இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இளையராஜா
இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய அனுமதி கேட்டிருந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. ஆனால் அவரது அறையிலிருந்த பொருட்கள், விருதுகள், இசைக்கருவிகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டதால் அவர் மிகுந்த வருத்தம் அடைந்து, அங்கு செல்லவில்லை.

இதுகுறித்து, இளையராஜா மன அழுத்ததில் இருப்பதாகவும் அதனால் அவர் பிரசாத் ஸ்டுடியோ செல்லவில்லை எனவும் தகவல் வெளியானது. பின்னர் இளையராஜாவின் பொருட்கள் மொத்தமும் பிரசாத் ஸ்டுடியோவிலிருந்து ஒரு லாரியின் மூலம் இல்லத்திற்கு அவரது உதவியாளர்கள் எடுத்துச் சென்றார்கள்.
இந்நிலையில் இளையராஜாவின் ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அதில், தமிழக அரசே இசைகடவுள் இளையராஜா அவர்களின் இசைச் சொத்துகளை சூறையாடிய பிரசாத் ஸ்டுடியோ கும்பலைக் கைது செய்! 40 ஆண்டுகாலமாக இசைஞானி பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோவை அரசுடைமையாக்கி இசை மியூசியத்தை உருவாக்கி என்று கூறிக் கீழே இசைஞானி பக்தர்கள் இசைஞானி இசையால் இணைந்தோம் - வாட்ஸ் ஆப் குரூப் சென்னை என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment