Thursday, May 27, 2021

பறவைகளில் மிகவும் பலம் வாய்ந்தது கழுகு...!

 அதன் ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள். ஆனால், அந்தப் பறவை 40 வயதை அடையும் போது ஒரு சவாலைச் சந்திக்கும்.

அதில் வென்றால்,
அதற்கு மறு பிறவி கிடைக்கும்.
கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்களும் கூா்மை இழக்கும்.
அது பறப்பதற்குத் துணை நிற்கும் இறகுகளோ, பெரிதாகி பாரமாகி விடும்.
இதனால், கழுகின் பலம் குறைந்து, முதுமையடையும். இந்நிலையில் கழுகு தனித்திருக்கத் தொடங்கும்.
தனித்திருப்பதற்காக காட்டிலுள்ள மலையின் உச்சிக்குப் பறந்து செல்லும்.
அங்கு சென்று, தனது அலகின் மூலம் அதன் சிறகுகளையும், நகங்களையும் வேறோடு பிடுங்கி விடும். பின்னா் அதன் அலகினையும் பாறையில் உரசி உதிா்த்து விடும்.
இதனால் அதன் உடலெங்கும் தீராத வலியுடன் ரத்தம் சொட்டும்.
அந்த வலியைப் பொறுத்துக் கொண்டதால் நாளடைவில்
கழுகின் அளவுக்கு அலகுகள், சிறகுகள் புதிதாக பிறந்து உருமாறியிருக்கும்.
எவா் கண்ணிலுமே படாமல்,
தனியாய்ப் பாறைகளின் இடுக்குகளில் கிடைக்கும் சிறு சிறு புழுக்களையும், பூச்சிகளையும் தின்றே உயிா் வாழும்.
இவ்வாறு தொடா்ந்து மூன்று மாதங்கள் தன்னைத் தனிமைப்
படுத்திக் கொண்டு கிடைத்ததை உண்டு உயிா் வாழ்ந்து அது வளா்ச்சி பெறும்.
நான்காம் மாதத்தில் அதன் இறக்கைகள் நீண்டு,
நகங்களும், அலகும் கூா்மையாகவும் வளா்ந்து,
ஓா் இளம் பறவையாக மீண்டும் நீல வானில் சிறகடித்துப் பறக்கும்.
அதற்கடுத்த முப்பது ஆண்டுகளும்
அது வானில் சக்கரவா்த்
தியாகவே வலம் வரும்.
மூன்று மாதம் தனித்
திருத்தலின் மூலம் தனக்குப் புதியதொரு 30 ஆண்டுகள் காலத்தினை தனக்காக உருவாக்கிக் கொள்கிறது கழுகு.
கழுகின் வாழ்க்கையிலிருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கிறது.
தனித்திருத்தல் என்பது புதிய வாழ்க்கையின் முதல் அத்தியாயம்.
அது வலியோடு ஆரம்பித்தாலும்,
பின்னாளில் அற்புதமானதொரு,
புதிய வாழ்க்கையை வகுத்துக் கொடுக்கும்.
தனித்திருத்தலில் வலிகளை நினைத்துக் கொண்டிருக்காமல்,
புதிய வழிகளை உருவாக்கு
பவர்களுக்குத்தான்,
இது நிச்சயம் சாத்தியமாகும்.
பாதுகாப்பாக இருங்கள்.
மீண்டு வருவோம்..!
மீண்டும் வருவோம்..!
ஹர ஹர மஹாதேவா..!
ஜெய் ஶ்ரீராம்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...