Wednesday, September 24, 2014

விஜய் அவார்ட்ஸில் விஜய்க்கு விருது வழங்கியதில் நடந்த தில்லுமுல்லுகள்





விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.


" தேசிய விருது என்பது ஜனாதிபதி விருது
   விஜய் டிவி விருது என்பது ஜனங்களின் விருது "

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருது பெற்ற போது கவிஞர் வைரமுத்து கூறிய கவிதை இது. ஆனால் அது போல் நடப்பது உண்மை தானா என சந்தேகம் எழுந்து உள்ளது. வைரமுத்து கூறியது போல் இதனை ஜனங்களின் விருது என்றே எடுத்துக்கொள்வோம். அப்படியானால் இந்த விருதை தேர்தெடுப்பதில் முக்கிய பங்கு மக்களுக்கு தானே இருக்க வேண்டும். ஆனால் மக்கள் தேர்ந்தெடுப்பதற்கு என 5 விருதுகள் தான தரப்பட்டுள்ளன.

அவை மக்களை கவர்ந்த நாயகன், நாயகி, படம் ,இயக்குனர், பாடல் என இந்த 5 நபர்களை தேந்தெடுக்கும் உரிமை தான் மக்களிடம் உள்ளது. மீதி எல்லாம் அவர்கள் வைத்து உள்ள ஜூரிகள் தேர்தெடுப்பார்கள். ஆனால் மக்கள் தேர்தெடுப்பதில் பல தில்லுமுல்லுகள் நடப்பது தெரிய வந்து உள்ளது.இந்த முறை மக்களுக்கு பிடித்த நாயகன் விருது இளைய தளபதி விஜய்க்கு சென்றது. ஆனால் இது மக்கள் தேர்ந்தெடுத்த விருதா அல்லது விஜய் டிவி தேர்தெடுத்த விருதா என்பதில் சந்தேகம் எழுந்து உள்ளது.

இந்த விருது விஜய்யிடம் கொடுக்கப்பட்ட போது விஜய் சில வார்த்தைகள் பேசினார். அப்போது மேடையில் கோபி விஜய்யிடம் ஒரு மாதத்திற்கு முன்பு விஜய் டிவி இயக்குனர் மகேந்திரன் சார் உங்களை அழைத்தபோது நீங்கள் வரமுடியாது போல சொன்னீங்களாமே ஏன் ? அதற்கு நம் விஜய் சொல்வாரு ஆமாம் முதல்ல வரலைனு சொன்னேன் அப்பறம் அவர் தலைவா படத்துக்காக விருது தரோம்னு சொன்னாரு . ஒரு வெற்றி படத்துக்கு என்ன அழைத்து இருந்தால் கூட பரவாயில்லை ஆனால் சூழ்நிலைகளால்  வெற்றி பெறாத ஒரு படத்துக்கு விருது தருகிறோம் என அழைத்தது அவரை கவர்ந்தது. அதனால் வந்ததாக கூறினார்.




இந்த விருது வழங்கும் விழா நடந்தது ஜுலை 5 ஆம் தேதி , விஜய்யை அழைத்தது ஒரு மாதத்துக்கு முன்பு. ஆனால் இந்த மக்களுக்கு பிடித்த நாயகனை தேர்தெடுக்கும் வோட்டிங் ஜுன் 27 முதல் தான் தொடங்கியது. அதாவது ஒரு விருதை தேர்ந்தெடுத்து விட்டு வெறும் கண்துடைப்புக்காக இந்த வோட்டிங்கை நடத்தி உள்ளார்கள் என்று விஜய் டிவி மீது குற்றச்சாட்டு உள்ளது.

அப்புறம் என்ன இதுக்கு வோட்டிங் நடத்தினீர்கள் ??

சொல்லுங்கள் விஜய் டிவி சொல்லுங்கள் ??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...