Wednesday, December 11, 2019

இந்த CAB சட்டத்திருத்தம் என்பது என்ன?

சுருக்கமாக சொன்னால், நம்மை சுற்றியுள்ள முஸ்லீம் நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை பெற வழிவகை செய்கிறது...
சரி.. அதை ஏன் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன? மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு மாநில அரசு குடியுரிமை அளித்து (மறைமுகமாகதான்) அவர்களை தங்கள் வோட்டு வங்கியாக மாற்றிக்கொள்கின்றன.. அதற்க்கு இந்த மசோதா ஆப்பு வைத்துவிட்டது
சரி.. இப்படி அகதிகளை மதரீதியாக பிரித்து பார்த்து மதச்சார்பற்ற நாடான இந்தியா செய்வது சரியா? இதே கேள்வியைத்தான் எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்தில் எழுப்பின.. அதற்க்கு அமித் ஷா அளித்த பதில்.. காங்கிரஸ் மத ரீதியாகத்தானே 1947 ல் இந்த நாட்டை பிரித்தது? அப்படி அவர்கள் செய்திருக்கவில்லை என்றால் இன்று இந்த சட்டம் தேவையே இல்லையே என்கிறார்.. அதோடு எதிர்க்கட்சிகள் கப்சிப்...
எந்த நாட்டிலும் இப்படியில்லை,திறந்த வீடாக யார் வேண்டுமானாலும் உள்ளே வரலாம். பின் லஞ்சம் கொடுத்து சில வருடங்களில் குடியுரிமை வாங்கி அனைத்து அரசு நலத்திட்டத்தையும் பெறலாம். குண்டு வைப்பது முதல் அனைத்து நாச வேலையும் செய்யலாம் அகதி வேசத்தில்! இதைத் தடுக்க நினைத்து நாட்டின் பாதுகாப்பு விசயத்தில் கவனம் எடுத்து அத்தோடு முறையான அகதிகள் ஏற்பு வரை ஒரு சரியான வரைவு உருவாக்கினால் வந்து விட்டனர் "சிறுபான்மை , மதச்சார்பின்மை உரிமை போச்சு" என்று.
நான் CitizenshipAmendmentBill2019 முழுமையாக ஆதரிக்கிறேன். கொண்டுவந்த பாஜக தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 293 எம்.பி., ஆதரவோடு நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு. இது எதனால் ஏன் முக்கியமானது என்பதற்கு முழு விளக்கம் நாளை வெளியிடப்படும். இது 1% கூட இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல. சும்மா எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் , மதச்சார்பின்மை என்று மக்களைக் குழப்பும் கூட்டம் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் நாளை பதில் அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...