நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை நாகரீகம் என்ற பெயரில் நாம் இன்று கடைபிடிக்காததால் நம் வாழ்வில் எண்ணற்ற பிரச்சனைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம்.


லக்கனாதிபதி பாதிக்கப்பட்ட வரும், லக்கண திரிகோணங்களில் (1,5,9)ல் மாந்தி உள்ளவருக்கும்.
சாதகத்தில் சனி,ராகு தொடர்பு பெற்றவருக்கும், நடப்பு திசா புத்தி சரி இல்லாதவருக்கும்
குறிப்பாக ராகு திசை, புத்திகளிலும்,சனி திசை, புத்திகளிலும்,
கோச்சாரம் சரியில்லாத நிலையிலும் கண் திருஷ்டி ஒருவரை பாதிக்கிறது.

நமது உடலில் உள்ள ஏழு ஆதார சக்கரங்கள் ஏழு விதமான வண்ணங்களை வெளியிட்டு (VIBGYOR)
சுழன்று கிரகங்களின் கதிர் வீச்சை பெற்று நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன.
ஏழு சக்கரமும் நமது உடலில் உள்ள உறுப்புக்களையும், மனதையும் கட்டு படுத்துகின்றன.
இறந்தவர்களின் உடலில் ஏழு வண்ணங்கள் வெளிபடாமல் கருமை நிறம் மட்டும் வெளிப்படும்.
நமக்கு ஏதோனும் நோய் பாதித்து இருந்தால் அந்த உறுப்புக்கு உரிய சக்கரம் கதிர் வீச்சு குறைந்து அதற்கு உரிய வண்ணத்தை வெளிப்படுத்தாது.
வெளிநாட்டில் இந்த ஆராவை (சக்கர கதிர் ) க்ரில்லியன் கருவி மூலம் புகைப்படம் எடுத்து உள்ளார்கள்.
பிறர் வளர்சியை பொருக்காதவரும், சாதக ரீதியாக கொடும் பார்வை உள்ளவரின்
உடம்பில் இருந்தும்,
அவரின் மனதில் இருந்தும்,
அவரின் கண்ணில் இருந்தும் வெளிப்படும் கெட்ட கதிர் வீச்சானது நமது உடலில் உள்ள ஆதாரசக்கரங்களை பாதிக்கிறது.
கோள்களின் கதிர் வீச்சால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நமது ஆதார சக்கரங்களை
இந்த நபர்கள் வெளியிடும் கதிர் வீச்சும் சேர்ந்து நமது உடலையும், மனதையும் பாதிக்கிறது.
இதனால் மனகுழப்பம்,உடல் அசதி,மறதி, சண்டை சச்சரவு, தொழில் வீழ்ச்சி, உடல் நிலை பாதிப்பு போன்றவை ஏற்படும்.


சனிக்கு உரிய எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்எண்ணையில் குளிக்க வேண்டும்.
குளித்தும் நம் உடம்பின் மீது கண்ணுக்கு தெரியாத படலமாக உள்ள எள்ளின் மூலக்கூறுகள்
சனி கிரகத்தில் இருந்து வரும் கதிர் வீச்சால் நமது ஆதார சக்கரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க கவசமாக இருக்கும்.
உடல் குளிர்ச்சி அடைந்து பித்தத்தினால் வரும் நோய்கள் வராது. கண் திருஷ்டி தாக்காது.

புருவ மத்தியில் பெண்கள் குங்குமும்,
ஆண்கள் திருச்சூரணம்(அ) குங்குமம் (அ) திருநீர் கட்டாயம் அணிய வேண்டும்.
இப்படி வைப்பதால்
ஆக்னா என்ற கருநீல நிற வண்ணத்தை வெளிப்படுத்தும் ஆதார சக்கரம்
பிறரின் பார்வையாலும்,கிரக கதிர் வீச்சாலும் பாதிக்கப்படாமல் இருக்கும்.
இதனால் பயம், குழப்பம்,கவலை வராது. யாரும் உங்களை வசியம் செய்ய முடியாது. மெஸ்மரிசம் செய்ய முடியாது.திருஷ்டி பார்வை செயல் இழக்கும்.

திருஷ்டி கழிப்பதால் அசதி,மறதி இருக்காது. உற்சாக எண்ணம் வரும்.
சிந்திக்கும் திறன் நன்றாக இருந்தால்
நமது செயல் சிறக்கும்
செயல் நன்றாக இருப்பதால்
வருமானம் பெருகும்
வருமானம் பெருகினால்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
வீட்டில் இருப்போர் அனைவரும் வாரந்தோறும் திருஷ்டி கழித்துக் கொள்ள வேண்டும்.
கடல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து குளியுங்கள் வாரம் தோறும். அசதி நீங்கி புத்துணர்வு கிடைப்பதை உணரலாம்.
வீட்டிலும், கடையிலும் வாரம் தோறும் கடல் நீர் அல்லது கல்உப்பு நீர் கலந்து தரையை கழுவுங்கள்.
வாசலில் படிகாரம் , கருடக்கிழங்கு கட்டுங்கள்.
எலும்மிச்சை பழத்தை தலையில் வைத்து மூன்று முறை சுற்றி அதை வெட்டி முச்சந்தியில் போடுங்கள்.

நமது ஆரா 5அங்குலம் வரை பரவும்
சித்தர்களின் ஆரா 50 அடியைத் தாண்டி பரவும்.
சித்தர்கள் அருகில் சென்றாலோ அல்லது அவர்களின் சமாதிகளுக்கு சென்றாலோ மனம்லோசாக உணர்வதும் உடல் நிலை சரியாவதும் அவர்களின் ஆரா நமது ஆராவை சரி செய்வதால் தான்.
சித்தர்களின் சமாதிகள் சக்தி மிக்க
ஆராவை வெளியிட்டு நமது எண்ணங்களையும், உடல் நலத்தையும் சரி செய்து நம் உடலில் உள்ள கெட்ட சக்தியை வெளியேற்றும் வல்லமை கொண்டது.
சென்னை, திருவான்மியூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதி செல்லுங்கள் வாழ்வில் வளம் பெறுங்கள்
சண்முக கவசம், குமாரஸ்தவம் போன்ற 6666 பாடல்களை இயற்றி பல அற்புதங்களை நிகழ்த்திய சித்த புருஷர்.
No comments:
Post a Comment