Sunday, September 28, 2014

அனாதையான தமிழகம்


ஜெயலலிதா அம்மையார் அவர்கள்.

ஆளுமைக்கும், பெண்மைக்கும், அதிகாரத்திற்கும்
பாருக்கே எடுத்துக்காட்டாய் விளங்கிய - அம்மா
இன்று சிறையினுள்ளே...

குடும்பத்தின் பிற குழந்தைகளனைத்தும் நோஞ்சானாய் இருக்க
தமிழகம் எனும் குழந்தையை அன்பூட்டி வளர்த்த - அம்மா
இன்று சிறையினுள்ளே...

நேற்று வரை பதிவியேற்ப்பு விழாவிற்கு மட்டுமே
தலைகாட்டிக் கொண்டிருந்த ஆளுனர் இன்று
ஆட்சி செய்கிறார் அதிகாரம் செய்கிறார்...

அண்ணா, காமராஜர், ராஜாஜி ஆண்ட தமிழகம் இன்று
ஆள ஆளில்லாமல் அனாதையாய் நிற்கிறது...

குற்றத்திற்கு எதிரான தீர்ப்பு என்றபோதிலும் - அது
தனி ஒரு பெண்ணிற்கு எதிரான தீர்ப்பு என்பதால் - அதை
ஏற்க மறுக்கிறது மனம்  - ஜீரணிக்க மறுக்கிறது நெஞ்சம்..
.

காலம் மாறும்..
காட்சிகள் மாறும்..
மீண்டும் வருவீர்கள்..
மீண்டு வருவீர்கள்..
ஜெயலலிதா அம்மையார் அவர்கள்
 
 
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் ஜனாதிபதிக்கு கருணாநிதி கடிதம்


பிறக்கும் குழந்தைக்குக் கூட யாரும் கருணாநிதி என்று பெயர்வைக்கக் கூசும் அளவிற்கு நாறிக் கிடக்கிறதே 'ஊழல் விஞ்ஞானி'யின் பெயர். 

இப்போது உலகத்திலயே மிகவும் மகிழ்ச்சியான மனிதர் என்றால் இவர் தான்... கோபாலபுரத்தில் பார்டி நடந்து இருக்கிறது.. ஆனா அடுத்த அடி இவங்களுக்கு தான்..அதுவரைக்கும் மகிழ்ச்சியாக இருக்கலாம்..  

நீங்க சட்டம் ஒழுங்குன்னு காதை சொறிஞ்சிகிட்டு சொன்னாலும் சரி மூக்கை நோண்டிகிட்டு சொன்னாலும் சரி இங்கே ஒரு பய மதிக்க போறது இல்ல...பின்ன எதுக்கு இந்த scene வீராணம் குடி நீர் விஷயத்தில் தண்டனை பெற்றிருக்க வேண்டும். கிழவர் தப்பித்து கொண்டு விட்டார். எப்படி? சர்க்காரியா கமிஷன் சொன்ன நல்ல விஷயங்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டன. 

அம்மா அவர்கள் திரும்ப வரும் வரையில் நான் பதவியில் இருக்கின்றேன்..அம்மா வந்ததும் திரும்ப தந்துவிடுகின்றேன் என்று இன்னமும் சொல்லாமல் இருக்கின்றாரே. ஆச்சர்யம்தான். இவரது இந்த அறிக்கையின் சாராம்சமானது...ஆட்சியை கலைத்து விடுங்கள்..அராஜகம் நடக்கின்றது என்பதுதானாக இருக்கும். திமுகவினருக்கு அதிமுக கரைவேஷ்டி கொடுத்து பஸ்ஸை தீவைத்து கொளுத்துவது போன்ற அடாவடி செயல்களை செய்ய ஏற்ப்பாடு செய்துவிட்டுத்தான் இந்த அறிக்கையையே கொடுத்துள்ளார். இவரோ அல்லது இவரை நம்பும் எதிர் கட்சியினரோ அரசியலில் எந்த ஓர் மாற்றத்தையுமே கொண்டுவந்திடவே முடியாது. வெத்து அறிக்கை..வீண் முயற்சி..  

முரசொலி மாறனுக்கு கல்லூரியில் படிக்க பணம் இல்லையென்ற வுடன் பதை பதைத்து பணம் கட்டி படிக்க வைத்த பொன்மன செம்மலின் வாரிசை சிறைக்கு அனுப்பி பெருந்தகை புரிந்த தாத்தா வாழிய வாழியவே. எங்கள் தங்கம் படத்தில் இலவசமாக நடித்து கொடுத்து கடனுக்கு இருந்த கோபாலபுரம் வீட்டை மீட்டு கொடுத்த பொன்மன செல்வியை சிறை கம்பி எண்ண வைத்த கோபாலபுரம் கோமானே வாழிய வாழியவே. கனிமொழி பற்றி கடும் வார்த்தை சொல்லாது பண்பாடு காத்த மகராசியை சிறைவாசியாக்கிய குறளோவியம் வாழிய வாழியவே. வீழ்வது எம்மினமாக இருப்பினும் வாழ்வது உம்மினமாக இருக்கட்டும். 

கருணாநிதி ஆட்சி செய்த காலத்தில் சட்டம் ஒழுங்கு தவுடுபோடி .இப்ப அரசை கலைபதற்கு முயற்சி செய்கிறார் .கருணாநிதி யின் குடும்ப சொத்து ஜெயாவைவிட 1000 மடங்கு .உலகம் எல்லா இடத்திலும் சொத்து .பூட்டப் பிள்ளைகள் வரை சொத்து பிரித்து வைத்திருக்கிறார் இந்த ஊழல் வாதி .கருணாநிதியும் குடும்பமும் ஊழல் புரிந்து இருக்கிறது .அடுத்த முறை சிறைக்கு கருணாநிதி குடும்பம் சிறை செல்லும்.  oh ..குடும்பமே உள்ளே போகுமா...sooooopper... 

சந்துல சிந்து பாடலாம்னு நீங்க நெனக்கிறது எங்களுக்கு புரியுது....ஆனா அந்த 1.72 லட்சம் கோடிகள் மாதிரி ஒரு மெகா size ஆப்பை சீவி தமிழக மக்கள் உங்களுக்கு வைக்க காத்து கொண்டு இருக்கிறார்கள்... 

No comments:

Post a Comment