Thursday, September 25, 2014

பாங்க் ஆஃப்இந்தியா வங்கியில் ஃபிக்சட் டெபாசிட்டுகளில் மோசடி செய்கிறார்களா?

இது ஒரு சொந்த அனுபவம்.மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்று இதனை எழுதுகிறேன்.இதற்கும் பங்குச்சந்தைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.பாங்க் ஆஃப் இந்தியாவின் ஒரு கிளையில் இரண்டு பிக்சட் டெபாசிட்டுகளை குறுகிய கால டெபாசிட்டாக போட்டு வைத்திருந்தேன்.அவை இரண்டும் இந்த மாதம் 23ம் தேதி முதிர்வடைகிறது என்பதால் வங்கியின் கிளைக்கு நேரில் சென்று டெபாசிட்டுகளை கவனிக்கும் அலுவலரிடம் பணத்தை எனது வங்கி சேமிப்புக் கணக்கில் மறுநாள் போட்டு விடும்படி சொல்லி அந்த டெபாசிட் சர்ட்டிபிகேட்டுகளின் பின்புறம் 'இந்த டெபாசிட்டை குளோஸ் செய்து முதிர்வடைந்த பணத்தை எனது .....என்ற சேமிப்புக் கணக்கில் சேர்ப்பித்து விடுங்க்ள' என்று எழுதி கையொப்பமிட்டு கொடுத்து விட்டு வந்து விட்டேன்.
 மறுநாள் பணம் எனது வங்கிக் கணக்கிற்கு வந்தபாடில்லை.
 நேரில் வேறு ஒரு விஷயத்திற்காக அதே வங்கியில் எனது அக்கவூன்ட்டிற்கு பணம் எடுப்பதற்காக சென்றால் அந்த டெபாசிட் அலுவரை அங்கே காணவில்லை.எனக்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.
 அங்கேயூள்ள மற்ற யாராவது ஒருவரிடம் என்ன ஆச்சு என்று கேட்டிருக்கலாம்தான்.
 ஆனால் அவர்கள் மிரட்டலாக ஒரு பெரிய பலகையை அங்கே வைத்திருந்தார்கள்.அதில்-
 "வங்கியில் பணியாற்றுபவர்களிடம் வாடிக்கையாளர்கள் யாராவது அதிகமாக பேசினாலோ வம்பிழுத்தாலோ அந்த வாடிக்கையாளர்களை உடனே இரண்டு ஆண்டுகள் ஜாமீனில் வரமுடியாதபடி சிறையில் தள்ளி விடுவோம்" என்று எழுதியிருந்தார்கள்.
 எப்படி இருக்கிறது பாருங்கள்.
 பாங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களை நடத்தும் விதம்.
 இது குறித்து ஒரு முன் அனுபவமும் இருக்கிறது.
 இரண்டு ஆண்டுகள் முன்பாக இதே பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளைக்கு சென்று எனது அக்கவூன்ட்டிலிருந்து பணம் எடுக்கச் சென்ற போது அவர்கள் சொன்னது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
 பெரிய தொகையாக பணம் எடுக்க வேண்டுமென்றால் காலையிலேயே நேரில் வந்து அந்த கவூன்ட்டரில் இருக்கும் கேஷியரிடம் 'அய்யா எனக்கு இன்றைக்கு பணம் வேண்டும்" என்று தெரிவித்து விட்டால் அவர் பணத்திற்கு "ஏற்பாடு" செய்து வைத்திருப்பாராம்.மதியத்திற்கு மேல் போய் பணத்தை வாங்கிக்கொள்ள வேண்டுமாம்.
 இதென்ன புதிதாக இருக்கிறதே என்று ஒரு வார்த்தைதான் சொன்னேன்.உடனே அந்த வங்கியின் அப்போதைய மேனேஜர் நான் அந்த கவூன்ட்டரில் உள்ள நபரை "ஜாதிப்பெயரைச் சொல்லி" திட்டினேன் என்று போலீசில் பொய்ப்புகார் கொடுத்து ஸ்டேஷனில் கொண்டு போய் உட்கார வைத்து விட்டு வில்லத்தனமாக மிரட்டினார்.அப்போது ஆபத்பாந்தவனாக பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் கோயமுத்துரரிலிருந்து ஓடி வந்து என்னை போலீஸ் ஸ்டேஷனிலிருந்தும் பொய்ப்புகாரில் இருந்தும் காப்பாற்றினார்.
 அது போல இப்போதும் செய்து விடுவார்களோ என்று பேசாமல் திரும்பி வந்து நெட் பாங்க்கிங்கில் எனது டெபாசிட் கணக்கைப் பார்த்தால் இன்னொரு அதிர்ச்சி.
 என்னைக் கேட்காமலேயே என் பெயரில் அவர்களாகவே இரண்டு புதிய டெபாசிட்களை துவக்கியிருக்கிறார்கள்.அதன் முதிர்வூ தேதி 30.09.2014 என்றிருந்தது.அதற்கு வட்டியூம் கிடையாது.
 இதென்ன கலாட்டா என்று பேசாமல் போங்கப்பா என்று பாங்க்கிங் ஓபுட்ஸ்மனுக்கும் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கோயமுத்துரர் ஸோனல் அலுவலகத்திற்கும் புகார் தந்து விட்டேன்.
 அதன்பின் இரவூ அந்த டெபாசிட் அலுவலர் தொடர்பு கொண்டு தொலைபேசியில் புத்திசாலித்தனமாகப் பேசினார்.
"அதான் உங்க பணத்தை காலைலயிலேயே சேமிப்புக் கணக்கில் போட்டாச்சே.அப்புறம் என்ன"
 எத்தனை மணிக்கு போட்டீர்கள் என்றதற்கு காலையில் என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.நெட் பாங்க்கிங்கில் ஸ்கீரீன் ஷரட் எடுத்து வைத்திருக்கிறேன்.மதியம் 3.30 வரை பணம் அக்கவூன்ட்டில் போடப்படவில்லை என்றதும் வழிசலுடன் சாரி சார் சாயந்தரம் நானே வந்து பணத்தை உங்க அக்கவூன்ட்ல போட்டுட்டேன் என்றார்.
 அதன்பின் நெட்பாங்கிங் வழியாகச் சென்று பார்த்தால் இன்னொரு அதிர்ச்சி.
 ஒரு டெபாசிட்டிற்கு 6 சதவீத பணத்தை அபராதமாக பிடித்துக் கொண்டு மீதிப் பணத்தை மட்டுமே எனது சேமிப்புக் கணக்கில் போட்டிருக்கிறார்கள்.
 முதலில் எனது டெபாசிட் பணத்தை கையாடல் செய்து விட்டார்கள்.அதன்பின் அவர்களாகவே (செப்டம்பர் 30ல் அரையாண்டு கணக்கு வருகிறது என்பதற்காக டார்கெட் காட்டுவதற்காக செய்தார்களோ என்று நமக்கு தெரியாது) புதிதாக எனது கையெழுத்தின்றி விண்ணப்பம் இன்றி புதிதாக இரண்டு டெபாசிட்டுகளை ஒரு வார காலத்திற்கு போட்டுக் கொண்டு விட்டு அதனை நான் விழித்துக் கொண்டவூடன் கேன்சல் செய்து விட்டு அப்படி கேன்சல் செய்ததற்கு அபாரதத்தையூம் பிடித்துக் கொண்டு மீதியூள்ள பணத்தை மட்டுமே அக்கவூன்ட்டில் போட்டிருக்கிறார்கள்.
 பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கிளைகளில் நீங்கள் ஏதாவது டெபாசிட் போட்டு வைத்திருந்தால் உஷராக இருங்கள்.அது மட்டுமல்லாமல் உங்களது சேமிப்புக் கணக்கில் அதிக அளவில் பணத்தை போட்டு வைத்து விட்டு அது பாட்டுக்கு கிடக்கட்டும் என்று போட்டு வைத்திருந்தால் திடீர் திடீரென பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்று எடுத்து மறுபடி போட்டு விடுங்கள்.இல்லையென்றால் சும்மா கிடக்கிற பணம்தானே என்று ஏதாவது செய்தாலும் செய்து விட வாய்ப்பிருக்கிறது.
 அந்த அளவிற்கு பாங்க் ஆஃப் இந்தியா நம்பகத் தன்மையை இழந்து வருவதோடு வாடிக்கையாளர்களை கேணையர்களாகவூம் கேவலமாகவூம் நடத்திக் கொண்டிருக்கிறது.


நன்றி: A/c holder's name : T.A.Vijey

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...