Friday, May 28, 2021

தடம்.

 உழுதுகொண்டிருந்தார் உழவர்.

மண்புழு ஒன்று மண்ணை ஊடுறுவியபடி....
மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.
அவ்வழி போன சித்தெறும்பு மண்புழுவைச்சீண்டியது:
'மண்புழுவாரே...!
எவ்வளவு நீளமான உடம்புஉமக்கு...!
இது உமக்குத் தேவையா?
நான் செல்லமாகக் கடித்தால் கூட
சுருண்டு விழுந்து துடித்துப் போகிறாய்.
உம் உடம்புக்கு வெளியேயும் மண்ணு.
உள்ளேயும் மண்ணு.
வாழ்நாளெல்லாம் மண்ணை நோண்டிப் பிழைக்கும்
இதுவும் ஒரு பிழைப்பா....!
கேலியை பொருட்படுத்தாமல்
வேலையை தொடர்ந்தது மண்புழு.
உற்று நோக்கியது சித்தெறும்பு.
அது சென்ற இடமெல்லாம்....
கோடு ஒன்று விழக் கண்டது.
கேட்டது:
'மண்புழுவே........
நீ செல்லும் பாதையெல்லாம்
கோடு ஒன்று விழுகிறதே...!
அது என்ன?
மண்புழு பேசியது:
'சித்தெரும்பே......
அது கோடு இல்லை.தடம்.
இந்த மண்ணை நோண்டிப் பிழைக்கும் பிழைப்பை
என்றைக்குமே கேவலமாக நான் நினைத்தது இல்லை...!
அது என் பணி.
நான் நினைத்தாலும்
என்னால் பணி செய்யாமல் இருக்க முடியாது.
என் பணியே எனக்கு உணவு.
என் பணி வாழ்வை நான் மனதார தேசிக்கிறேன்.
சித்தெறும்பு ஆர்வமாய் விசாரித்தது:
'மண்புழுவாரே....
எனக்கும் அது போல் தடம் விழ
நான் என்ன செய்ய வேண்டும்.
மண்ணுக்குள் புகுந்து கொண்டே மண்புழு சொன்னது..
'கடமையைச் செய். தடம் தானாய் விழும்"
மண்புழுவுக்கே தடம் உண்டு.
உனக்கு....?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...