Tuesday, May 25, 2021

வைகோ சொல்வது, ஒருதலைபட்சமாக உள்ளது.

 'துாத்துக்குடியில், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும் என்ற, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் குரல் ஒருதலைபட்சமாக இருக்கிறது' என, சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு உள்ளது.


சமீபத்தில், முதல்வர் ஸ்டாலினுக்கு, வைகோ ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், 'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், 13 பேரை சுட்டுக் கொன்ற போலீசார் மீது, கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்களை கைது செய்ய வேண்டும். அப்போது தான், இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கும்' எனக் குறிப்பிட்டிருந்தார். 'அவரது கோரிக்கையில் நியாயம் இல்லை என்றும், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் உயிர் நீத்த போலீசாருக்காகவும், பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்காகவும், வைகோ குரல் கொடுக்காதது ஏன்' என்றும், சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை, கே.கே.நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் சீனிவாசன், சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பதாவது: துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்கரார்களின் மீதான வழக்குகள், புதிய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால், துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது, வழக்குகள் பதிய வேண்டும் என, புதிய கருத்தை, வைகோ வலியுறுத்தி உள்ளார்.

ஒரு மாவட்டத்தில் ஏற்படும் போராட்டத்தால், அருகாமையில் உள்ள இதர மாவட்டங்களிலும், சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என, அரசு கருதும். போராட்ட களத்தில், அந்த மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் நடவடிக்கையை, போலீஸ் துறை வாயிலாக, அரசு எடுக்கும்.

ஒருதலைபட்சம், வைகோ, குரல் ஒலிப்பது ஏன்?


போலீஸ் துறை உயர் அதிகாரிகள் பிறப்பிக்கும் கட்டளையை, கீழ் நிலையில் பணிபுரியும் போலீசார் நிறைவேற்றுவர். அது, அவர்களின் கடமை. அந்த அடிப்படையில் தான் போலீசார், தங்கள் கடமையை நிறைவேற்றி உள்ளனர். எனவே, தங்கள் கடமையை செய்த போலீசாரை கைது செய்ய, வைகோ சொல்வது, ஒருதலைபட்சமாக உள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு, அரசு கொடுக்க வேண்டிய நிவாரணங்களுக்கு, வைகோ குரல் கொடுத்தது வரவேற்கக் கூடியது. ஆனால், போலீசாரை கைது செய்ய சொல்லும் கருத்தை, ஏற்றுக் கொள்ள முடியாது.முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை சம்பவம் நடந்த போது, பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பல போலீசார் இறந்தனர். சிலர் படுகாயங்களுடன் பாதிக்கப்பட்டு, தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்தனர்.

அவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் ராஜிவுடன் உயிரிழந்த காங்கிரஸ் கட்சியினரின் குடும்பத்தினருக்கும், அரசு வேலை, நிவாரண உதவிகள் வழங்க, அரசு முன்வர வேண்டும் என, வைகோ ஏன் குரல் கொடுக்கவில்லை. பொது வாழ்க்கையில், ஒருதலைபட்சமாக முடிவு எடுக்கிற செயலை, இனியாவது, வைகோ கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...