Thursday, January 30, 2020

வருகிற 5-ந்தேதி கும்பாபிஷேகம்: வெண்ணாற்றில் இருந்து நாளை புனிதநீர் எடுத்து வரப்படுகிறது

வருகிற 5-ந்தேதி கும்பாபிஷேகம்: வெண்ணாற்றில் இருந்து நாளை புனிதநீர் எடுத்து வரப்படுகிறது
பெத்தண்ணன் கலையரங்கில் சாமிசிலைகள் அமைக்கப்பட்டு யாகசாலை தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.



















தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதற்காக முதல்கால யாகபூஜை வருகிற 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து 2-ந் தேதி காலை 8 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், மாலை 6 மணிக்கு 3-ம் கால யாகபூஜையும், 3-ந் தேதி காலை 9 மணிக்கு 4-ம் கால யாகபூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகபூஜையும், 4-ந் தேதி காலை 8 மணிக்கு 6-ம் கால யாகபூஜையும், மாலை 5 மணிக்கு 7-ம் கால யாகபூஜையும் நடக்கிறது.

5-ந் தேதி காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகபூஜை நடக்கிறது. தொடர்ந்து காலை 7 மணிக்கு மகா பூர்ணாஹுதீயும், யாத்ரா தானமும் நடக்கிறது. காலை 7.25 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம்புறப்பாடு நடக்கிறது. காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

யாகபூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு தஞ்சை பள்ளியக்கிரகாரம் வெண்ணாற்றில் இருந்து கலசத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு தஞ்சபுரீஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து யானை மீது புனிதநீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. இந்த ஊர்வலம் கரந்தை, கொடிமரத்துமூலை, கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, சோழன்சிலை வழியாக பெரியகோவிலை வந்தடைகிறது. ஊர்வலத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம் போன்றவை நடக்கிறது. ஓதுவார்களால் திருமுறை பாடப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...