Thursday, January 30, 2020

நம்பிக்கை.

மோட்சம் கிடைப்பதற்காக
இறைவனை வேண்டுவதும்
ஆலயங்கள் செல்வதும்
இயல்புதானே...
பாவங்கள் களைவதற்காக
புனிதநதிகளில் நீராடுவதும்
தீர்த்தங்களை தெளிப்பதும்
நியதிதானே...
ஆசைகளை தடுத்திடவே
புத்தரை வாசிப்பதும்
போதியை அமைப்பதும்
வழக்கம்தானே...
போதைகள் அகற்றிடவே
மனதை ஒருமுகப்படுத்துவதும்
நல்ல செயல்களில் ஈடுபடுவதும்
பழக்கம்தானே...
பகைவர்களை வென்றிடவே
பக்குவமாய் வாழ்வதும்
சுய பல பலவீனங்களை அறிவதும்
நியாயம்தானே...
எல்லாம்சரி.. நயமாய் வாழ்வதற்கும்
நலமாய் வாழ்வதற்கும் நம்பிக்கை மட்டுமே போதும்...
மூட நம்பிக்கை வேண்டாமே!
இயல்போ நியதியோ
வழக்கமோ பழக்கமோ
நியாயமோ வாழ்க்கையோ
அவநம்பிக்கை வேண்டாமே!
சுழலும்பூமியின் தன்னம்பிக்கை
வீசும்தென்றலின் தன்னம்பிக்கை
ஓடும்மேகத்தின் தன்னம்பிக்கை
அது உன் நம்பிக்கையாய் இருக்கட்டும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...