Tuesday, January 21, 2020

நடிகைக்கும் திமுகவுக்குமான உறவு அண்ணா காலத்திலே தொடங்கிற்று.

"அவள் ஒன்றும் பத்தினி அல்ல, நான் ஒன்றும் முனிவன் அல்ல" என பகிரங்கமாக திராவிட கருத்துக்களை சொன்னவர் அண்ணா..
இன்னும் என்னவெல்லாமோ நடந்தது, என்னென்ன செய்தி எல்லாமோ வந்தது. அதை திமுக தொடங்கி ராமசந்திரன் இதயகனி என கொண்டாடபட்டபொழுது "அய்யய .. அவனுக கதை பூரா ஆபாசம்...அசிங்கம்" என தைரியமாக சொன்னவர் எம்.ஆர் ராதா
முதலமைச்சராக இல்லாமல் இருந்து , தனக்கு நெருக்கடி வந்திராவிட்டால் கருணாநிதி கனிமொழியினை மகளாக ராஜாத்தியம்மாளை துணைவியாக ஏற்றிருப்பாரா? என்பது சந்தேகமே
ஆட்சியினை காப்பாற்ற அன்று ஒப்புகொண்டார்
இன்னும் எந்தெந்த திராவிட தலைவர்களின் வாரிசு எங்கெல்லாம் வளர்ந்திருக்கின்றதோ யாருக்கு தெரியும்?
சர்வாதிகாரி டிவி செய்திவாசிப்பாளரை கூட விட்டுவைக்கவில்லை என்பதெல்லாம் அக்கால செய்திகள்
ரஜினி வாழ்வில் ரகசியம் என ஏதும் பெரிதாக இல்லை
ஒரு வில்லன் நடிகனாக வளர விரும்பினார் ரஜினி, காலம் அவரை கதாநாயகனாக்கியது
ரஜினியின் வாழ்வினை புரட்டி போட்டவர் முருகபெருமானின் அருள்பெற்ற அந்த சின்னப்பா தேவர்
தேவர்தான் ராமசந்திரனை வளர்த்தார், தேவரும் சிவாஜிகணேசனும் ஒரே சாதி என்றாலும் இருவரையும் சேரவிடாமல் அரசியல் செய்தார் ராம்சந்திரன்
முருகபெருமானின் அருளில் தேவரின் உள்ளுணர்வு அபாரமானது, ரஜினிக்கு மிகபெரும் எதிர்காலம் உண்டு என கணித்து தன் படங்களில் அமர்த்தினார்
தன்னை போல ரஜினியினை தேவர் உருவாக்குகின்றார் என அஞ்சினார் ராம்சந்தர்
விளைவு சந்தேகம் மேலோங்கிற்று, ரஜினியின் வளர்ச்சி அவருக்கு பிடிக்கவில்லை. தன் ரகசிய போலீஸ் 100 படத்தை சிலர் ரஜினி வைத்து 1985களில் முடிக்க முயன்றபொழுதெல்லாம் விரட்டி விட்டார் ராம்சந்தர்
பில்லா படத்தில் ரஜினியுடன் நடிக்க ஜெயாவும் , லதாவும் போட்டி போட்டபொழுது ஆத்திரத்தின் உச்சியில் இருந்த ராமசந்திரன் சில மறைமுக நெருக்கடிகளை கொடுத்தார்
லதா விவகாரம் அப்பொழுது வந்ததே.
இன்று அஜித்துக்கு இருக்கும் செல்வாக்கை விட பெரும் ரசிகைகள் ரஜினிக்கு இருந்தனர், அதில் நடிகை கல்லூரிமாணவிகள் என பலர் இருந்தனர்
லதாவும் அதில் ஒருவரே, லதாவின் தேவர் ஜாதி வாக்கு இன்னும் பல காரணங்களுக்காக லதா மேல் ஒரு கண் வைத்திருந்தார் ராமசந்திரன் , அதனால் ரஜினி மேல் பாய்ந்தார்
அப்பொழுதும் ரஜினி மகா நிதானமாக இருந்தார், ஆம் அப்பொழுதும் கருணாநிதியின் நாத்திக கூட்டம் பக்கம் அவர் செல்லவில்லை, அவர்போக்கில் ஒதுங்கி இருந்தார்
ரஜினி ஒரு மகாசக்தி எனும் அச்சம் ஆட்சியாளருக்கு வந்தது 1985களிலே
ரஜினியினை ராம்சந்தர் ஒடுக்க முயன்றார் ஒதுங்கி தப்பினார் ரஜினி, அப்படியே கருணாநிதி வளைக்க முயன்ற பொழுது நழுவினார்
ராமசந்திரனின் தொடர்ச்சியாக ஜெயா அதையே செய்தார், இம்முறை ரஜினியினை கருணாநிதி விழுங்க முயன்றபொழுது மூப்பனாரை காட்டி அட்டகாசமாக நழுவினார் ரஜினி
கருணாநிதி முக ஸ்டாலின் போல அல்ல, ஸ்டாலின் அடிப்பது வெளிதெரியும், கருணாநிதி உறவென சொல்லியே நயமாக கத்தி இறக்குவார், வலிக்காமல் கொல்வது அவருக்கு கலை
அந்த வலையிலும் வெளிவந்தார் ரஜினி
40 வருடமாக எதிர்ப்பு ஒன்றையே அரசியலிலும் சினிமாவிலும் இன்னும் பலவழிகளில் கண்டாலும் ரஜினி அதே முதலிடத்தில் இருக்க காரணம் அவரின் கர்மபலன் அல்லது கடவுளின் கருணை
40 வருடமாக ஒதுங்கி சென்ற ரஜினி இப்பொழுது திரும்புகின்றார் என்றால் ஏதோ முடிவு எடுத்திருக்கலாம், தீர்க்கமான முடிவு ஒன்றுக்கு அவர் வந்திருக்கலாம்
பெரியார் மணியம்மை கழுத்தில் மாலையிட்டது அவர் சொந்த விஷயம்
அண்ணா தான் முனிவனல்ல என நடிகையிடம் உணர்ந்தது அவரின் பகுத்தறிவு
ராம்சந்திரன் மாற்றான் மனைவி என தெரிந்தும் ஜாணகியினை மணந்தால் அது தியாகம்
கருணாநிதியிடம் ராசாத்தியம்மாள் மயங்கினால் அது அவரின் திறமைக்கான அங்கீகாரம்
ஆனால் ரஜினிக்கு காதலோ மயக்கமோ வந்தால் அது பொறுக்கிதனம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...