குட்கா வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேந்திரன் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: குட்காவழக்கில் ஏற்கனவே சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. மேலும்குட்கா வர்த்தகத்தில் ரூ.639 கோடி அளவிற்கு சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை நடை பெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில் முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் கூடுதல் கூடுதல் ஆணையர் தினகரன் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அதில் டிச.,2 ம் தேதி முன்னாள் டி.ஜி.பி ராஜேந்திரனும், கூடுதல் காவல் ஆணையர் தினகரன் டிச.,3 ம் தேதியும் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குட்கா முறைகேடு வழக்கில் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் ரூ.246 கோடி சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது .
முன்னதாக, குட்கா முறைகேடு வழக்கில் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் ரூ.246 கோடி சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment