Monday, May 31, 2021

விபூதி உருவான கதை.

 பர்னநாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணைத் திறந்தான்.

அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவை
களும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது.
பசியால் முகம் வாடி இருந்தவனைக் கண்ட பறவைகள் பழங்களைப பறித்து பர்னநாதன் முன் வைத்தது.
இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான்.
இப்படியே பல வருடங்கள் கடந்தோடியது.
தவத்தை முடித்து கொண்டு சிவ வழிபாட்டை தொடங்கினான்.
ஒருநாள் தர்ப்பைபல புல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு இரத்தம் கொட்டியது.
ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. குழந்தைக்கு ஆபத்து என்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன் தான்.
சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி , பர்னநாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்…. ?!
இரத்தம் சொட்டிய இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான் பர்னநாதன்.
இரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்டச் செய்த தாங்கள் நான் வணங்கும் சர்வேஸ்வரன் என்பதை நான் அறிவேன்.
இந்த அடியேனுக்கு தங்கள் சுயஉருவத்தை காணும் பாக்கியம் இல்லையா ?“ என்று வேண்டினான் பர்னநாதன்.
ஈசன் தன் சுயரூபத்தில் காட்சிக் கொடுத்தார்.
உனக்காகவே இந்த சாம்பலை உருவாக்கினேன். அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி" என்று அழைக்கப்படட்டும்.
உன் நல்தவத்தால் விபூதி உருவானது.
அக்னியை எதுவும் நெருங்க முடியாததை போல இந்த விபூதியை பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்ட சக்திகள் எதுவும் நெருங்காது. விபூதி என் ரூபம். அதற்கு நீயும் துணையாக இருந்த வா“ என்று ஆசி வழங்கினார் சிவபெருமான்.
விபூதியை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் சேர்த்து எடுத்து மோதிர விரலால் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும்.
ஆனால் கட்டை விரலும் நடுவிரலும் சேர்ந்து விபூதியை எடுக்கக்கூடாது. கட்டைவிரலாலும் நெற்றியில் விபூதியை வைக்க கூடாது என்கிறது சிவபுராணம்.
விபூதியால் என்ன நன்மை? என்று
ஸ்ரீ இராமர் , அகத்திய முனிவரிடம் கேட்டார்.
பகை, தீராத வியாதி , மனநல பாதிப்பு , செய்வினை பாதிப்பு இப்படி எது இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால் அந்த பிரச்சனைகள் விலகும் “ என்று அகத்திய முனிவர்
ஸ்ரீ இராமருக்கு உபதேசம் செய்தார்.
ஸ்ரீ மகா லஷ்மிக்கு உகந்ததும் விபூதி. அதனை விரும்பி விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள். திரு என்றால் மகாலஷ்மி.
அதனால்தான் விபூதியை திருநீறு என அழைக்கிறோம்.
மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு காண இனியது நீறு கவினைத் தருவது நீறு தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே
நமசிவாய வாழ்க 🙏 சிவமே ஜெயம் சிவமே. எம் பெருமானே உன்னை பேசா நாள் எல்லாம் பிறவாத நாளே
அகிலம் காக்கும் அண்ணாமலையார் மலர் பாதத்தில் ஈசனிடம் யாசகியின் நன்றியுடன் கோடானு கோடி ஆத்ம நமஸ்காரம் ஈசனே 🙏🙏
ஆலவாயர் அருட் பணி மன்ற குருவான என் அன்பு தந்தையே ஆத்ம நமஸ்காரம்.
வரமாக வந்த என் இனிய ஈசனே உன் இனிய நினைவில் உன் ஆசியுடன் இனிய சிவ காலை வணக்கங்கள்.
May be an image of text that says 'சிவகாலை வணக்கங்கள்'

சர்தாம்பா . நாங்க வயகாட்டுக்கு நடுவிலேயே கான்க்ரீட் போட்டு சூட்டிங் எடுத்தவன்க... தெர்யுமா உனிக்கு.

 செட்டிங்லாம் ரெடி பண்ண

தெரிஞ்சவனுங்களுக்கு அதை
எங்க செட் பண்ணனும்னு
தெரியாம போனதுதான் சோகம்.
மக்களே நன்றாக பாருங்க
இதுளையும் நலம் விசாரித்து
ஆய்வு செய்வதிலும்
1) நோயாளி அருகில் ஆக்சிஜன்
சிலிண்டர் இல்லை
2) நோயாளிகள் நல்ல
ஆரோக்கியமான நிலையில்
இருப்பது போல் இருக்கிறார்கள்
3) நோயாளி கையில் டிரிப்
போட்டதுக்கு அடையாளமாக
உள்ளது ஆனால் டிரிப்பாட்டில்
ஸ்டாண்ட் இல்லை
ரிசப்சன்ல (Reception la)
எமர்ஜென்சி வார்டை செட்
பண்ணிருக்கானுக
முட்டு குடுக்கும் உபி நிலமை
தான் பாவம்.
No photo description available.

கருப்பு இல்லாமல் வெள்ளை மட்டும் கணக்கில் எடுத்ததில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அதானி இருக்கின்றனர்-

அதுமட்டுமல்ல, ஆசிய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்-
இது போன்ற செய்திகள் வெளியானால் உடனே நமது தமிழக தாலிபான்களும், அல்லேலூயாக்களும், உடன்பிறப்புகளும் ஓடிவந்து இவர்கள் இருவரையும் பெற்று வளர்த்து உருவாக்கி பணக்காரர்களாக்கியதே மோடிதான் என்றும், மோடி ஆட்சியில் இருப்பதே இவர்களுக்காகத்தான் என்பது போலவும் விமர்சனங்கள் செய்வர் -
என்னவோ 2014-க்கு முன்பு இவர்கள் இருவரும் ரயில்களில் பாட்டுப்பாடி பிச்சையெடுத்துக் கொண்டிருந்தது போலவும், மோடி பிரதமரான பிறகு இவர்கள் இருவரையும் வளர்த்துவிட்டது போலவும் பேசுவார்கள் -
அடேய்களா,
13 வருட முதல்வர், 7 ஆண்டுகள் பிரதமர் என்று தொடர்ச்சியாக 20 வருடங்கள் அதிகாரத்தில் இருக்கும் மோடியின் தாய் இன்னும் கூட ஆட்டோவில்தான் சென்றுகொண்டிருக்கிறார்-
தன்னுடைய சொந்த தாய், உடன்பிறந்தவர்கள் குடும்பத்திற்கே சொத்து சேர்க்க உதவாத பிழைக்கத் தெரியாத பிரதமர் மோடி என்ன டேஷ்க்கு அம்பானிக்கும், அதானிக்கும் சொத்து சேர்த்துக் கொடுக்கனும்னு முரசொலி படிக்கற எவனும் சிந்திச்சுக்கூட பார்க்க மாட்டான்-
ஆனால், உண்மையில் அம்பானியின் சாம்ராஜ்யம் வளர்ந்ததே காங்கிரஸ் ஆட்சிகாலத்தில்தான், அதுமட்டுமல்ல முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸை பின்தள்ளி 12 மாதங்கள் முதலிடத்தில் இருந்தது 2007 காலகட்டத்தில் அதுவும் காங்கிரஸ் ஆட்சியில்தான் -
ஒரு நாடு முன்னேற தொழிலதிபர்கள் தேவை எனவே நான் முரசொலி வாசகர்கள் போல் காங்கிரஸை குறைகூற மாட்டேன்-
அம்பானியும், அதானியும் இல்லையென்றால் இங்கே சில கோடி மக்கள் பிச்சைதான் எடுக்க வேண்டும் -
இந்த நிமிடமே இவர்கள் இருவரும் தங்கடைய அனைத்து தொழில்களையும் இழுத்து மூடிவிட்டு வீட்டில் காலை ஆட்டிக்கொண்டு ஓய்வெடுத்தால் கூட பத்துத் தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிட முடியும் -
எனக்குத் தெரிந்து கம்யூனிஸ்ட்டுகளின் தொல்லையால் இதேபோல ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வளித்து வந்த நான்கு பஞ்சாலைகள் ஒரே நாளில் மூடப்பட்டன_
ஆம், பழனி அருகே VK மில்ஸ் என்ற பஞ்சாலை மணி நாயக்கர் என்பவரால் நடத்தப்பட்டு வந்தது அந்த மில்லின் பெயராலேயே அந்த ஊரும் அழைக்கப்பட்டு வந்தது, அந்த ஊர் உருவானதே அந்த மில்லால்தான் -
இதேபோல இவருக்குச் சொந்தமாக இதேபோன்று நான்கு இடங்களில் பஞ்சாலைகள் இருந்தன, நேரடியாக குறைந்தது ஐந்தாயிரம் குடும்பங்களுக்கும் மறைமுகமாக சில ஆயிரம் பேர்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கிய நிலையில் தொடர்ந்து தொழிற்ச்சங்கங்களின் தேவையற்ற நெருக்கடிகளால் விரக்தியுற்ற மணிநாயக்கர் இருபது வருடங்களுக்கு முன்பு ஒரே நாளில் பஞ்சாலைகளை இழுத்து மூடினார் -
தினமும் மூன்று ஷிப்ட்டும் கையில் உணவுக் கூடையுடன் நூற்றுக்கணக்கானோர் அமர்ந்திருந்த மில்கேட்டில் எதிரில் வரிசையாக சிகப்புக் கொடிகள் நடப்பட்டன_
நடுத்தெருவுக்கு வந்தன ஐந்தாயிரம் குடும்பங்கள், அவர்களில் பலர் இன்றும் வேலைகள் அமையாமலும், செக்யூரிட்டிகளாகவும் வேலைக்குச் செல்வதை நான் நேரடியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் -
ஆனால், அந்த மில் ஓனர் மணிநாயக்கர் இன்றுவரை வீட்டில் அமர்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்-
ஆகவே, எதற்கெடுத்தாலும் அம்பானி ஒழிக, அதானி ஒழிக, கார்பரேட்டுகள் ஒழிக என்று கோஷம் போடும் போராளிகளே உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் -
அவர்கள் இல்லையென்றால் நீங்கள் பிச்சை கூட எடுக்க முடியாது, ஏனென்றால் பிச்சை போடக்கூட எவனும் இருக்க மாட்டான் ஜாக்கிரதை -
தேசப்பணியில் என்றும் -
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை .

 IT கட்டி விட்டேன்

GST கட்டி விட்டேன்
VAT கட்டி விட்டேன்
CST கட்டி விட்டேன்
Service tax கட்டி விட்டேன்
Excise duty கட்டி விட்டேன்
Customs duty கட்டி விட்டேன்
Octroi கட்டி விட்டேன்
TDS கட்டி விட்டேன்
ESI கட்டி விட்டேன்
Property tax கட்டி விட்டேன்
CGT கட்டி விட்டேன்
Water tax கட்டி விட்டேன்
Professional tax கட்டி விட்டேன்
Road tax கட்டி விட்டேன்
Corporate tax கட்டி விட்டேன்
STT கட்டி விட்டேன்
Educational cess கட்டி விட்டேன்
Wealth tax கட்டி விட்டேன்
TOT கட்டி விட்டேன்
Capital gain கட்டி விட்டேன்
Congestion levy கட்டி விட்டேன்
TOLL GATE Fee/fast track மாமூல் கட்டி விட்டேன் 🥴😓🥵
இதுக்கு பேசாம வெள்ளைக்காரன்கிட்ட அடிமையாகவே இருந்து இருக்கலாமே டா
அவன் கேட்டது வெறும் 3% தான் நீ கோவணத்தையே கூட விடாம உருவுற.
May be an image of 2 people and people standing

பி.கே. ரெக்கமண்ட் செய்த பவர்ஃபுல் பதவி: சபரீசனுக்கு கொடுக்க ஆலோசனை!

 தமிழக அரசின் முக்கிய முகமாக ஸ்டாலின் மருமகன் சபரீசனை டெல்லிக்கு அனுப்பலாமா என்ற பேச்சுகள் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் மனசாட்சியாக அறியப்பட்ட மறைந்த முரசொலி மாறன் திமுகவின் டெல்லி அரசியலில் முக்கியப் பங்காற்றினார். அவருக்கு அடுத்து பலர் திமுகவின் சார்பில் டெல்லியில் முகாமிட்டிருந்தாலும் அவரது இடத்தை இதுவரை யாராலும் நிரப்பவியலவில்லை.
இந்த நிலையில், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் திமுக, டெல்லியில் ஒரு பவர் செண்டரை உருவாக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அதற்காக கலைஞர் கருணாநிதியின் பாணியில் ஸ்டாலினின் நிழலாக வலம் வரும் அவரது மருமகன் சபரீசனை டெல்லி அனுப்ப பேச்சுவார்த்தைகள் ஓடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுகவை பொறுத்தவரை ராஜ்யசபாவுக்கு செல்லப் போவது யார் என்ற ரேஸ் ஓடிக் கொண்டுள்ளது. அதில், ஓபிஎஸ்-க்கு டஃப் கொடுத்த தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட சிலரது பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த பதவிக்காக திமுகவில் பலரும் காய் நகர்த்திக் கொண்டிருக்க ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு அந்த பதவியை கொடுக்கலாமா என்று சில பேச்சுகளும் ஓடியுள்ளது.
ஆனால், ஏற்கனவே வாரிசு அரசியலில் சிக்கித் தவித்து வரும் திமுகவுக்கு இது கூடுதல் தலைவலியை கொடுக்கும் என்பதாலும், பத்தோடு பதினொன்றாக டெல்லிக்கு செல்வதையும் சபரீசன் விரும்பவில்லை என தெரிகிறது. இருப்பினும், கேபினட் அமைச்சருக்கான அந்தஸ்தோடு டெல்லியில் இருந்தால் தமிழக நலனுக்கான இன்னும் வீரியமாக செயல்படலாம் என்பதோடு, ராஜ்யசபா, லோக்சபா எம்பிகளை விட சில வகைகளில் கூடுதல் அதிகாரம் பெற்ற தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை பெறலாம் என்ற யோசனையிலும் சபரீசன் தரப்பு உள்ளதாம்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அதிமுகவின் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் இருந்தபோது, அது வெறும் அலங்காரப் பதவியாக செயல்படாமலேயே இருந்தது. ஆனால், தமிழகத்துக்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இருக்கும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியால், பிரதமரையோ, அமைச்சர்களையோ உடனடியாக சந்தித்து தமிழகத்தின் நலன்களுக்கான கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்.
அத்துடன், இந்த பதவி தமிழக அரசின் செயல்பாடுகளிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. தமிழக அரசின் செயல்பாடுகளை அருகில் இருந்து கவனிக்கும் அதிகாரம் பெற்ற இப்பதவியை சபரீசனுக்கு கொடுத்தால் டெல்லியில் ஸ்டாலினின் முகமாக அவர் இருப்பார் என்ற ஆலோசனைகள் சூடுபிடித்துள்ளதாக திமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்ட பிரஷாந்த் கிஷோர் இந்த பதவியை தனக்கு கேட்டதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகின. அப்போதே அந்த தகவலை திமுக வட்டாரத்தில் மறுத்திருந்தனர். ஆனால், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பதவியை சபரீசனுக்கு கொடுக்கலாம் என்று பி.கே. ரெக்கமண்ட் செய்ததாகவும் கூறப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
May be an image of 2 people and people standing

கூறிய ஐந்து வாக்குறுதிகளையாவது நிறைவேற்றுவார்.

 எங்கள் கடன்களை முதல்வர் எப்போது தள்ளுபடி செய்வார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிக்றோம்.

குடும்ப தலைவிகளுக்கு முதல்வர் மாதம் ஆயிரம் ரூபாய் எப்போது தருவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
பெட்ரோல் டீசல் விலையை ஐந்து ரூபாய் முதல்வர் எப்போது குறைப்பார் என எதிர்பார்த்து காத்திருக்ககிறோம்.
நெடுஞ்சாலை டோல்களை எப்போது முதல்வர் அகற்றுவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
நீட் தேர்வை முதல்வர் எப்போது ரத்து செய்வார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
முதல்வருக்கு மனசாட்சி சுயநினைவு எல்லாம் இருந்தால் மேலே கூறிய ஐந்து வாக்குறுதிகளையாவது நிறைவேற்றி எங்களை திராவிடர்களாகவே வைத்து கொள்ளட்டும்.
இல்லாவிட்டால்
#GoBackStalin தான்.
முதல்வரை நம்புவதற்கு பதிலாக
COVISHIELD COVACCIN ஐ நம்புங்கள்.

எண் 8.

8,17,26

எட்டு என்ற எண்ணை
எட்ட யாரும் விரும்பமாட்டார்கள்
காரணம்
எண் கணிதத்தில்
எட்டு
ஸ்ரீ சனீஸ்வர பகவானின் ஆதிக்க எண்
ஸ்ரீ சனீஸ்வர பகவான் என்றாலே சிக்கலானவன் என்று
ஒரு மூடநம்பிக்கை, பயம்
யாருக்கும் இருக்கும்
ஸ்ரீ சனீஸ்வர பகவான்
கண்டிப்பானவன் -
கொடுப்பதிலும் சரி
கணக்கை முடிப்பதிலும் சரி
கூட்டு எண் 8
இதில்
பிறந்தவர்கள் சிக்கலானவர்கள்
இயற்கை விரும்பிகள்
வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்தவர்கள் .....
இப்படயெல்லாம் எண் கணித வியாபாரிகள்
வாய்ப்பந்தல் போடுவார்கள்
ஆனால்,
பாருங்கள்
எட்டில் புதைந்திருக்கும்
புதையலை
×××
திக்குகள் எட்டு
கிழக்கு
தென் கிழக்கு
தெற்கு
தென் மேற்கு
மேற்கு
வட மேற்கு
வடக்கு
வட கிழக்கு
×××
சுபீக்ஷத்தை அருளும் அஷ்டலக்ஷ்மி
1. ஸ்ரீ ஆதிலக்ஷ்மி
நோயற்ற ஆரோக்யம் அருள்பவள்
2. ஸ்ரீ தான்யலக்ஷ்மி
உணவுத் தானியங்கள் அருள்பவள்
3. ஸ்ரீ தைர்யலக்ஷ்மி
இடர்களை எதிர்கொள்ள அருள்பவள்
4. ஸ்ரீ கஜலக்ஷ்மி
நற்பாக்கியங்களை அருள்பவள்
5. ஸ்ரீ சந்தானலக்ஷ்மி
மழலை பாக்கியம் அருள்பவள்
6. ஸ்ரீ விஜயலக்ஷ்மி
வெற்றியை அருள்பவள்
7. ஸ்ரீ வித்யாலக்ஷ்மி
ஞானத்தை அருள்பவள்
8. ஸ்ரீ தனலட்சுமி
செல்வத்தை அருள்பவள்
×××
அஷ்ட பைரவர்கள்
தாருகாவனத்து ரிஷிகள்
ஆணவத்தால்
ஈசன் எதிர்த்தார்கள்
ஈசன் பிக்ஷாடன மூர்த்தியாக வடிவம் கொண்டார்
கடும் கோபம் கொண்ட ஈசன்
காலாக்னியால் தாருகாவனத்தை அழித்தார்
இதனால் உலகம் முழுக்க
இருள் சூழ்ந்து
சூரியனும் மறைந்து போனான்
பைரவ மூர்த்தியே
எட்டுத் திசைகளிலும் தோன்றி ஒளியை உண்டாக்கினார்
இப்படி எட்டுவிதமாகத்
தோன்றிய பைரவர்கள்
அஷ்ட பைரவர்கள்
(க்ஷேத்ர பாலகர்கள்)
என்று பூமியில் வணங்கப்படுகிறார்கள்
இவர்கள் ...
ருரு பைரவர்
சண்ட பைரவர்
குரோதன பைரவர்
உன்மத்த பைரவர்
சம்ஹார பைரவர்
பீக்ஷன பைரவர்
கபால பைரவர்
கால பைரவர்
என எட்டு பைரவர்கள்
××××
எட்டெழுத்து மந்திரம்
ஓம் நமோ நாராயணாய
×××
எட்டாவது திதி
அஷ்டமியில் பிறந்தவன்
பரந்தாமன்
×××
திருக்குறளில் அறத்துப்பால் பிரிவில்
திருவள்ளுவர்
எண் குணத்தான்
என்று குறிப்பிடுகிறார்
திருக்குறள்: 9
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
The Praise of God
"கோளில் பொறியின் குணமிலவே
எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
கோள்களிலோ பொறிகளிலோ குணம் என்பது இல்லை
என் குணம் கொண்டவனை வணக்குவதே தலை
Before His foot,
'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead
×××
What are the Eight-fold Excellence ...
1. நன்மொழி - Right Speech
2. நற்செயல் - Right Conduct
3. நன்னெறி - Right Livelihood
4. நன்முயற்சி - Right Effort
5. நல்லெண்ணம் - Right
Mindfulness
6. நல்லறம் - Right Intention
7. நல்நோக்கம் - Right View
8. நல்லறிவு - Right Insight
×××
பகவானை எண்குணத்தான் என்கிறார் திருவள்ளுவர்
எண்குணங்கள் என்னென்ன
1. தன்வயத்தன் ஆதல்
2. தூய உடம்பினன் ஆதல்
3. இயற்கை உணர்வினன் ஆதல்
4. முற்றும் உணர்தல்
5. இயல்பாகவே பாசங்களின்
நீங்குதல்
6. பேரருள் உடைமை
7. முடிவு இல் ஆற்றல் உடைமை
8. வரம்பு இல் இன்பம் உடைமை
இப்படி எண்வகைப்பட்ட குணங்கள் கொண்ட இறைவனின் திருவடி தொழாதவனின் தலை
மரணமுற்றவனின் தலை என்கிறார்
இது எதற்கு ஒப்பானது என்றால்
சுவையறியா
ஐந்து பொறிகளுக்கு ஒப்பாகும்
ஐந்து பொறிகள்:
1 வாய்
2 காணாத கண்
3 நுகரா மூக்கு
4 கேளாச் செவி
5 உணர்வற்ற உடல்
செயல்படாத மூளை
மரணித்த தலை என்கிறார்
பகவானை வணங்காதவன்
அறிவற்றவன் என்கிறார் திருவள்ளுவர்
×××
சைவ ஆகமத்தில்
தியானத்தால் அடையக்கூடிய
அஷ்ட சித்திகள் கூறப்பட்டுள்ளன
1. அணிமா
2. மகிமா
3. கரிமா
4. லகிமா
5. பிராத்தி
6. பிராகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்
×××
சமண சமயம் கோட்பாடுகள்
கூறும் எட்டு குணங்கள்
1. கடையிலா அறிவு
2. கடையிலாக் காட்சி
3. கடையிலா வீரியம்
4. கடையிலா இன்பம்
5. நாமமின்மை
6. கோத்திரமின்மை
7. ஆயுள் இன்மை
8. அழியா இயல்பு
×××
சைவ சமயம் எண் குணங்கள்
1 தன்வயத்தம்
2 தூய்மை
3 இயற்கையறிவு
4 முற்றறிவு
5 கட்டின்மை
6 பேரருள்
7 எல்லாம் வன்மை
8 வரம்பிலின்பம்
×××
எட்டுக் குணங்களுடைய
சிவனின்
சிவந்த தாளை வணங்காத தலை சித்திரத்தில் எழுதிய மரப்பாவைக்கு நிகராம்
அத்த எட்டு குணங்கள்
1. அனந்த ஞானம்
2. அனந்த வீரியம்
3. அனந்த குணம்
4. அனந்த தெரிசனம்
5. நாமமின்மை
6. கோத்திரமின்மை
7. அவாவின்மை
8. அழியாவியல்பு
×××
'சூடாமணி நிகண்டு'
என்னும் சமண நூல் எட்டு வினைகளைக் குறிப்பிடுகிறது
1. ஞானாவரணீயம்
2. தர்சனாவரணீயம்
3. மோகனீயம்
4. அந்தராயம்
5. வேதனீயம்
6. ஆயுஷ்யம்
7. நாமம்
8. கோத்திரம்
இதில்
முதல் நான்கு வினைகள்
'காதி'
அடுத்த நான்கு வினைகள்
'அகாதி'
என்று சொல்லப்படுகிறது
ஆன்மாவின் இயற்கையான இயல்பான குணங்களை
மறைக்கும் இந்த வினைகளை
வெல்வதற்கு உபாயம்
இந்த எண் குணங்கள்
×××
திருக்குறள் என்னும் வேத நூலின்
அமைப்பு
திருவள்ளுவர்
எட்டு குணங்கள் எவை என்று பொருள்பட முறையை அமைத்திருக்கிறார்
முதல் அதிகாரத்தில் வணங்குதற்குரிய இறைவனை வரிசைப்படுத்துகிறார்
1. ஆதிபகவன்
2. வாலறிவன்
3. மலர்மிசை ஏகினான்
4. வேண்டுதல் வேண்டாமை இலான்
5. இருவினையும் சேரா இறைவன்
6. பொறிவாயில் ஐந்தவித்தான்
7. தனக்குவமை இல்லாதான்
8. அறவாழி அந்தணன்
9. எண்குணத்தான்
10. இறைவன்
இந்த வரிசையில்
ஒன்பதாவது குறளாக ‘எண்குணத்தான்’
என்று குறிப்பிடுகிறார்
வாழ்க தமிழ்
வாழ்க பாரதம்
வந்தே மாதரம்
May be an image of text

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...