Friday, January 24, 2020

நிச்சயம் காலம் பதில் சொல்லும் ...

இங்கு ரஜினிகாந்த் பேசியது சரி , தவறு என்பதை எல்லாம் ஓராமாக வைத்துவிட்டு ஒரு சாதாரண குடிமகனாய் கடந்த 7 நாட்களாக நடந்த நிகழ்வை பார்க்கும் போது ... தமிழக அரசியல் நிலைமை அப்பட்டமாக புரிகிறது ...
ஆளும்கட்சி , எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் தமிழக ஊடகங்கள் முதற்கொண்டு ரஜினிகாந்த் என்ற ஆளுமையை ஒட்டு மொத்தமாக எதிர்க்கிறார்கள் என்றால்.........
இவ்வளவு காலமாக இங்கு எப்படிப்பட்ட அரசியல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை இனியும் அறியாமல் இருப்போமானால் இனி வரும் காலம் நமக்கும் நமது சந்ததிகளுக்கும் நிச்சயம் நெருக்கடி கொடுப்பவையாக தான் இருக்கும் ...
ஒருபுறம் ரஜினி எதிர்ப்பு என்றால் ...
மறுபுறம் ரஜினி எதிர்ப்பிற்கு ஆதரவு நிலைபாடு ..
ஆக மொத்தம் இங்கு உண்மைக்கும் , நேர்மைக்கும் , மக்கள் நலனுக்கும் 1% கூட மதிப்பு இல்லை .. இவர்களை நம்பி இவர்கள் பின்னால் இருக்கும் கூட்டமும் எது சரி , எது தவறு என்பதை எல்லாம் ஆராய மறுக்கிறது ...
என்னை பொறுத்தவரையில் ரஜினிகாந்த் இன்றே ஒரு அரசியல்வாதியாக வெற்றி பெற்றுவிட்டார் .. இனியும் இவரின்
கொள்கை என்ன ??
கோட்பாடு என்ன ??
என்ன செய்ய போகிறார் ??
அரசியலுக்கு வருவாரா மாட்டாரா ??
என்று தனிமனித விமர்சனம் செய்து கொண்டு இருப்போமானால் நமது தலையில் நாமே மண்ணை வாரி போட்டு கொள்கிறோம் என்பதே பொருள் ...
ஏனென்றால் அவர் ...
நல்லதே நினைப்போம்
நல்லதே பேசுவோம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்
என்பதை என்றோ சொல்லிவிட்டார் ...
இதுவரை அவர் சொன்னதை செய்யாமல் இருந்ததும் இல்லை ...
செயல் இன்று இனிதாய் ஆரம்பித்திருக்கிறது ...
காத்திருங்கள்..
நிச்சயம் காலம் பதில் சொல்லும் ...
என்றும் தலைவர் ரஜினிகாந்த் வழியில் ..
ஓர் காவலனாக பயணிக்க காத்திருக்கிறேன் 🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...