Saturday, January 25, 2020

குடியரசு தினம் : தேசியக் கொடி ஏற்றினார் கவர்னர்.

நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.



சென்னை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள திடலில் கவர்னர் பன்வாரிலால் தேசியக் கொடியை ஏற்றினார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏற்றி வைத்த கவர்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.



முப்படை, காவல்துறை, என்சிசி என 48 படைகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து குடியரசு தினத்தை முன்னிட்டு காந்தியடிகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...