Saturday, May 29, 2021

இசைக் கடவுள் இளையராஜா பற்றி இது...

 அதை இங்கு பகிர்ந்துள்ளேன்....

தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ஒரு புது இசையமைப்பாளர தேடிக்கிட்டு இருந்த சமயம் இளையராஜா அவர்கிட்ட சான்ஸ் கேட்டுப் போயிருந்தார். அவரைப் பார்த்த ப.அருணாச்சலம் ஏதாவது பாடிக் காட்டுன்னு சொன்னாராம். ஆனா எந்த இசைகருவியும் அவர் கொண்டு செல்லவில்லை. இருந்தாலும் வெறும் டேபிள்களில் இசை அமைத்துப் பாடிக் காண்பித்து இருக்கிறார்.
அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என நினைத்தவர். நல்ல கிராமத்துக் கதை வரும்போது இவரைப் பயன்படுத்தலாம் என‌ நினைத்து பின்னர் சொல்கிறேன் என அனுப்பிவிட்டார்.அந்த சமயம் அன்னக்கிளி கதையைக் கேட்டவுடன் படத்திற்கு இசையமைப்பாளராக ராஜாவைத் தேர்ந்தெடுத்தார்.
பாடல் பதிவு தொடங்கிய அன்றைய நாள் ராஜாவிற்கு என்று தனியாக டீம் இல்லை. அதனால பாடல் ஒலிப்பதிவு செய்ய வெளியில் இருந்துதான் அழைத்து வந்திருந்தார். பஞ்சு அருணாசலம் ராஜாவிடம் செலவைப் பற்றிக் கவலைப்படாதே இது உன் முதல்படம் உன் திறமையை நன்றாக நிருபி என்றார். முதல் பாடல் மச்சானப் பார்த்தீங்களா பாடுவதற்கு ஜானகியம்மா வந்திருந்தார்.
ராஜா அவருக்கு நோட்ஸ்களைக் கொடுத்துவிட்டு. ஒருதடவை ரிகர்சல் போகலாம் என்றார். எல்லாம் சரியாக இருந்தது. சரி டேக் போகலாம் என ஹம்மிங் ஆரம்பித்த சமயத்தில் திடிரென்று பவர்கட் ஆகிவிட்டது. வந்த எல்லோரும் சகுனம் சரியில்லை என புலம்ப ஆரம்பித்து விட்டனர். ராஜாவிற்கு டென்சன் ஆகிவிட்டது. அவரை, பஞ்சு அருணசாலம் சமாதானம் செய்தார். வெகு நேரம் கழித்தே பவர் வந்தது. பாடல் ஒலிப்பதிவு தொடங்கியது. முதல் டேக்கிலேயே எல்லோருக்கும் திருப்தி.
அப்போது மோனோ ரெக்கார்டிங் சிஸ்டம் மட்டுமே.பாடல் ஒலிப்பதிவு ரெக்கார்டிங் முடிந்ததும்.பாடலைக் கேட்க பிளே செய்யுங்கள் என்றார் ப.அருணாசலம். பாடலை ரெக்கார்டிங் செய்தவர் அப்போதுதான் கவனித்தார் அவர் ரெக்கார்டிங் பட்டனை ஆன் செய்திருக்கவில்லை.
இ.ராஜா மீண்டும் டென்சன் ஆகிவிட அவரைப் பார்த்த அருணசலம். கவலைபடாதே நான் நல்ல நேரம் பார்த்து ஆரம்பித்த பல படங்கள் தோல்வியில் முடிந்தன அதனால் எனக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால் எனக்கு உன் மீது நம்பிக்கை இருக்கிறது. நீ திரும்ப ஆரம்பி என நம்பிக்கை கொடுத்தார்.
மூன்றாவது ரெக்கார்டிங்கில் எல்லாம் சரியாக அமைந்து ஆரம்பித்த பயணம் ஆயிரம் படங்களை கடந்தாலும் இன்றும் போட்டி போட்டு கொண்டு இசையமைத்து கொண்டு இருக்கிறார். இந்த மேஸ்ட்ரோ கலைஞன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...