Wednesday, January 22, 2020

தூதுவளை - ரசம்.


தூதுவளை
தூதுவளை அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.
தூது வேளையை யுணத் தொக்கினிற் றொக்கிய
வேதையா நொயெலா மெய்யைவிட் டகலுமே
(தேரையர் காண்டம்)
தூதுவளைக் கற்பம்
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.
தூதுவளை - ரசம்
தூதுவளை இலை - ஒரு கையளவு ( 40 - 50 இலை )
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்க்ரன்டி
பூண்டு - 5 - 6 பல் ( பெரிய பூண்டு )
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
புளி - பெரு நெல்லியளவு ( தக்காளி வேணாம்ங்க)
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
புதினா - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வத்தல் - 4 பெரியது
கொத்த மல்லி - ஒரு கையளவு
செய்முறை:
வானலி அல்லது பானில் ஒரு தேக்கரண்டி எண்ணையை சுடவைத்து வைத்து மிளகு, சீரகம், பூண்டு போட்டு தாளிக்கவும்
.
பின்பு அதிலே தூதுவளை இலைகளைப் போட்டு நன்கு வதக்கிய பின் எடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ( அம்மி என்றால் சாலவும் நன்று )
புளியை தண்ணீரில் நன்றாக கரைத்து அதில் உப்பையும் ஏற்கனவே அரைத்துள்ளவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
பானில் எண்ணெய் விட்டு காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு நாலு வதக்கு வதக்கி கரைத்தவற்றை ஊற்றி கொதி வந்தவுடன் பெருங்காயம், புதினா போட்டு இன்னோரு கொதி கொதிக்க வைத்து கொத்தமல்லி போட்டு இறக்கி வைக்கவும் .
தூதுவளை பருப்பு ரசம்
தூதுவளை இலை - 6
தக்காளி - 3 கனிந்த பழமாக
பச்சை மிளகாய் - 1 கீறியது
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை, கொத்தமல்லி
இலை - சிறிதளவு
ரசப் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த தெளிவான நீர் - 1 கப்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தூதுவளை இலையைச் சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி அத்துடன் பூண்டைச் சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் பொடித்துக் கொள்ளவும்.
பருப்பு நீரில் தக்காளியைக் கரைத்து, அதில் பொடித்த தூதுவளை இலை, பச்சை மிளகாய், ரசப்பொடி, மஞ்சள்தூள், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி ரசம் நுரைத்து வரும்பொழுது இறக்கி, கொத்தமல்லி இலையைத் தூவவும்.தொண்டைக்கு இதமான, சுவையான தூதுவளை ரசம் தயார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...