Friday, September 26, 2014

ஆஞ்சநேயருக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற‌ சாபம்!, இன்று வரை தொடரும் அதிசயம்- அரிய தகவல்

ஆஞ்சநேயருக்கு உதவிய கருடனும் பல்லியும் பெற்ற‌ சாபம்!, இன்றுவரைதொடரும் அதிசயம்-அரியதகவல்
சில தலங்களுக்கென தனித்துவங்கள் உண்டு. காசிக்கு ஐந்து அதிசயங்களை ச் சொல்வார்கள். காசியில் கருடன் பற ப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை; மாடு முட்டுவதில்லை; பூக்கள் மணப்ப தில்லை; எரிக்கப்படும் பிணங்கள் நாறு வதில்லை.
இந்த அதிசயங்களில் காசியில் கருடன் பறக் காமைக்கும்
பல்லி ஒலிக்காமைக்கும் கார ணமானவர் பைரவர்தான். காசி நக ரைச் சுற்றி 45 மைல் பரப் பளவில் கருடன் பறப்பதில்லை என்கிறா ர்கள்.
இராவணனை வதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்ய நி னைத்தார் இராமபிரான். காசிக் குச் சென்று சிவலிங்கம் ஒன்று கொண்டு வருமாறு அனுமனுக் குக் கட்டளையிட்டார். அனுமன் காசிக்குச் சென்றார். அங்கு எங்குபார்த்தாலும் சிவலிங்கங்கள் இருந்த ன. அந்த லிங்கங்களில் எந்த லிங்கம் சுயம்பு லிங்கம் என்று புரியாமல் தடுமாறினார் அனுமன்.
அந்த நேரத்தில் அவருக்குத் துணை செய்ய நினைத்தார் மகா விஷ் ணு. விஷ்ணுவின் அருளால் அவருடைய வாகனமான கருடன் ஒன்று பறந்து வந்தது.ஒருகுறிப்பிட்ட லிங்கத்துக்கு மேல் வட்டமடித்தது. பல்லியும் அதே நேரத்தில் நல்லுரை சொல்வ துபோல ஒலித்தது.
இந்த இரண்டு குறிப்புகளையும் புரிந்து கொண்ட அனுமன், அந்தலிங்கம்தான் சுயம்பு லிங்கம் என்று உணர்ந்து, அச்சிவலிங்கத்தைப் பெ யர்த்து எடுத்துக் கொண்டு தெற்கு நோக்கிப் பறக்கலானார்.
காசிக்கு காவல் தெய்வம் பைரவர். எட்டு பைரவர்கள் காசி நகரின் எட் டு திசைகளிலிருந்து காவல் செய் வதாக ஐதீகம்.
சிவலிங்கத்துடன் வந்த அனுமனைத் தடுத்த பைரவர், “என்னுடைய அனுமதியில்லாமல் காசியில் இருக்கும் லிங்கத்தை நீ எப்படி பெய ர்த்துச் செல்லலாம்?” என்று கேட்டார்.
அனுமன், பைரவரைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், “என் தெய்வ மான இராமபிரானின் உத்தரவு. அதனால் லிங்கத்தை எடுத்துக் கொண்டு செல் கிறேன் என்று சொன்னார்.
அனுமனின் பதிலில் திருப்தியடையாத பைரவர் அனுமனுடன் சண்டையிட்டா ர். இருவருக்கும் கடும் போர் நடந்தது. வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் அந்தப் போர் அமைந்தது. அவர்கள் இருவரும் சண்டை யிட்டுக் கொள்வதைக் கண்ட முப்பத்து முக் கோடி தேவர்களும் கவலையில் ஆழ் ந்தார்கள். அவர் களுள் சிலர் காசி நக ரைநோக்கி விரைந்தார்கள். கால பை ரவரை வணங்கினார்கள். சுவாமி! உலக நன்மைக்காக இந்த சிவ லிங்கத்தை எடுத்துக்கொண்டு தென்னாடு போக அனுமனுக்கு அனு மதி தரவேண்டும். ஸ்ரீஇராமபிரான் இந்த லிங் கத்துக்குப் பூஜை செய்வதற்காக சேதுவில் காத் திருக்கிறார். எனவே அனுமனை அனும திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கள்.
தேவர்களின்வேண்டுகோளுக்கு இணங்கினார் பைரவர். மனசாந்திஅடைந்தார். சிவலிங்கத்தை க் கொண்டுபோக அனுமதித்தார்.
அனுமனுக்குச்சரியான லிங்கத் தை அடையாளம் காட்டியது கரு டனும் பல்லியும். அனுமனுக்குத் துணைபுரிந்த கருட ன் இனிமேல் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடா து என்றும்; காசியில் பல்லிகள் இருந்தாலும் அவை ஒலிக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார் பைரவர்.
பைரவரின் கட்டளைப்படிதான் காசியில் இன்றும் கருடன் பறப்பதில்லை; பல்லி ஒலிப்பதில்லை என்கி றார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...