Monday, November 25, 2019

சமையலின்போது செய்யும் 5 #மோசமான தவறுகள்:

சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ,
காரத்தை அளவு தெரியாமல் போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும்.
ஆனால்..
அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல்
வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சிலதவறுகளை செய்து விடுகிறோம்.அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது.
1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது.
உதாரணத்துக்கு
சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால், அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக்
கொள்ளலாம். இதே போல, முட்டைகளை நன்கு கழுவிவிட்டு வேகவைக்க வேண்டும். கீரையை 2
முறையாவது கழுவ வேண்டும்.
2. கோழிக்கறியை சமைக்கும் முன்பு அலசும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதாவது,
கோழிக்கறியில் தண்ணீரை ஊற்றும் போது அதில்
இருந்து தெளிக்கும் தண்ணீர்படும் இடங்களில் எல்லாம்பாக்டீரியாக்கள் பரவும்என்பதை மறக்கக் கூடாது.
மேலும்,
கோழிக்கறியை அலசி கீழே விடும்தண்ணீர் நேராக வெளியேற்றப்படவேண்டும். அதில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும்என்பதால் கவனமாக அந்த
நீரை வெளியேற்ற வேண்டும்.
3. எந்த உணவு பொருளையும்அதிக நேரம் வதக்கவோ, கருகவைக்கவோ கூடாது.எல்லோருக்குமே உணவு பொருள்என்பது நன்கு சிவந்து இருக்கவேண்டும்
என்று விரும்புவார்கள்.ஆனால், அது உடல்நலனுக்கு தீமையை ஏற்படுத்தும்.எனவே, எந்த உணவையும்
அதிகமாக வதக்கி கருக வைக்கவேண்டாம். கருகிய
அல்லது தீய்ந்த உணவு பொருள்புற்றுநோயை ஏற்படுத்தும்.
4. காலையில் வேகமாக சமைக்கவேண்டும் என்பதால் பலரும்வெங்காயத்தை இரவே நறுக்கி வைத்துக்
கொள்வார்கள். அது மிகப்பெரியதவறாகும்.
வெங்காயத்துக்கு கிருமிகளை கவர்ந்திழுக்கும்குணம் உள்ளது. அதனால்,வெங்காயத்தை நறுக்கியதும்,
அது காற்றில் இருக்கும்அனைத்து கிருமிகளையும்
கவர்ந்திழுத்து வைத்துக்கொள்ளும். கிருமிகள் நிறைந்தவெங்காயத்தைத் தான் நாம்மறுநாள் உணவுக்குப்பயன்படுத்துகிறோம் என்பதை மறவாதீர்.
5. மேலும்,இஞ்சியை தோலோடு சமைக்கக் கூடாது. கீரையோடு புளி சேர்க்கக்கூடாது.கோழிக்கறியை எடுத்து வைத்து மறு நாள்சாப்பிடக் கூடாது. நான்ஸ்டிக்
தவாவை இரும்பு தேய்ப்பானைப் பயன்படுத்தி தேய்த்துக் கழுவக்கூடாது. விரதநாட்களை தவிர்த்து,
சமைத்து ருசி பார்த்துவிட்டுத்தான் சமையலை முடிக்க வேண்டும்.
"நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் "

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...