Thursday, January 23, 2020

அதிகாரவர்க்கம்??இதுலரொம்பதெளிவா?இ௫க்கானுங்க?


ஆன்மீகம்
நீங்கள் ஆலயத்திற்கு செல்லும்போது பார்த்தீர்களானால் வழியில் சிறு சிறு தெய்வங்கள், சிலைகள் இருக்கும். உள்ளேதான் மூலவர் இருப்பார்.
நீங்கள் பாட்டிற்கும் நேரே உள்ளே சென்று மூலவரிடம் உங்கள் கோரிக்கையை சொல்லிவிட்டு வந்தால் ஒன்றும் நடக்காது.
ஏன்?
வழியில் அவர்கள் ஏன் உட்கார்ந்திருக்கிறார்கள். உங்களை வேடிக்கை பார்ப்பதற்கா.
அவங்களை கவனிக்கனும்
என்னாது கவனிக்கனுமா அப்படின்னா!
ஆமா! ஒரு 100 ரூபாய் நோட்ட நீட்டுனா. வந்த வேலை முடிஞ்சுடும்.
அட கவனிக்கனும்னா அந்த கவனிப்பு இல்லைங்க
அப்புறம்.
கவனிக்கறதுன்னா. மொதல்ல அவங்களை வழிபடனும் அவிங்க கிட்ட நம்ம பிரச்சனைகளை சொல்லி அப்பாயின்மென்ட் வாங்கனும். அப்புறமா உள்ளே போயி மேலதிகாரியை பார்க்கனும். அப்பதான் நாம் வந்த வேலை ஈசியா முடியும்.
நம்ம பாட்டுக்கும் நேரே உள்ள போனேன்னு போனால். வெளியில் இருக்கறவுங்க இவன் ரொம்ப திமிர் புடிச்ச ஆளு, யாரையும் மதிக்க மாட்றான். இவனை ரிஜக்ட் பண்ணிடுங்கன்னு தலைவருக்கு தகவல் அனுப்பிடுவாங்க.
நாம வாசலை தாண்டறதுக்குள்ள செய்தி போயிடும்.
அப்புறம் நீங்க காட்டு கத்து கத்தினாலும் வேலைக்காகாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...