இந்த தலைப்பு பயன்படுத்தக்கூடாதது தான். ஆனால் இந்த பிரச்சனை பலரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக பயன்படுத்தி உள்ளேன்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கேலிகூத்தாக்கி உள்ளார் நீதிபதி குன்கா. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்துள்ளார். சாமான்யனுக்கு கூட தெரியும் சட்டம் குன்காவுக்கும் தெரியவில்லை, கவர்னர் ரோசையாவுக்கும் தெரியவில்லை. இவர்கள் எல்லாம் எதற்காக இந்த பதவியில் இருக்கிறார்கள்?
கவர்னரால் பதவிப்பிரமானம் செய்து வைக்கப்பட்ட அமைச்சரவையை கலைக்க குன்காவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? முதலமைச்சரை ஒரு கீழமை நீதிமன்ற நீதிபதி கைது செய்ய முடியும் என்றால் கவர்னர் எதற்கு? தன்னால் பதவி பிரமாணம் செய்துவைத்த முதல் அமைச்சரை கைது செய்த நீதிபதியை கண்டித்து, கைது நடவடிக்கையை ரத்து செய்திருக்க வேண்டும் தமிழக ஆளுனர். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவரும் ஒரு பொம்மை போலவே செயல்பட்டு விட்டார். இவர் கவர்னர் பதவிக்கே தகுதி அற்றவர் என்பது எனது கருத்து.
இது மக்களாட்சி நடைபெரும் நாடு. இங்கு நீதிபதிகள் உச்ச அதிகாரிகள் அல்ல.செயலலிதாவுக்கு தண்டனை விதித்ததை குற்றம் சொல்லவில்லை. கைது செய்த முறையை தான் குற்றம் சொல்கிறோம். 4 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் செயலலிதா முதல்வர் பதவி வகிக்கும் தகுதியை இழக்கிறார். எனவே அவரது பதவியை பறிக்க வேண்டும் என கவர்னருக்கு பரிந்துரை செய்திருக்க வேண்டும். அதுதான் முறை. கவர்னர் தான் செயலலிதாவை பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும். பின்னர் ஒரு சாதாரண குடிமகனாக செயலலிதாவை சிறையில் அடைத்திருக்க வேண்டும். இது தான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம்.
ஆனால் நீதிபதி தானே கவர்னரின் அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். கீழ்தரமான சர்வாதிகாரி போல குன்கா செயல்பட்டிருக்கிறார். இதனால் தமிழக அரசு உடனடியாக செயல் இழந்தது. இது எவ்வளவு பெரிய இழுக்கு என்பதை யோசித்து பாருங்கள். இதே நிலை நாளை இந்திய அரசுக்கும் வராது என்பதற்கு உத்திரவாதம் உண்டா?
பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் ஒரு கீழமை நீதிமன்றம் சிறையில் அடைத்தால் இந்திய அரசு என்னவாவது? உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு என்னவாவது? பிரதமரை பதவி நீக்கம் செய்ய சனாதிபதிக்கு தான் அதிகாரம் இருக்கிறது. அதுபோல முதல் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு தான் அதிகாரம் இருக்கிறது. அல்லாமல் கீழமை நீதிபதிக்கு அல்ல.
சட்டம் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் அப்போது தான் சட்டத்தை பொதுமக்கள் மதிப்பார்கள். மரியாதை இல்லாத சட்டத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். முதல் அமைச்சரை கீழமை நீதிபதி பதவிநீக்கம் செய்யும் சட்டம் மிக தவறானது.
48 மணிநேரம் தமிழக அரசு செயல் இழந்ததற்கு கவர்னர் ரோசையாவே முழுபொறுப்பு, கடமை தவறிய ரோசைய்யாவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதிகார அத்துமீரலில் ஈடுபட்ட நீதிபதி குன்காவை நீதிமன்ற கூண்டில் ஏற்ற வேண்டும். தமிழக முதல் அமைச்சரை உடனடியாக விடுவித்து, முறையாக செயலலிதாவை கைது செய்ய வேண்டும்.
சட்ட வல்லுனர்கள் இந்த விடயத்தை ஏன் கவனிக்க தவறுகின்றனர் என்பது புறியவில்ல. தெரிந்தவர்கள் சொல்லுகள்.
No comments:
Post a Comment