Tuesday, May 25, 2021

கைலாய மலையை ஏறுவோர்கள் இளம் வயதிலேயே முதுமை அடையும் மர்மம்.

 இப்புவியில் உள்ள இயற்கையின் படைப்புகளில் உயரமாக இருக்கும் “மலைகள்” நம் அனைவரின் மனத்தைக் கவர்வதாகும்.

கிரேக்கர்கள் “ஒலிம்பஸ்” மலையையும் யூதர்கள் “சினாய்” மலையையும் இந்து, ஜைன, பவுத்த மதத்தினர்கள் “கயிலாய” மலையையும் தெய்வீக தன்மை கொண்டவையாக கருதுகின்றனர். அதிலும் நம் நாட்டின் “இமய மலைத்தொடர்களில்” இருக்கும் கயிலாய மலை உலகைக் காக்கும் கடவுளான “சிவபெருமான்” மற்றும் எண்ணற்ற சித்த புருஷர்கள் வாழும் இடமாக இந்து மத பக்தர்கள் கருதுகிறார்கள்
கைலாஷ் மலையை இதுவரை ஏறியவர்கள் எவரும் இல்லை! முயற்சித்தவர்கள் வயோதிகர்களாக இறந்தது மட்டுமே மிச்சம்! இதன் மர்மம் என்ன? மலை மொத்தமும் DNA மூலக்கூறுகள்! வியந்த விஞ்ஞானிகள்!
12 மணி நேரம் கைலாஷ் மலை ஏறினால் மனித உடல் இரண்டு வாரத்திற்கான வளர்ச்சியை பெறுகிறது. நகம், முடி அனைத்தும் இரண்டு வாரத்திற்கான வளர்ச்சியை பெறுகிறது! இது வரை யாராலும் கைலாஷ் மலையை முழுமையாக ஏறியதில்லை. ஏற முயற்சித்தவர்களும் திரும்பியதில்லை.
Dr.Ernst Muldashev இரஷ்ய விஞ்ஞானி:
எர்நெஸ்ட் முல்டஷேவ் என்னும் இரஷ்ய விஞ்ஞானி கைலாஷ் மலையில் உள்ள இரகசியங்களை உடைத்தெரிய எண்ணினார். அதன்படி கைலாஷ் மலையை ஆராய்வதற்காக வந்தார். இதுவரை ஏன் எந்த மனிதனாலும் கைலாஷ மலையை ஏற இயலவில்லை என்பது குறித்து ஆராயத் தொடங்கினார்.
ரஷ்ய நாட்டு கண் மருத்துவரும், மலையேற்ற வீரருமான டாக்டர் “எர்ன்ஸ்ட் முல்டஷேவ்” கயிலாய மலை உண்மையில் இயற்கையாக தோன்றிய மலையே இல்லை, என்றும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம்மை விட அனைத்து வகையிலும் முன்னேறிய நாகரிகத்தை சார்ந்த மனிதர்களோ அல்லது வேற்றுலக வாசிகளோ கட்டிய மிகுந்த ஆற்றல் வாய்ந்த “பிரமிடுகளாக” அவை இருக்கலாம் என்று கூறுகிறார்.
1999 ஆம் ஆண்டு இக்கயிலாய மலையின் அடிவாரத்தில் தாம் தங்கியிருந்த போது, ஒரு இரவு நேரத்தில் இம்மலைக்குள் இருந்து மனித நடமாட்டத்தை காட்டும் வகையிலான சத்தங்களை தான் கேட்டதாக கூறுகிறார் ரஷ்ய மருத்துவர் மெல்டஷேவ்.
பல திபெத்தியர்கள் மற்றும் சைபீரியர்களிடம் விசாரித்ததில் கைலாஷ் மலையில் ஷம்பாலா என்னும் குடிகள் வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். முதலில் நம்பாமல் இருந்த இரஷ்ய விஞ்ஞானி பிறகு இரவில் மலையை சுற்றி ஏற்பட்ட சத்தத்தை வைத்து மலையின் உள்ளே யாரோ வசிப்பதாக உறுதி பூண்டார்.
வயதாகி இறக்கும் மர்மம்:
இந்த மலையை ஏற முயற்சித்த அனைவரும் வயதாகி இறந்திருந்தனர். அதாவது 24 வயது மதிக்கத்த ஆள் மலையை ஏற முயற்சித்தால் 90 வயதானவராக மாறி வயோதிகம் காரனமாக இறந்திருக்கிறார். எவ்வாறு குறுகிய காலத்தில் இவ்வாறு வயதாக சாத்தியமாகும் என்பது விஞ்ஞானிகளுக்கு இன்றளவும் விந்தையாகவே உள்ளது.
DNA வடிவம்:
இரஷ்ய விஞ்ஞானி எர்னஸ்ட் முல்டஷேவ் கைலாய மலை மொத்த மலையையும் திட்ட வரைபடமாக தீட்டினார். தீட்டி முடித்து பார்த்ததும் அதிசயித்துப் போனார். மொத்த வரைபடமும் DNA வடிவில் காட்சியளித்தது. இது அவருக்கு பெருத்த ஆச்சரியத்தையும், ஒட்டு மொத்த உயிர்களின் வாழ்க்கையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது என்ற அவரது எண்ணமும் முற்றிலும் உண்மைதான் என்ற தகவலை அளித்தது.
மனிதனால் செய்யப்பட்டதா?
அவரின் ஆராய்ச்சியின் முடிவில் ஒட்டுமொத்த மலையையும் (Pyramid) மனிதனின் பெரிய கைகளால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று முடித்தார். இவ்வளவு பெரிய மலையை செய்யும் பெரிய கைகள் எந்த உயிரினத்துக்காவது இருக்கிறதா என்ன?
இதே கருத்தை நம் நாட்டு சமஸ்க்ரித பண்டிதர் ஒருவரும் ஆமோதிக்கிறார். மேலும் ராமாயண இதிகாசத்திலேயே இந்த கயிலாய மலை “பிரபஞ்ச சக்தி” மிகுந்த அளவில் குவியும் இடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
இம்மலையைப் பற்றி மேலும் ஆராய்ந்த போது பல ஆச்சர்யமான தகவல்கள் கிடைத்ததாக கூறுகிறார் அந்த ரஷ்ய நாட்டு மருத்துவர். அதாவது பௌத்தர்களின் மத நம்பிக்கைப் படி இம்மலை “ஷம்பாலா” என்றும் ஹிந்துக்கள் இதை “கபாபா”என்றும் அழைக்கின்றனர். அங்கு “தேவலோக மனிதர்கள்”மற்றும் “கந்தர்வர்கள்” வாழ்வதாகவும் இவ்விருமதத்தினருமே நம்புவதாக கூறுகிறார்.
பல அமானுஷ்ய ஆற்றலைக் கொண்ட இம்மலையில் ரகசியங்களை அறிய இம்மலையில் ஏறிய பல மலையேற்ற வீரர்கள், மீண்டும் உயிருடன் திரும்பவில்லை என இம்மலையின் ஆற்றலைப் பற்றி உணர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.வேறு சில மலையேற்ற வீரர்கள் இம்மலையின் ஒரு மர்மமான பகுதியை அடைந்த போது, பல ஆண்டுகள் முதுமையடைந்தவர்களாக மாறியதாகவும், அதற்கு பின் ஓராண்டு காலத்திலேயே அவர்கள் ஒவ்வொருவராக இறந்து விட்டதாக கூறுகிறார், அச்சம்பவத்தை பற்றி நன்கு அறிந்த ஒருவர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...