Tuesday, September 30, 2014

100 நாளில் என்ன செய்தது பாஜ அரசு?

காங்கிரஸ் அரசின் கொடூர தாக்குதலில் நிலைகுலைந்த தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் அதிலிருந்து விடுதலை பெற்று பாஜ என்ற மற்றொரு வலையில் விழுந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். 

அரசனும் சரி இல்லை, புருசனும் சரி இல்லை என்ற பழமொழிக்கேற்ப பாஜ பல அதிருப்திகளை சம்பாதித்து வருகின்றது. குறிப்பாக தமிழ் நாட்டு மக்களை பாஜ வும் இணைந்தே வஞ்சித்து வருகின்றது. 

ஒரு காலத்தில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த பொன்.ராதா கிருஷ்ணனும், தமிழிசை சவுந்திரராஜனும் தற்போது பதவிக்காக மௌனமாக இருக்கின்றார்கள்.

பதவிக்கு வந்ததுமே இது இலங்கை அரசின் நடவடிக்கை என்றும், அதனை தம்மால் கட்டுப்படுத்த முடியாது என்றும் பிரதமர் கூறினார்...அன்று எப்படி தமிழக காங்கிரஸ் எம் எல் ஏக்கள் மௌனமாக இருந்தார்களோ, அதே நிலையில் தான் இன்று பொன்.ராதா கிருஷ்ணனும், தமிழிசை சவுந்திரராஜனும் இருக்கின்றார்கள். 

சும்மா வெறுமனே மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று சொல்கின்றார்கள்....அவர்களை இன்று வரை கைது செய்கின்றது...அவர்களது படகுகளை பறிமுதல் செய்கின்றது....ஏன் என்று கேட்க நாதி இல்லை...முல்லைப் பெரியாறு அணைக்கு கிடைத்த  நீதியைப் போன்று என்று சொல்லி இருக்கின்றார். முல்லைப் பெரியாறு அணைக்கு நடவடிக்கை கோரி தமிழக அரசுதான் உச்சநீதி மன்றம் வரை சென்று நடவடிக்கை எடுத்துள்ளது...

கட்சி பொறுப்பில்லாதவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்கு நாங்கள் விளக்கம் தர முடியாது என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறியிருக்கின்றார். மோடி சொன்னதற்க்கே இன்னமும் விளக்கம் கேட்கப்படவில்லை. இலங்கை நாட்டு பிரச்சினையை அன்று தேர்தல் பிரச்சாரத்தின் போது உங்கள் காங்கிரசின் அணுகுமுறை தவறு என்று சொல்லிவிட்டு இன்று உங்கள் அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றது? 

அவர்களாவது நாங்கள் செய்ய மாட்டோம் என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்கள்? நீங்கள், செய்வேன் என்று நம்பிக்கை வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தீர்கள்? உங்களால் செய்ய முடிந்ததா? 100 நாளில் வெளியூர் சுற்றுப்பயணம் நடந்தது, எங்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் எங்களுக்கு, எங்கள் மீனவர்களுக்கு என்ன உத்திரவாதம் வழங்கினீர்கள்...நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பிரதமருக்கு மாநில முதலமைச்சர் எழுதிய கடிதத்தை கொச்சைப் படுத்தி விமர்சித்தார்கள்...அதற்க்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்டார் என்று பெருமை கொண்டது மட்டும்தான் உங்கள் சாதனை. 

இன்னும் தமிழர்கள் என்னென்ன பாடு படப் போகின்றார்கள் என்று தெரியவில்லை.? 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...