Tuesday, September 30, 2014

லேப்டாப் பேட்டரியின் சார்ஜை நீட்டிக்கும் எளிய வழிமுறைகள்

லேப்டாப் பயன்படுத்துறாங்களா, உங்க லேப்டாப்ல அடிக்கடி சார்ஜ் இறங்கிடுதா, உங்களுக்கு உபயோகமான சில பேட்டரி டிப்ஸை பார்க்கலாமா. புதுசா லேப்டாப் வாங்கியிருக்கீங்களா அதன் பேட்டரியை பராமரிக்கும் சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம் .
1. கூல் : உங்க லேப்டாபிற்கு சரியான கூலிங் பேடை பயன்படுத்துங்கள், இது லாப்டாப்பை சூடாகாமல் பாதுகாக்கும்.
2. பேட்டரி தூசி : அவ்வப்போது பேட்டரியை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்

3. ரெஸ்ட் :  லேப்டாப்பை எப்பவும் ஏசி அறையில் பயன்படுத்தினால் சரியான இடைவெளியில் பேட்டரியை கழற்றி அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

4. சுத்தம் : உங்க லேப்டாப் மற்றும் அதை பயன்படுத்தும் அறையை எப்பவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

5. ஸ்கிரீன் : உங்க லேப்டாப் ஸ்கிரீன் அதிக பேட்டரியை பயன்படுத்தும் அதனால் டிஸ்ப்ளே ப்ரைட்னெஸ்ஸை குறைவாக வைத்து பயன்படுத்துங்கள்
6. ஹார்டுவேர் : இன்டெர்நெட்டை பயன்படுத்தாத சமயத்தில் வைபை ரிசீவரை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடுங்கள்.
7. பணி : லேப்டாப்பில் எப்பவும் குறைவான அப்ளிகேஷனை மட்டும் பயன்படுத்துங்கள், இது உங்க லேப்டாப்பின் பேட்டரியை குறைவாகவே பயன்படுத்தும்
 
8. மல்டிமீடியா : மியுசிக் ப்ளேயரை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள் அல்லது மியுசிக் சிஸ்டத்தின் சத்தத்தை குறைவாக வைத்து கொள்ளுங்கள்
9. பவர் சேவர் : உங்க லேப்டாப்பில் இருக்கும் குறைந்த பவர் யூஸேஜ் ஆப்ஷனை பயன்படுத்துங்கள். இது லேப்டாப்பின் பேக்லைட்டை குறைத்துவிடும்

 இவ்வாறாக பயன்படுத்தி லேப்டாப் பேட்டரியின் சார்ஜை நீட்டிக்கச் செய்யலாம் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...