Monday, May 31, 2021

இந்த சரகெல்லாம் குடிச்சா சீக்கிரம் சிவலோகம் கண்ணுக்கு கிட்டும்..

 பிராந்தி விஸ்கி ரம் ( பெருவாரியாக பயன்படுத்துவது) இவற்றின் வித்தியாசங்களை அறிய வேண்டும்.

பிராந்தி- பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் மது வகை
விஸ்கி- தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மது வகை.
ரம்- கரும்பு சக்கையில் தயாரிக்கப்பட்டு வாசனை ஏற்றும் மது வகை.
பிராந்தி என்பது நடுத்தர மற்றும் எளிய மக்களின் பானம்.
பிராந்தி பெரும்பாலும் திராட்சையில் இருந்தே பிரிக்கப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் வேறு சில பழங்களை பயன்படுத்தியும் தயாரிக்கப்படுகிறது.
பாட்டிலில் பெரும்பாலும் vsop, xo, vs, ac, neppolion , horse de age என எழுதப்பட்டிருக்கும்
Vsop-Very Special/Superior Old Pale நான்கு முதல் ஐந்து வருடங்கள் பழமையான பழச்சாறு.
V.O. (Very Old): நான்கு வருடங்கள் அதற்கும் குறைவான மது.
V.S. (Very Special): இரண்டு வருடங்களுக்கு குறைவான மது..
Napoleon: மாவீரன் நெப்போலியன் ஃபேவரைட் டிரிங்க்.ஆறு வருடங்கள் பழமையான மது..
X.O. (Extra Old):பத்து வருடங்கள் வரை பழமையான மது..
Varietal: ஒரே ஒரு குறிப்பிட்ட திராட்சையில் இருந்தே தயாரிக்கப்படும் மது.
Hors d’Age : 35-50 வருடங்கள் பழமையான மது. ரொம்ப காஸ்ட்லி.
இது எதுவுமே தெரியாமல்தான் நம்மாளுங்க vsop கோட்டர் குடுங்கனு கேக்கானுங்க..
ஆனா,
நம்ம ஊருல, VSOP- “Very Special Old Pale” போன வாரம் பாட்டில்ல அடைச்சி இந்த வாரம் கடைக்கு வந்த சரக்கு.
ஓல்ட் கீல்ட் எல்லாம் ஒண்ணும் கிடையாது. அம்புட்டும் ஸ்பிரிட் தான்..
விலையை கூட்டி நம்மை ஏமாற்ற இங்குள்ள கழக ஆட்சியாளர்களும் ஆலைக்காரங்களும் கடைப் பிடிக்கும் ஏமாற்று யுக்தி.
மது உடல்நலத்துக்கு கேடு தரும்.
May be an image of drink

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...