Monday, May 31, 2021

"எனக்கு மனித நேயமே முக்கியம்.

 கேரள சினிமா கலைஞர்களை பாராட்டத்தான் வேண்டும்.

இங்கு பாவம்,பாடகி சின்மயியும் அவருடன் 17 பெண்களும் வைரமுத்துவின் மேல் பாலியல்
புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் ஏன் ஒரு சிறு விசாரணை கூட வைரமுத்து மேல் நடத்தப்பட வில்லை.
இங்குள்ள தமிழக சினிமா கலைஞர்கள் ஒருவர் கூட மிகப் பெரிய நடிகர் முதல் சிறிய கலைஞர்கள் வரை பாடகி சின்மயிக்கு ஆதரவு தரவில்லை.
ஆனால் சில நாட்கள் முன்பு PSBB பள்ளியில் ஒரு ஆசிரியர் அவருடைய வாட்ஸ்அப் மூலம் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கனிமொழி முதல் பல தமிழக சினிமா கலைஞர்கள் அவர் மேலும் அந்த பள்ளி மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்கொடி தூக்கியுள்ளனர்.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதுகிறார், பள்ளியில் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்.
தயாநிதி மாறன் மேல் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.அதனால் திமுக கட்சியின் மேல் சட்டம் தன் கடமையை செய்யலாமா!
ஆனால் இவர்கள் யாருமே வைரமுத்துவின் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டின் மேல் நடவடிக்கை எடுக்க சின்மயிக்கு ஆதரவும் தரவில்லை. தங்கள் Twitterல் குரலும் கொடுக்கவில்லை.
ஆனால் கேரளாவில் ONV Kurup award, திரு ONV kurup என்கின்ற மிக சிறந்த மலையாள பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் நினைவாக வருடாவருடம் 2017ல் இருந்து திரை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வருடம் நம் தமிழ் திரைப் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு அந்த ONV kurup
அவார்டு வழங்கப்பட இருப்பதாக
ONV cultural acadamy அறிவித்தது.
உடனடியாக மலையாள திரைப்பட கலைஞர்கள் சிலர் பொங்கி எழுந்துள்ளனர்.நடிகை பார்வதி
கூறுகிறார்.
" பதினேழு பெண்கள் வைரமுத்துவின் மேல் பாலியல் குற்றசாட்டு கூறிய நிலையில்,
MeToo குற்றச்சாட்டு இருக்கும் போது இந்த மதிப்பிற்குரிய விருதிற்கு குற்றவாளி வைரமுத்துவை தேர்ந்தெடுத்ததன் மூலம் நம் கலாச்சாரத்தை உயர்த்தியவரும்,
நம் பெருமையுமான திரு ONV சாரை அவமதித்து விட்டீர்கள் "
என அந்த கமிட்டியின் தலைவர்
அடூர் கோபால கிருஷ்ணனை கேட்டுள்ளார்.
மேலும் நடிகை பார்வதி
"எனக்கு மனித நேயமே முக்கியம்.
கலையை படைக்கும் கலைஞனின் மனித நேயத்திற்கே நான் முன்னுரிமை அளிப்பேன்.
மனித நேயமில்லாத கலைஞனை நான் என்றுமே ஏற்றுக் கொள்ள மாட்டேன்."
எனக் கூறி உள்ளார்.
மேலும் கேரள நடிகை ரிமா கலிங்கை, கீது மோகன்தாஸ் ஆகியோரும் கண்டனம் தெரிவித்து சின்மயசிரிபாதா, உன்னுடன் நாங்கள் உள்ளோம்
என சின்மயிக்கு ஆதரவும் அளித்துள்ளனர்.
சின்மயியும், இந்த விருதை வைரமுத்துக்கு அளிப்பதன் மூலம்
ONV சாரை களங்கப்படுத்தி விட்டீர்கள் என தன் Twitter மூலம்
கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஆனால் இங்கு வைரமுத்துவின் மேல் புகார் அளித்த காரணத்திற்காகசின்மயியை டப்பிங் கலைஞர் யூனியனில் இருந்து நீக்கி, பாடல்கள் பாடவும் மறுக்கப்பட்டு
ஒதுக்கி வைக்கிறார்கள்.
காந்தி சொன்னது நினைவுக்கு வருகிறது.
குறிகோள் மட்டும் நேர்மையாக இருப்பது முக்கியமல்ல.
அதை அடையும் வழியும் நேர்மையாக இருக்க வேண்டும்.
அதைப் போல
விருது மட்டும் தரமாக இருப்பது முக்கியமல்ல.
அதை பெறுபவர் தகுதியும் தரமாக இருக்க வேண்டும்
எனப் போர் கொடி உயர்த்தியிருக்கும் மலையாள திரைப்பட கலைஞர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...