Monday, September 22, 2014

அல்சரைப் போக்கும் அன்னாசி

 


பழங்கள் இயற்கையின் அருட்கொடைகள். இவற்றில் எண்ணிடலங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரோக்கியம் நல்கும் பல பழங்களில் அன்னாசிப்பழமும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழம் இது. இனிப்புச் சுவையும், சற்றே புளிப்புச் சுவையும் கலந்த இதன் ருசி அலாதியானது. 

100 கிராம் அன்னாசிப்பழத்தில் உள்ள சத்துக்கள்

சக்தி - 202 கலோரி 
கார்போஹைட்ரேட் - 12.63ஞg 
சர்க்கரை - 9.26 g 
நார்ச்சத்து - 1.4 g 
கொழுப்பு - 0.12 g 
புரோட்டின் - 0.54g 
தயமின் - 0.079 mg (6%) 
ரிபோபுளோவின் - 0.631 mg 
நியாசின் - 0.489 mg 
பான்தோனிக் அமிலம் - 0.205 mg 
வைட்டமின் பி6 - 0.110 mg 
வைட்டமின் சி - 36.2 mg 
கால்சியம் - 13 mg 
இரும்பு - 0.28 mg 
மக்னீசியம் - 12 mg 
மாங்கனீசு - 0.28 mg 

ப்ரோம்லின் (Bromelain)

அன்னாசிப் பழத்திலுள்ள ப்ரோம்லின் என்ற என்சைம்தான் அதனுடைய மருத்துவப் பயனுகளுக்கு காரணமாக அமைகிறது. இது நம் உடலில் பலவிதங்களில் செயல்படுகிறது. ஒன்று செரிமானத்திற்கு, இரண்டாவது காயங்களை ஆற்றுவதற்கு.

மாங்கனிசு (Manganese)

அன்னாசியில் அதிகளவு மாங்கனிசு சத்து உள்ளது. இது எலும்புகளின் சீரான வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. மேலும் புண்களை விரைவில் குணமாக்கும். நன்கு ஆரோக்கியமாக வைக்க உதவும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதனால் எந்த நோயும் விரைவில் அணுகாதவாறு பாதுகாக்கும். 

வைட்டமின் சி (Vitamine C)

இந்தச் சத்து அன்னாசியில் அதிகம் நிறைந்துள்ளது. இது திசுக்கள் நம் உடலில் விரைவில் வளர்வதற்கு உதவுகிறது. எலும்புகளில் உள்ள கொலஜன் ((Collagen)என்ற பொருள் உருவாவதற்குத் தேவையானது. சாதாரண இருமல், சளி போன்றவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கக் கூடியது. மேற்கூறிய பொருட்கள் அன்னாசியில் அதிகளவில் உள்ளதால் அதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.

காயங்களை விரைவில் ஆற்ற

காயங்களையும், ரத்தக் கட்டுகளையும் உடைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. மேலும், தொண்டையில் ஏற்படும் ரணங்களையும் ஆற்றும் தன்மை அன்னாசிக்கு உள்ளது என்பதை ஹவாய் தீவு மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர். 

மல்யுத்த வீரர்களுக்கு சிறந்த பலம் தரும் பழம் அன்னாசி. காரணம், மல்யுத்தத்தில் முகத்திற்கு அருகே கண் ஓரத்தில் குத்துப்படும் காயங்களை விரைவில் குணப்படுத்துமாம்.

கண்ணோய் வராமல் காக்க

வைட்டமின் பி1 (தையாமின்) மற்றும் மாங்கனிசு அன்னாசியில் அதிகம் இருப்பதால் கண்ணுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. வயதாவதினால் ஏற்படும் கண் சம்பந்தப்பட்ட வியாதிகளை இப்பழத்தை உண்பதால் தடுக்க முடியும். 

தைராய்டு சுரப்பி வீக்கம் அதாவது எணிடிtஞுணூ போன்ற நோய் வராமல் அன்னாசிப்பழம் நம்மைப் பாதுகாக்கும்.

அஜீரணக் கோளாறு நீங்க

சிலருக்கு நாட்பட்ட அஜீரணம், ஏப்பம், சாப்பிட்டவுடன் வயிறு மேலெழும்பி வலித்தல், விக்கல் போன்ற தொல்லைகள் இருக்கும். இவர்கள் அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்த தொல்லைகள் அனைத்தும் தீரும்.

சுவாசப் பையில் ஏற்படும் அழற்சி நோய் அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் குறைகிறது என்று தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அன்னாசியில் உள்ள கால்சியம், மாங்கனிசு, வைட்டமின் சி பொருட்களால் வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு பலம் இழப்பதைத் தடுக்க முடியும். எலும்புகள் வலுப்பெற உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க


வைட்டமின் சி மற்றும் “ஆன்டி ஆக்சிடண்ட்” அதிகளவில் அன்னாசியில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சாதாரண இருமல், சளி போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

குடல் புழுக்கள் நீங்க


குடல் புழுக்களை அழிக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. இதனால் அன்னாசி கிடைக்கும் காலங்களில் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுத்து வந்தால் குடல் புழுக்கள் அழிந்து பிள்ளைகள் நன்கு பசியெடுத்து சாப்பிட முடியும். மேலும், உண்ட உணவின் சத்துக்களும் தங்குதடையின்றி உடலில் சேரும்.

மலச்சிக்கல் நீங்க


உடலில் தோன்றும் வியாதிகளுக்கு முழுமுதற் காரணமான மலச்சிக்கல் அன்னாசி சாப்பிட்டால் உடனே நீங்கும். 


நோயில்லாத வாழ்வு வாழ அன்னாசிப் பழத்தை உண்டு அதன் பலன் முழுவதையும் அனுபவிப்போம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...