Friday, September 19, 2014

அம்மா உணவகத்துக்கு ஆந்திர அமைச்சர் குழு பாராட்டு

சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை ஆந்திர அமைச்சர் குழு வெள்ளிக்கிழமை பார்வையிட்டது. அம்மா உணவகம் செயல்படும் விதம் குறித்து அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். ஆந்திர மாநில விலைக்கட்டுப்பாடு, உணவு, நுகர்பொருள் வழங்கல்துறை அமைச்சர் பரிட்டாலா சுனிதா, நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பி.நாராயணா, வேளாண்மைத் துறை அமைச்சர் பிரத்திபட்டி புல்லா ராவ் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள அம்மா உணவகத்தைப் பார்வையிட்டனர். அங்கு வழங்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டு, அவை தரமாகவும் சுவையாகவும் இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், அம்மா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் அங்கு வழங்கப்படும் உணவுகளின் தரம், சுவை, சுகாதாரம் குறித்து ஆந்திர அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் விலை குறைவாகவும், சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கிறது. 
ஏழை மக்கள் மட்டுமன்றி, அனைத்துப் பிரிவினர்களும் இந்த உணவகத்தில் சாப்பிடுவதைக் காண முடிந்தது. விரைவில் தங்களது மாநிலத்திலும் முக்கியமான மாநகராட்சிகளில் இதுபோன்ற மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் ஆந்திர அமைச்சர்கள் தெரிவித்தனர்.


பின்னர் இந்தக் குழுவினர் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோரைச் சந்தித்தனர். அப்போது அம்மா உணவகம் செயல்படும்விதம் குறித்து ஆந்திர குழுவினருக்கு ஆணையர் விளக்கினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...