Sunday, May 23, 2021

தலையணையை_இப்படி_மட்டும்_பயன்படுத்தி_விடாதீர்கள்! #செல்வம்_வற்றிவிடும்.

 தலையணையை எதற்கெல்லாம் பயன்படுத்துவது என்று எந்த வரைமுறையும் இன்றி இன்று நாம் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். இது நமக்கு தரித்திரத்தை உண்டாக்கும் என்பது சாஸ்திர நியதி. தலையணையை தலையணையாக மட்டுமின்றி பலவாறாகவும் பயன்படுத்துவதால் தரித்திரம் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு இது நல்லதல்ல. தலையணையை எந்த விஷயங்களுக்கு பயன்படுத்த வேண்டும்? என்ன விஷயங்களுக்கெல்லாம் பயன்படுத்தக்கூடாது? என்பதைப் பற்றிய சாத்திர தகவல்களை இப்பதிவில் காணலாம்.

முந்தைய காலங்களில் எல்லாம் தலையணையை தீட்டாக கருதினர். ஒருவர் பயன்படுத்திய தலையணையை மற்றவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அதுபோன்று மற்றவரின் தலையணையை உபயோகப்படுத்தினால் தீட்டாக கருதப்படும். மாதவிடாய் காலங்களில் பெண்களை தனிமைப்படுத்துவதற்கும், அவர்கள் உபயோகித்த பொருட்களை தீட்டாக கருதியதற்கும் இதுவே காரணமாக இருந்தது. இது போன்ற நாட்களில் பெண்கள், தங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், பெண்மையின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்து கொள்வதற்காகவும் தனிமைப்படுத்தப் பட்டனர். அவர்களின் உடைகளை அவர்களே தான் துவைத்துக் கொள்ள வேண்டும். தங்களின் வேலையை தாங்களே பார்ப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேறிவிடும். இதனால் ஆரோக்கியமாக இருந்து வந்தனர்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. இன்று இருக்கும் பெண் குழந்தைகளுக்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டு விட்டது. இதில் தவறொன்றுமில்லை. நல்ல விஷயம் தான். ஆனால் நம் முன்னோர்கள் கூறிச் சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னால் ஆயிரம் ஆயிரம் நல்ல விஷயங்கள் ஒளிந்து கொண்டு உள்ளன. இதனை மூடநம்பிக்கையாக பார்ப்பவர்களுக்கு அதில் இருக்கும் உண்மை தன்மை புரிவதில்லை.
இன்றைய குழந்தைகள் தலையணையை பல்வேறு விஷயத்திற்கும் உபயோகப்படுத்துகின்றனர். தங்களின் வீட்டு பாடங்களை எழுதுவதற்கும், ஓவியங்கள் வரைவதற்கும் கூட அவர்களுக்கு தலையணை தேவைப்படுகிறது. இதற்கும் ஒரு படிக்கு மேல் சென்று உணவு அருந்துவதற்கும் தலையணையை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த செயல்களை குழந்தைகள் மட்டும் செய்வதில்லை. வீட்டிலிருக்கும் பெரியவர்களும் செய்கிறார்கள். இது தரித்திரத்தை ஏற்படுத்தும். செல்வமும் வற்ற காரணமாகிவிடும்.
தலையணையை உறங்கும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக அதற்குரிய இடத்தில் தலையணையை வைத்து விட வேண்டும். இது பண்டைய காலத்தில் இருந்து பின்பற்றப்படும் ஒரு நடைமுறையாகும். ஆனால் இன்றைய காலத்தில் படுக்கை அறையில் மட்டுமல்லாமல் தலையணையை நடுவீட்டில் கூட வைக்கும் பழக்கம் வந்துவிட்டது. இது மிகவும் தவறான பழக்கம் ஆகும்.
இரவு உறங்கச் செல்லும் போது, நாள் முழுவதும் நம்மிடம் இருந்த எதிர்மறை ஆற்றல்கள் என்கின்ற நெகட்டிவ் வைப்ரேஷன்கள் அனைத்தும் நாம் இறக்கி வைப்பது, தலையணையில் தான். நீங்களே நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நாள் முழுவதும் உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து அதனை அயர்வுற செய்துவிட்டு, தலையணையில் தலை வைத்து படுக்கும் போது தான் அதற்கான ஓய்வை கொடுக்கின்றீர்கள். அந்த நேரத்திலும் இன்று பலபேர் எதையாவது சிந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என்பது வேறு விஷயம். ஆனால் நீங்கள் உங்களின் பாரங்களை, நெகட்டிவ் வைப்ரேஷன்களை இறக்கி வைப்பது தலையணையில் தான்.
அதில் இருக்கும் நெகட்டிவ் ஆற்றல்கள் நீங்கள் மற்ற விஷயங்களுக்காக தலையணையை பயன்படுத்தும் பொழுது உங்கள் ஆரோக்கியமான உடலில் எதிர்வினை புரிய துவங்கும். குறிப்பாக குழந்தைகளை இது வெகு விரைவாக தாக்குகிறது. எனவே தலையணையை எந்த காரணம் கொண்டும் மற்ற வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது. அதேபோல் தலையணை உறையை தினமும் புதிதாக மாற்றி விடுவதுதான் நல்லது. இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் உங்களிடம் தரித்திரம் நெருங்காமல், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...