Wednesday, November 27, 2019

பெட்ரோல் நிலையம் அமைக்க புதிய கட்டுப்பாடு.

வெளிநாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள், இந்தியாவில் பெட்ரோல் நிலையங்களை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இத்தகைய நிலையங்களை அமைக்க, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த பி.பி.நிறுவனம், சவுதி அரேபியாவை சேர்ந்த அராம்கோ, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டோட்டல் எஸ்.ஏ., உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவில் பெட்ரோல் நிலையங்கள் அமைத்து, சில்லரை வணிகத்தில் இறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இவை தவிர, உள்நாட்டிலும் பல நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன.

இந்நிலையில், பழைய சில விதிகளை மாற்றி, புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.புதிய கட்டுப்பாடுகள்விண்ணப்ப தொகை, 25 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பெட்ரோல் நிலையம் அமைக்க விரும்பும் நிறுவனம், 250 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்

* குறைந்தது, 100 பெட்ரோல் நிலையங்களை அமைக்க வேண்டும். அதில், 5 சதவீத நிலையங்களை கிராம பகுதிகளில் அமைக்க வேண்டும்

* எங்கிருந்து பெட்ரோல், டீசல் பெறப்படுகிறது, உள்கட்டுமான வசதிகள், கொள்திறன் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் முன்கூட்டியே அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...