Tuesday, September 23, 2014

பாஸ்ட் புட் எச்சரிக்கை


பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட பாஸ்ட் புட்  எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில்
 பாதிப்பு ஏற்படும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று ஆய்வு எச்சரித்துள்ளது.


டிரான்ஸ் பேட் கொழுப்பு: தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் பேட் போதுமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் பேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு எச்சரிக்கை: இதேபோல் ஜங்க் புட் அதிகம் உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சரிவிகித உணவு உட்கொள்ளும் குழந்தைகளை விட ஜங்க் புட் உட்கொள்ளும் குழந்தைகளில் மூளை வளர்சி விகிதம் பாதிக்கும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் 14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனிகள், பாக்கெட் சிப்ஸ் போன்றவைகளை வழங்குவதை தவிர்த்து காய்கறிகள், பழங்கள், சத்தான பயறுவகைகளை உணவாக வழங்கவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...