியிடுச்சுன்னு ஜோரா ஒப்பாறி பாடி கூட்டணியை முறித்து சென்று விடுவார்கள். பாஜக எந்த கட்சியுடனும் கூட்டு வைக்காமல் மாநிலம் முழுவதும் பாத யாத்திரை சென்று அடுத்து வரும் தேர்தலில் தனியாக நின்றால் ஆட்சியை பிடிக்கலாம். மறுபடீ இக்கோமாளியிடம் கூட்டு வைத்தால் திவாலாகி போக வேண்டியதுதான்.
ஊழல் விஷய விசாரணையில் மாநில அரசை மீறி மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாத நிலை உருவாகும். அதன் மூலம் மோடி இந்த ஊழல்வாதிகளை அரசியல் காழ்ப்பு காரணமாக வழக்கு தொடர்ந்தார் என்கிற வழக்கமான பல்லவி பாடப்படும். அனுபவமில்லாத கோமாளி சவான் பவார் போன்றவர்களின் Back seat driving க்கு குமாரஸ்வாமீ போல பலியாகும் வாய்ப்பும் அதிகம். மஹாராஷ்டிரம் இன்னொரு பீஹாராக மாறும். அப்படி மாறாவிட்டால் உலகின் எட்டாவது அதிசயம்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...