இன்னும் எளிதாக சொல்லப்போனால் திமுக என்ற கட்சியை எதிர்க்க ஒரு கட்சியாக அதிமுக உருவாகியதுபோல. பாகிஸ்தான் நாடு முஸ்லிம்களுக்கு என பிரிக்கப்பட்டபோது அந்த நாட்டில் கிட்டத்தட்ட 36% இந்துக்கள் குடியிருந்தார்கள். (இங்கு இந்துக்கள் என்பது இந்தியாவில் தோன்றிய மதங்கள், அதன் வாழ்க்கைமுறை எல்லாமே இந்துக்கள் என்பர். அது ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்கா வரை உலகம் முழுவதும் இருந்தது. அந்த வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களை பின்னாளில் தோன்றிய மதங்களில் இருந்து வேறுபடுத்தவே அதற்கு இந்து என்று மேற்கத்தியர்கள் பெயரிட்டனர். மற்ற மதங்கள் மனிதரால் தோற்றுவிக்கப்பட்டது, இந்து என்பது தெய்வங்களால் தோன்றியது என்றும், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வாழ்க்கை உருமாறியது என்றும் சொல்வர்)
அப்படி பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு என்று தோற்றுபிக்கப்பட்டபோது அங்கிருந்து 13% இந்துக்கள் விரடப்பட்டு இந்தியாவில் குடியேறினர் அல்லது கொல்லப்பட்டனர். மீதி 23% இந்துக்கள் அங்கேயே தங்கிவிட்டனர். 23% ஆக இருந்த இந்துக்கள் பல கொடுமைகளால் மதம் மாற்றப்பட்டு, அல்லது கொல்லப்பட்டு இன்று வெறும் 1% மட்டுமே மீதி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு என்ற பாகிஸ்தான் சட்டத்தில் எந்த அடிப்படை உரிமையும் இல்லை. உதாரணமாக ஒரு ஒருவன் இந்து முறைப்படி கல்யாணம் செய்தால் அது செல்லாது. கல்யாணம் செல்லவேண்டும் எனில் முஸ்லிம் முறைப்படி அங்கு கல்யாணம் செய்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.
இப்படி பாகிஸ்தான் தனக்கு என ஒரு முஸ்லிம் விதிமுறையை உண்டுபண்ணி அருகில் இருந்த சிறு ராஜ்யங்களை தன்னோடு சேர்த்தது. இதில் மேற்கு பஞ்சாப் என்ற பகுதி சிந்து நதிகளால் வளம்பெற்ற பகுதி முக்கியமானது. அதை அடுத்து சிந்துநதியின் அரபிக்ககடல் முகப்பில் உள்ள கராச்சியை சுற்றிய பகுதி. இதில் பஞ்சாபியர்கள் தன்னிச்சையாக அரசிலும், அதன் ராணுவத்திலும் என்றும் கோலோச்சுகிறார்கள். அவர்கள் தனக்கென சட்டங்களை இயற்றியபோது மற்ற பகுதிகளுக்கு அடிப்படை உரிமையை கூட கொடுக்கவில்லை.
அதில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதில் மேற்கில் ஈரானை ஒட்டியுள்ள பகுதிகள் பலுசிஸ்தான் என்ற ஒரு பெரிய பகுதி. அவர்களுக்கு எந்த நதியும் இல்லாததால் வறுமை என்பது அவர்களுக்கு என்றும் இருக்கும் வியாதி. ஆனால் கடுமையான உழைப்பாளிகள், அவர்கள் ஆளும் பஞ்சாபி பாகிஸ்தானியர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளனர். இந்த பலுசிஸ்தானின் ஒரு பகுதியை ஈரான் தன்னுடையது என்று இன்றும் சொந்தம் கொண்டாடுவதால், பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் பெரும் பகை. அது இல்லாமல் ஷியா முஸ்லிம்களுக்கும், பாகிஸ்தானின் சன்னி முஸ்லிம்களுக்கும் ஏழாம் பொருத்தம். இதனால் பலுசிஸ்தான் தனக்கு சுதந்திரம் கேட்டு போராடி வருகிறது. இது இந்தியாவின் ஆதரவையும் கோரிவருகிறது. இந்தியாவின் RAW, ஈரான் இவர்களுக்கு உதவுவதாக பாக் பல ஆண்டுகளாக குற்றம் சாட்டுகிறது.
அடுத்து பெஷாவர் எனும் ஆப்கனியர்கள் பகுதி என்று சொல்லப்படும் பகுதி. இதில் ஆஃப்கன், பாக் இருவரும் அதற்கு சொந்தம் கொண்டாட, பெஷாவர் மக்கள் தனி நாடு கோரி போராடுகிறார்கள். இவர்களுக்கும் இந்தியா உதவுகிறது.
அடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரின் கில்கித், ஸ்கர்ட் என்ற இரு பகுதிகள் இன்னும் தனி நாடாகவே உள்ளது. இதற்கு என தனியாக பிரதமரே உள்ளார். இந்த பகுதியை இந்தியா விரைவில் தன்னுடன் சேர்த்துவிடும், எனவே தற்போதைய பிரதமர், நான்தான் PoK கின் கடைசி பிரதமர் என வெளிப்படையாகவே பேசி வருகிறார். ஏனெனில் இந்திய படைகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது, ஆனால் பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாமல் தவிக்கிறது. இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானின் பகுதியிலேயே புகுந்து தாக்கியபோதும், அதனால் எதுவும் செய்ய முடியவில்லை.
அதுமட்டுமல்ல அதன் ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அறன்களாக சொல்லப்படும் கருவிகள் பல வேலை செய்வதில்லை அல்லாது அது மிக பழைய டெக்னாலஜி. அதனால் அது பயணிகள் விமானத்தையும், போர் விமானத்தையும் பிரித்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அதன் தரம் உள்ளது. இதே தரத்தில், அளவில் ஈரான் நாடும் இருந்ததால் அது பயணியர் விமானத்தை தெரியாமல் சுட்டு வீழ்த்தியது. அது நடக்காமல் இருக்கவே பாகிஸ்தான் தன் வான் எல்லையை மூடியது.
பாகிஸ்தானில் பஞ்சாபியரின் அடக்குமுறை என்பது அவர்கள் செல்வந்தர்கள், மற்றும் அதிக மக்கள் என்பதால் அந்த டாமினேசன் தொடர்கிறது. ஆனால் பாகிஸ்தான் தனக்கென ஸ்திரமான கொள்கையோ, அரசோ இல்லாமல், ராணுவத்தின் மூலமே கட்டுப்படுத்தப்பட்டது. அது தவறான வழிகளான இந்திய ரூபாய் நோட்டுக்களை கள்ளத்தனமாக அடித்தல், போதை மருந்து, ஆயுதம் கடத்தல், தீவிரவாதிகளை வளர்க்க முஸ்லீம் நாடுகள் கொடுத்த பணம், ஆஃப்கன் போருக்காக அமெரிக்கா கொடுத்த பணம் எல்லாமே நேரடியாக இராணுவம் பெற்றதால் அது தன்னிச்சையாக பாகிஸ்தானை ஆண்டது. அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் எந்த பெரிய கட்டுப்பாடோ, சுதந்திரமோ இல்லை.
அப்படி தவறான வழிகளில் சம்பாதித்த பாகிஸ்தான், இந்தியாவின் Demonetization க்கு பின் இந்திய ரூபாய்களை அச்சடிக்கும் வாய்ப்பு பரிபோனதிலும் அதற்கு மிகப்பெரிய இழப்பு.
அதன் பொருளாதாரம் கடனுக்கு மேல் கடன் வாங்கியதால், அதன் செலவுகளில் பெரும்பகுதி வட்டி கட்டுவதிலேயே போய்விடுகிறது.
2008 ல் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 1.7% ஆகவும், அதன் பணவீக்கம் 16% ஆகவும் இருந்தது. இது கடந்த 12 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி 3% ஒட்டியும், பணவீக்கம் 12% மேலேயும் உள்ளது. அப்படி இருந்தும் அந்த அரசு தப்பி பிழைத்ததற்கு காரணம் தவறான வழிகளில illegal ஆக சம்பாதித்தால் மட்டுமே தப்பியது. அது இன்று இந்தியாவின் demonitization போன்ற காய் நகர்த்தலால் தனிமை படுத்தப்பட்டு இன்று தன் அரசு ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்கவே இன்று பணம் இல்லாமல் தவிக்கிறது.
அது இதற்கு முன்பு அமெரிக்காவின் ஆஃப்கன் தீவிர வாத எதிர்ப்பு போருக்கு என்று அமெரிக்காவிடம் இருந்து பெற்றுவந்த உதவியும் கடனும், கிட்டத்தட்ட நின்றே விட்டது. சவூதி அரேபியா போன்ற நாடுகள் முஸ்லிம் மதத்தை பரப்பவும், காஷ்மீரை காக்கவும் தீவிரவாதத்திற்கு என்று கொடுத்த பணம் என்பது பெரியதாக இருந்தது, அதுவும் இந்தியாவின் தலையிட்டாலும், இந்தியா இப்போது காஷ்மீரை தன்னோடு இணைத்து கொண்டதால அதுவும் குறைந்துவிட்டது.
இவற்றை தவிர அதன் முக்கிய வருமானம் என்பது விவசாயத்தில் இருந்தே 26% வருமானம் வருகிறது. அதற்கு இந்தியாவின் இமயமலையில் தோன்றும் 5 நதிகளில் இருந்து வரும் நீரே அதற்கு அடிப்படை ஆதாரன். அதில் பாகிஸ்தானுக்கு 60% என்பதும் இந்தியாவிற்கு 40% என்பதும் ஒத்துக்கொண்ட தண்ணீர் பாகப்பிரிவினை. இந்தியா அதில் தன் பகுதியை இதுவரை அந்த 40% த்தை பயன்படுத்தாததால் முழு நீரையும் பாகிஸ்தானே பயன்படுத்தியது. தற்போதைய பயன்பாட்டிலேயே அதற்கு சிந்து என்று சொல்லும் கராச்சிக்கு நீர் கிடைப்பதில்லை. இப்போது இந்திய அரசு தனது 40% சிந்து நீரை பயன்படுத்த போகிறோம் என்று அணைகளை கட்டிவருகிறது. அப்போது பாகிஸ்தானின் விவசாயமும் பெருத்த நஷ்டத்தில் முடிவடையும்.
அதற்கு மேல் இந்திய ராணுவத்துடன் போட்டிபோட்டு அதன் ஆர்மிக்காக செய்துவந்த செல்வுகள் அதற்கு தீராத தலைவலி. தான் வாங்கிய அந்த போர் தளவாடங்களை பராமரிக்கவும், அதற்கு தளவாடங்கள் உபரி பொருள் வாங்கவும் கூட நிதி இல்லை. அப்படி இருக்க அதன் நலிவுற்ற பொருளாதாரத்தை நம்பி உதவிய நாடுகள் Bankrupt ஆகப்போகும் நிலையில் உதவிகளை குறைத்துவிட்டது, அல்லது நிறுத்திவிட்டது. அதற்கு மேல் உதபவுபவர்களிடம், நிறுத்தசொல்லி இந்தியாவும் வற்புறுத்துகிறது. ஆதரிப்பதை நிறுத்தாவிட்டால் இந்தியா அந்த நாடுகளிடன் தன் வர்த்தகத்தை குறைத்துவிட்டது. உதாரணம் மலேசிய பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவு கொடுத்ததால் பாமாயில் இருக்குமதியை குறைத்ததால் அதன் பொருளாதாரத்தில் பெரும் அடி.
அதை தவிர்த்து இந்தியாவின் பலமான வெளியுறவு கொள்கை உலக நாடுகள் அதன் பின்னே நிற்பதால், அடிப்படை வசதி, உணவு இல்லாத பாகிஸ்தான் இன்னும் சில மாதங்களுக்குள் பெரும் உள்நாட்டு கலகங்கள் தோன்றினால், இதுவரை காத்துக்கொண்டு இருக்கின்ற பலுசிஸ்தான், பெஷாவர் தன போராட்டத்தை மேலும் அதிகரிக்கும். அதற்கு இந்தியா, ஈரான், ஆஃப்கன் எல்லாம் உதவுகிறது. அப்போது பாகிஸ்தான் இந்திய எல்லை ஓரம் நிறுத்தி இருக்கும் அதன் படைகளை வடமேக்கில் நகர்த்தியாக வேண்டும். அப்போது இந்தியா PoK என்றபகுதியை தன்னுடன் எளிதில் சேர்த்துவிட காத்திருக்கிறது. இப்படி பாகிஸ்தான் இதன் மூலம் சிறு நாடுகளாக உடையும்.
இதற்கு மூலகாரணம் அதன் இந்தியாவிற்கு எதிரான தீய எண்ணங்கள் மட்டுமல்ல, இன்று உலகில் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு எதிராக அணி திரளும் நாடுகளும் அதன் எதிரியாக மாறியதும் முக்கியமான காரணம். அதன் விளைவுதான் காஷ்மீரை இந்தியா 370 விலக்கி சேர்த்துக்கொண்டபோது ஒவ்வொரு நாடுகளிடமும் கெஞ்சிய போது யாருமே செவிகொடுத்துக்கூட கேட்கவில்லை.
மேலும் அதன் மோசமான பொருளாதார சிதைவுகளை ஊக்குவிக்க இந்தியா சிறு சிறு போர் உரசல்களை எல்லையில் அடிக்கடி செய்யும்போது அது தன் ராணுவத்தை இங்கும் அங்கும் நகர்ததும்போது அது மேலும் பெரும் செலவினங்களை கொடுத்து அதன் ராணுவத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கும். இதுவே இந்தியாவின் வெற்றிக்கும், பாகிஸ்தான் பலுசிஸ்தான், பெஷாவர், சிந்து என்று சிறு சிறு நாடுகளாக உடைவதற்கும் காரணமாகும்.
சீனா, அரேபிய நாடுகள் இதை அனுமதிக்குமா?
சீனா, PoK Billions of Dollars முதலீடு செய்துள்ளது, இந்தியா அதனை தன்னுடன் சேர்த்தபின்னும் அதன் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க ஒத்துக்கொண்டால் சீனா எதற்காக Bankrupt ஆகப்போகும் பாகிஸ்தானின் பக்கம் சாயமுடியாமல் இந்தியா பக்கமே சாயவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் 5G முதலீடுகள் முதல் பெருமளவில் முதலீடுகளை செய்தபின், அது தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது.
அதை தவிர QUAD என்ற நான்கு நாடுகள் (அமெரிக்கா, ஆஸ்திரேலிய, ஜப்பான், இந்தியா) கூட்டு நாடுகளும், தென் சீன கடலில் இந்தியாவின் ஆளுமையும் சீனாவை அதன் குரல்வலையில் கைவத்த நிலையில் அது இன்று தடுமாறுகிறது. அதன் முக்கிய சமீப கால மாற்றமான அருணாசல பிரதேசதின் உரிமைமீது கொண்ட மாற்றம்.
அனுமானமும் யூகங்களும் சரியானால், இந்தியாவில் அடுத்த தேர்தலுக்கு (2024) முன்பு PoK இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தானும் சிறு நாடுகளாக துண்டாடப்பட்டுவிடும்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்! பாகிஸ்தான் தான் 70 ஆண்டுகளாக விதைத்த வினையினை அறுவடை செய்யும் நேரமிது!
31-01-2020
🙏🙏🐶 🙏🙏